கெடுப்பதுஉம் கெட்டார்க்குச் சார்வாய்...
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்....
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை "
குறள் : 15
கெடுப்பதூஉம் - இடர் உண்டாக்குவதும்
கெட்டார்க்கு - துயருற்றவர்க்கு
சார்வாய் - துணையாய்
மற்று - பின்,ஆனால்
ஆங்கே - அதுபோல
எடுப்பதூஉம் - கைதூக்கி விடுவதுவும்
எல்லாம் - அனைத்தும்
மழை - மழையாகும்
பெய்யாமல் வாழ்வை கெடுக்க வல்லது மழை .
அதுபோல இடர்பட்டு நிற்பவர்க்குத் துணையாக
நின்று காத்து நிற்பதும் மழையே ஆகும்.
விளக்கம் :
மழை பெய்யாவிட்டால் ....பசும்புல்
தலை காண்பது அரிது.
மேகமானது தனது நீரை மழையாகப்
பொழிந்திராவிட்டால் ....பெரிய கடலானாலும்
தன் நீர்மையை இழக்க நேரிடும்.
மழை பெய்யாவிட்டால் ...நாட்டில் எந்தவித
விழாக்களும் நடைபெறாது.
மழை பெய்யாதிருந்தால் இடர்பட
நேரிடும்.
அதிக மழைப்பொழிவும் கூட பல நேரங்களில்
தீங்குவிளைவித்து விடுதல் உண்டு.
பல நாட்கள் மழை காணா பூமி.
திடீரென்று மழை பெய்துவிட்டால்....
புல் பூண்டுகள் துளிர்த்து பூமி
பச்சைக் கம்பளம் விரித்து தன்
மகிழ்ச்சியைக் கொண்டாடும்.
வேளாண் நிலங்கள் எல்லாம்
விளைச்சலை அள்ளிக் கொடுத்து
உழவன் முகத்தில் புன்னகை அரும்ப
வைக்கும். நாட்டைச் செழிப்பாக்கி
மக்கள் கையில் பணம் புரள வைத்து
மகிழ்ச்சி அளிப்பதும் மழை.
மழை இல்லாவிட்டால் இடர் ஏற்படும்.
அதே வேளையில் மழை பெய்தால்
இடர் நீங்கி வாழ்வு வளப்படும்
என்கிறார் வள்ளுவர்.
English couplet :
'Tis rain works all:it ruin spreads , then timely aid supplies
As in the happy days before, it bids the ruined rise"
Explanation :
"Rain by its absence ruins men; and by its existence
restores them to fortune "
Transliteration :
"Ketuppaadhooum kettaarkkuch chaarvaaimar Raange
Etuppadhooum Ellaam Mazhai "
Comments
Post a Comment