வானோக்கி வாழும் உலகெல்லாம்...

  வானோக்கி வாழும் உலகெல்லாம்....


வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி "
                                   குறள். :  542
                                   
வான் - மழை
நோக்கி - எதிர்பார்த்து
வாழும் - வாழ்ந்து கொண்டிருக்கும்
உலகு - உலகத்தார்
எல்லாம் - அனைவரும்
மன்னவன் - வேந்தன் ,அரசன்
கோல் - செங்கோல்
நோக்கி - எதிர்பார்த்து, நம்பி
வாழும் - வாழ்ந்து கொண்டிருக்கின்ற
குடி - குடி மக்கள்

                      
 உலகில் உள்ள உயிர்கள் எல்லாம்
மழையை நம்பி உயிர்  வாழ்கின்றன.
அதுபோல குடிமக்கள் எல்லாம்
மன்னனுடைய செங்கோல் வழுவா
ஆட்சியை எதிர் நோக்கியே உயிர்
வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

விளக்கம் : 

நீரின்றி அமையாது இவ்வுலகம் என்று
சொன்ன வள்ளுவர்
மழை இல்லை என்றால் இப்புவியில்
பசும்புல் தலை காண்பதும் அரிதாகிவிடும்
என்றும் சொல்லி மழையே உலக
உயிர்களுக்கு எல்லாம் ஆதாரம்.
எல்லா உயிர்களும் உயிர்வாழ நீராதாரம்
வேண்டும் என்று சொல்லி வைத்தார்.

மழை இல்லாத பூமியை
வானம் பார்த்த பூமி என்கிறோம்.
வானத்தை எதிர்பார்த்து என்று
ஏங்கி காத்துக் கிடக்கும் பூமிதான்
வானம் பார்த்த பூமி.
எவ்வளவுநாள் காய்ந்து கிடந்தாலும்
ஒருதுளி நீர் விழுந்தால் சில்லென்று
சிலிர்த்து எழுந்துவிடும்.

புவியில் உள்ள உயிர்கள் எல்லாம்
மழை வரும். நமக்கு வாழ்வு கிடைக்கும்
என்ற நம்பிக்கையில்தான் நாட்களை
நகர்த்திக் கொண்டிருக்கின்றன. அதுபோல
மன்னன் தமக்கு நல்லாட்சி
தருவான் என்ற நம்பிக்கையில்தான்
குடிமக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறனர்.
உயிர்களுக்கு மழை எவ்வளவு
முக்கியமோ அதுபோல மக்களுக்கு
நல்லாட்சி தரும் மன்னன்
முக்கியமானவன் ஆவான்.

உயிர்வாழ நீர் இன்றியமையாதது.
குடிமக்கள் இனிதே வாழ நல்லாட்சி
நடைபெறுதல் இன்றியமையாதது
என்கிறார் வள்ளுவர்.

English couplet :

"All earth looks up to heave'n whence raindrops fall; 
All subjects look to king that ruleth all"

Explanation :

When there is rain, the living creation thrives, and so
when the king rules justly his subject thrive.

Transliteration : 

"Vaanokki vaazhum ulakellaam mannavan
Kolnokki vaazhung kuti "








Comments

Popular Posts