திருமணநாள் வாழ்த்து

   திருமணநாள் வாழ்த்து


இசைச்சாரலாய் மணநாள் வாழ்த்து
இருவரையும் நனைக்க
பூந்தென்றல் பண்ணலையாய் வந்து
சாமரம் வீசி நிற்க
எழுகதிர் ஒளியலை கொண்டு
வாழ்த்துச் செய்தி வாசித்திருக்க
விழுதாய்ப் பிள்ளைகள் உடன் இருக்க
கொழுநன் ஸ்டீபனோடு எலிசபெத்
முழுதாய் ஐயாறு ஆண்டுக்கு மேல்
பழுதிலா இல்லற இன்பம் கண்டநாள்
பொழுதாறும் பொதுப்பணியாற்றி
விழுதார் மார் சுமக்க
இணைந்தே நல்லறம் தொடர்கவென
தொழுதார்  கரம்கூப்பி வாழ்த்துகிறேன்!

Comments