ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம்....
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம்....
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு "
குறள் : 190
ஏதிலார் - மற்றவர்
குற்றம் - பிழை
போல் - போன்று
தம் - தமது
குற்றம் - பிழை
காண்கிற்பின் - காண்பார்களானால்
தீது - தீமை
உண்டோ - உளதோ
மன்னும் - நிலைபெறுகின்ற
உயிர்க்கு - உயிர்களுக்கு
அயலாருடைய குற்றங்களைக் காண்பதுபோல்
தம் குற்றங்களையும் காணும் பண்பு
கொண்டவராக ஒருவர் இருப்பாரானால்
அவரால் வாழும் உயிர்க்கு எந்தத்
தீங்கும் ஏற்படப் போவதில்லை.
விளக்கம் :
எப்போதுமே நமக்கு ஒரு பழக்கம் உண்டு.
நான் செய்வதுதான் சரி என்று
மனதுக்குள் ஒரு தீர்ப்பு எழுதி வைத்துக்
கொள்வோம். நம்மிலும் குற்றம்
குறைகள் இருக்கலாம்.
தவறுகள் செய்வது மனித இயல்பு.
அதனை ஒத்துக்கொள்ளும் மன பக்குவம்
யாருக்குமே கிடையாது.
அடுத்தவர்கள் செய்கிற எல்லா செயல்களிலும்
குற்றம் கண்டுபிடிப்போம்.
கண்ணுக்குள் விளக்கெண்ணெய்யை
ஊன்றிக்கொண்டு பார்ப்போம்.
உடுக்கும் உடையில் ...பேசும் பேச்சில்...
நடக்கும் நடையில் ....எழுதும் எழுத்தில்...
இப்படி எதிலாவது ஒரு குற்றம்
கண்டுபிடிக்க மெனக்கெடுவோம்.
இப்படி பார்த்துப் பார்த்து குற்றம்
கண்டுபிடிக்கும் நாம் நம்மிலும் குற்றம்
குறைகள் இருக்கும் என்பதை ஒத்துக்
கொண்டே ஆக வேண்டும் என்கிறார்
வள்ளுவர்.
நமது குற்றத்தை ஒத்துக்கொள்ளும் மனபக்குவம்
வந்து விட்டாலே போதும் .
நம்மைப் போன்றுதான் அவர்களும்...
என்ற நினைப்பு வந்துவிடும்.
அதனால் தப்பு செய்து விட்டான்...தப்பு செய்து
விட்டான் என்று பிறரைக் குற்றம்சாட்டி
தரும் தண்டனைகள் குறைந்துவிடும்.
அதனால்தான் பிறர் குற்றத்தைப்போல்
தன் குற்றத்தையும் பார்க்கும் பண்பு
வந்துவிட்டால் உலகில் வாழும் உயிர்களுக்கு
எந்த தீங்கும் ஏற்படுவதில்லை என்கிறார்
வள்ளுவர்.
English couplet :
If each his own ,as neighbour's faults would scan ,
Could any evil happy to living man?
Explanation :
If they observed their own faults as they observe the faults
Of others, would any evil happen to men?
Transliteration :
"Edhilaar kutrampol thangutrang kaankirpin
Theedhunto mannum uyirkku "
Comments
Post a Comment