உரனசைஇ உள்ளம் துணையாக....

உரன்நசைஇ உள்ளம் துணையாக...

உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ   இன்னும் உளேன் "

                         குறள் : 1263

உரன் - வெல்லுதல்
நசைஇ - விரும்பி
உள்ளம் - ஊக்கம்
துணையாக - உதவியாக
சென்றார் - போனவர்
வரல் - திரும்பி வரல்
நசைஇ - ஆசை கொண்டு, விரும்பி
இன்னும் - இதுவரை
உளேன் - உயிரோடிருக்கிறேன்

வெற்றியை விரும்பி ஊக்கத்தோடு  சென்ற 
தலைவன் வருவதைக் காண விரும்பியே 
நான் உயிரோடு இருந்து கொண்டிருக்கிறேன்.

விளக்கம் : 

தலைவன் தலைவியிடமிருந்து 
பிரிந்து செல்கின்றான்.
செல்லும்போது கண்டிப்பாக நான்
வெற்றியோடு திரும்பி வருவேன்
என்று வாக்குறுதி கொடுத்துவிட்டுச்
செல்கிறான்.
தலைவி  தலைவனைப் பிரிந்து
இருக்க முடியாமல் தவிக்கிறாள்.

இப்போது தன் தோழியிடம் பிரிவுத்
துயரைச் சொல்லிச் சொல்லி 
புலம்புகிறாள்.
நான் உயிரை விட்டுவிடுவேன்.
ஆனால் எதற்காக உயிர் வாழ்கிறேன்
தெரியுமா ?என்று தோழியிடம் கேட்கிறாள்.

"தெரியாது. நீ சொன்னால்தானே
தெரியும்" என்கிறாள் தோழி.

"என் தலைவன் வெற்றி வாகை
சூடி வருவான். அதனைப் பார்த்து
மகிழ விரும்பியே  நான் உயிரோடு
இருக்கிறேன் "என்று தான் உயிரோடு
இருப்பதற்கான காரணம் தலைவன்தான்
என்பதைக் கூறுகிறாள் தலைவி.


வெற்றியோடு திரும்பும் தலைவன்
கண்டு மகிழ தான் உயிரோடு
வாழ்ந்தே ஆக வேண்டும்
என்று பிடிவாதமாக வாழ்ந்து
கொண்டிருக்கும் தலைவியை நம்
கண்முன் கொண்டு வந்து
நிறுத்தி,பிரிவிலும் காதல்
எப்படி வாழ்கிறது என்பதை அழகாகப்
படம்பிடித்துக் காட்டியுள்ளார் வள்ளுவர்.


English couplet: 

"On victory intent, his mind sole company he went; 
And yet life sustain!And long to see his face again"

Explanation : 

"Still live by longing for the arrival of him
who has gone out of love for victory  and
With valour as his guide. "

Transliteration :

"Urannasaii Ullam Thunaiyaakach chendraar
Varalnasaii Innum Ulen "

Comments

Popular Posts