அறிவினான் ஆகுவ துண்டோ....

"அறிவினான்  ஆகுவ துண்டோ  பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை "
                          குறள் :   315

அறிவினான் - அறிவினால்
ஆகுவது - ஆகும் செயல்
உண்டோ - உளதோ
பிறிதின் - மற்றவருடைய
நோய் - துன்பம்
தம் - தமது
நோய் - துயரம் ,இன்னல்
போல் - போன்று
போற்றாக்கடை - கருதப்படாவிடத்து

பிறர் உயிர்கள் படும் துன்பத்தைத்
தன் துன்பம் போன்று கருதும்
பண்பு இல்லாவிட்டால் பெற்ற அறிவினால்
ஏதேனும் பயன் உண்டோ?


விளக்கம் : 

அறிவு என்பது யாது என்பதற்கு
அருமையான விளக்கம் தரப்பட்ட
குறள்.

ஏராளமாக புத்தகங்கள் படிப்பவரை
அறிவாளி என்போம். நிறைய பட்டங்கள்
வாங்கி வைத்திருப்பவரை என்னே
அறிவு ! அதனால்தான் இத்தனை 
பட்டங்கள் வாங்கி வைத்திருக்கிறார்
என்று வியந்து போவோம்.

ஆனால் இது எல்லாம் அறிவு
இல்லைங்க. அறிவுக்கு இலக்கணம்
நான் வகுத்திருக்கிறேன் கேளுங்கள்
என்கிறார் வள்ளுவர்.

ஒருவன் படுகிற துன்பத்தைப் பார்த்து
சும்மா இருக்காமல் 
உடனே ஓடிச்சென்று உதவும்
பண்பு இருக்க வேண்டும்.
பிறருக்கு வந்த துன்பத்தைத்
தனக்கு வந்த துயரென
கருதி அத்துன்பத்தைப் போக்க
முனைபவன்தான் அறிவாளி.

எந்த உயிரும் துன்பப்பட
அனுமதிக்கக் கூடாது.
நமக்கென்ன ஆயிற்று என்று
விலகிச் செல்பவன் அறிவில்லாதவன்.
அவன் எத்தனை பட்டங்கள் வாங்கி
வைத்திருந்தாலும் அவன் அறிவில்லாதவனாகத்தான்
கருதப்படுவான்.

அறிவு என்பது பிறருக்கு
உதவுவதாக இருத்தல் வேண்டும்.

மற்ற உயிர்க்கு நேர்ந்த துன்பத்தை
தமக்கு நேர்ந்த துன்பம் போல் எண்ணி
அவ்வுயிரைக் காப்பாற்றாமல்
விலகிச் செல்லும் நீங்கள்
அந்த உயிரைப் பற்றிய அத்தனை
அறிவையும் பெற்றிருக்கிறேன்
என்று பெருமை பாராட்டுவதில்
என்ன பயன் இருக்கப்போகிறது?
என்று நம்மைப் பார்த்து கேள்வி
எழுப்புகிறார் வள்ளுவர்.

அறிவுடையவர் என்றால் வாடிய
பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடிய வள்ளலாரைப்போல
இருக்க வேண்டும்.
பிற உயிர் மீது அன்பு 
இருக்க வேண்டும்.
அப்படியில்லை  என்றால் நீங்கள் அறிவாளி
என்று சொல்லிக் கொள்வதில் 
அர்த்தமும் இல்லை என்கிறார்
வள்ளுவர்.

பிற உயிர்களின் துன்பத்தைத்
தன் துன்பமாக எண்ணி அதனைக்
களைய முனைபவன் மட்டும்தான் 
அறிவாளி .

English couplet :

From wisdom's vaunted lore what with the learner gain
If as his own he guard not others' souls from pain?

Explanation :

What benefit has he derived from his knowledge
who does not endeavour to keep off pain
from another as much as from himself?

Transliteration :

"Arivinaan Aakuva thundo pridhinnoi
Thannoipol potraak kadai"




Comments

Popular Posts