வையத் தலைமை கொள்
வையத் தலைமை கொள்
பாரதியாரின் புதிய ஆத்திசூடியில் வரும் ஒரு வரி "வையத்
தலைமைகொள்"
தலைமை பண்பு இருந்தால் மட்டுமே ஒரு சமுதாயத்தை முன்னேற்றத்தை நோக்கி கட்டுக்கோப்பாக அழைத்துச செல்ல முடியும்.
தலைமை சரியாயில்லாதிருந்தால் எந்த அமைப்பும் தனது இலக்கை அடைந்துவிட முடியாது.
"தலைவன் எவ்வழி தொண்டன் அவ்வழி"
முன்னேர் செல்வது போலத்தான் பின்னேர் செல்லும்.
சரியான தலைமை அமைந்தாலொழிய ஒரு கூட்டமோ குழுவோ அமைப்போ சமுதாயமோ எதுவும் வெற்றி பெற இயலாது.
இளைய தலைமுறையை வழி நடத்துவது எளிதான செயலல்ல.
அவர்கள் மனம் கொள்ளும்படி நமது நடவடிக்கைகள் இருந்தால் மட்டும் போதாது.
அவர்கள் எதிர் காலத்திற்கு எது நல்லது?
எந்தப் பாதையில் சென்றால் அவர்கள் இடறல் இல்லாமல் இலக்கைச் சென்றடைய முடியும் என்பதை ஓர்ந்து ஆய்ந்து நல்ல பாதையில் அவர்களை வழிநடத்த ஒரு தலைவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
கண்மூடித்தனமான நம்பிக்கை கடைசிவரை கரை சேர்க்காது.
.
ஒரு தலைவன் உருவாக்கப்படக்கூடாது.
உருவாக வேண்டும்.
அவனுடைய நடவடிக்கைகள்,பண்பு நலன்கள்,கொள்கைகள் போன்றவை
அனைவராலும் ஈர்க்கப்பட்ட வேண்டும்.
தலைமைப்பண்புகளை வளர்த்துக்கொண்டால் தரணியை
உன் வசப்படுத்தலாம்.
துணிவு இருக்க வேண்டும்.
பணிவு இருக்க வேண்டும் .
உன்னை நம்புகிறவர்களுக்கு
உண்மையாக இருக்க வேண்டும் .
இது தலைவனுக்கு மட்டுமல்ல தலைவனாக இருக்க விரும்புகிற
அனைவரிடமும் இருக்க வேண்டும்
வையத் தலைமை கொள் என்று பாரதியார் அவர்பாட்டுக்குச் சொல்லிவிட்டார்.
அனைவரும் தலைமையாகிவிட்டால்
தொண்டனாக இருக்கப்போவது யார் என்ற கேள்வி எழலாம்.
தலைமைப் பண்பு அனைவரிடமும் இருக்க வேண்டும் என்பதுதான் பாரதியின் விருப்பம்.
தலைமைப் பண்பு அடித்தளத்தில் இருந்தே கட்டி எழுப்பப்பட வேண்டும்
அப்போதுதான் கடமை, கண்ணியம்,கட்டுப்பாடு
பேணும் ஒரு கூட்டத்தைக்
உருவாக்க முடியும் .
தலைமைப் பண்பை
பையப்பைய வளர்த்துக்கொள். அது உன்னைக் கட்டுக்கோப்பாக நடக்க வைக்கும். ஒரு நல்ல சமூகத்தை உருவாக்க வைக்கும்.உன்னைச் சுற்றியுள்ளவர்களையும் பொறுப்போடு நடந்து கொள்ள வைக்கும்.உன்னையும் உயர்த்தும்.உன்னைச் சுற்றி உள்ளவர்களும் உயர வழிவகுக்கும்.அதனால்தான்
வையத் தலைமை கொள் என்று
உன்னையும் என்னையும் பார்த்து சொல்கிறார் பாரதி .
“வையத் தலைமை கொள்”..
கருத்துகள்
கருத்துரையிடுக