பிறந்தநாள் வாழ்த்து

   பிறந்தநாள் வாழ்த்து


சிந்தும் சிரிப்பலையே
முந்தும் மொழியலையே
நடமாடும் பல்கலையே
எழிலாடும் எளிமையே
நற்றிணையே நல்லறிவே
முத்தமிழே முதிர்கனியே
என்னவென்று அழைப்பேன் 
ஏதுசொல்லி அறிமுகம் செய்வேன்
மாநகராட்சியின்  அறிவுப் பெட்டகமே!
உம்மிடம் கற்றதும் 
பெற்றதும் ஏராளம் ஏராளமே!
பேரறிவாட்டிக்கு வாழ்த்துரைக்கும்
பெரும்பேறின்று வாய்த்ததுவே !
 நீலமணி மிடற்று ஒருவன்போல
 மன்னுக பெரும நீ என்ற
வாழ்த்துனக்கு உரித்தானதுவே!
வாழ்க பல்லாண்டு ....பல்லாண்டு
பல்லாயிரம் ஆண்டு...
ராஜேஸ்வரியும் சிரிப்புமாய் இணைந்து !
   

Comments

Popular Posts