அம்மா எனக்கு வேண்டும்

 அம்மா வேண்டும்


அம்மா உன் அன்பு வேண்டும்

நீ மட்டுமே  எனக்குவேண்டும்

உன் மடியில் தூங்க வேண்டும்

உன்னோடு கதை ஓராயிரம்

பேச வேண்டும்

உன் முகத்தைப் பார்த்து

முழுநேரம் கனவு காண வேண்டும்

உன் மார்பில் சாய வேண்டும்

உன் கையால் என் தலையைக்

கோத வேண்டும்

பெத்தவள் நீ எனக்கு

பேரு சொல்லித் தர வேண்டும்

பொய்யான வார்த்தை பேசி

நெய்ச்சோறு ஊட்ட வேண்டும்

நித்தம் நித்தம் என்னோடு 

நிலவு கதைப் பேச வேண்டும்

சத்தமில்லா முத்தம் தந்து

கன்னத்தை கன்னிட

வைத்தல் வேண்டும்

சோர்ந்து வந்திடும்போதும் 

துயரங்கள் துரத்தும்போதும் 

தோள் சாய்ந்து அழுதிட 

அம்மா நீ

அருகிலேயே இருந்திட வேண்டும்

மலையோரச் சிறு பூவாய்

காடெங்கும் பூத்தவளே !

காடெல்லாம் கால் ஓயாது

காலடி பதித்தவளே !

கடுங்குளிரில் மடையோரம்

மடாதிபதியாய் நின்றவளே!

அரிக்கன் விளக்கேந்திய

ஆவாரங்காட்டு நைட்டிங்கேலே!

விடுமுறை எடுக்கத் தெரியாத

உழைப்பாளி தாயே !

உயிர்களின் தொடக்கம் நீயே!

உணர்வினில் கலந்து எம்

உதிரத்தின் இயக்கமாய் நின்றாயே!

என் மொழி  யாவும்

உன் அருளாலே !

எல்லாம் எனக்கு 

நீ தானே அம்மா!

கிடைக்காத பொருள் அம்மா!

அடைக்காத கதவு அம்மா!

எல்லாம் இருந்தும் அம்மா

நீ இல்லாததால் இப்போது 

ஏழையாய் நிற்கிறேனே சும்மா!




Comments

Popular Posts