பணி நிறைவுப் பாராட்டு மடல்
பணி நிறைவுப் பாராட்டு மடல்
கற்றோர்நிறை நாகர்கோவிலில் பிறப்பதிகாரம்
சான்றோர்நிறை செட்டிகுளத்தில்
பெற்றார் குடியுரிமைஅதிகாரம்
மணிராஜா இல்லத்தில் கிடைத்தது வாழ்வதிகாரம் -சித்ரா
பிள்ளை இருவர் பெற்றதால் வந்தது தாயதிகாரம்!
மாநகராட்சித் தமிழ்பள்ளி அளித்தது முதலதிகாரம்
கரும்பலகையில் எழுத்தோடு நடத்தினார் எழுத்ததிகாரம்
சொற்சுவைபட கற்பிப்பதில் கண்டோம் சொல்லதிகாரம் -சித்ரா
உரையிடையிட்ட பேச்சில் மிளிருமே பொருளதிகாரம்!
கட்டமைப்பு திறன் முற்றும் பெற்ற யாப்பதிகாரம்
கலையாய்க் கற்பித்தலால் காணலாம் அணியதிகாரம்
அறிவுப் பசிக்கு அமுதூட்டியதில் வெளிப்பட்டது பொறுப்புதிகாரம்-சித்ரா
அறம்விளை மாணவர் மிகு
விளைச்சலதிகாரம்!
முத்தமிழும் கொஞ்சி விளையாடும் வகுப்பதிகாரம்
செந்தமிழ்ச் சுவை சேர்க்க நாநடத்தும் நாவதிகாரம்
தலைமுறையை காக்கும் காப்பதிகாரம் - சித்ரா
கல்விப் பயிர் வளர்க்க வந்த நீரதிகாரம் !
தொய்வில்லா அறப்பணிக்கு தடையிட வந்தது ஓய்வதிகாரம்
ஓயாது இல்லறப்பணி ஆற்றுக நல்லதிகாரம்
பணி நிறைவுப் பாராட்டு விழா ஒரு நினைவதிகாரம் -சித்ரா
நித்தம் எம்நெஞ்சில் குடியிருக்கும் சிறப்பதிகாரம்!
அன்புடன்,
செல்வபாய் ஜெயராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக