ஊசிமுறிப் பாடல்கள் என்றால் என்ன

ஊசிமுறிப் பாடல்கள் என்றால் என்ன 


பாடல்களில் எத்தனை வகை தொகை

உள்ளன என்று அலசிப் பார்க்க

அங்கங்கே மெதுவாக எட்டிப் பார்பார்ப்பது உண்டு.

அப்போது கண்ணில் அகப்பட்டது ஒரு ஊசி முறிப்பாடல்.

அது என்ன ஊசிமுறிப் பாடல்?.


ஊசி என்பது எழுத்தாணி.

முறி என்பது  வளையும் ஓலை.


எழுத்தாணியால் ஓலையில் எழுத முடியாத ஒலி ‘ஊசிமுறி’  எனப்படும்.


ஒரு பாடலை எழுதிக்கொண்டே வரும்போது எழுத்தால் வரிவடிவம் கொடுக்க முடியாதபோது பாடலை அந்த இடத்தில் நிறுத்திவிட்டு,

அதன் பின்னர்  தொடர்ந்து பாடலை 

எழுதி முடித்து விடுவராம்.

இப்படி எழுதப்படும் பாடல்கள் ஊசிமுறி பாடல்கள்.

இந்தவகைப் பாடல்களுக்கு என்று தனி இலக்கணம் கிடையாது.


ஆற்றங்கரையின் அருகில் ஒரு மாமரம் இருந்தது. 

அதில் சில காக்கைகள் அமர்ந்திருந்தன. 

வையக்கோனார் என்பவரின் மகன் அந்தக் காக்கைகளைத் துரத்த நினைத்தான்.

 ஆனால் அவன் கையில் கம்பு இல்லை. எப்படித் துரத்துவது?

எனவே " ----" என்று ஒலி எழுப்பி

காக்கைகளைத் துரத்துகிறான்.


அவன் எழுப்பிய ஒலியை எழுத முடியவில்லை.இந்த இடத்தில் ஒலிக்கு வரிவடிவம் கொடுக்கப்படாமல் நிறுத்திவிட்டு மறுபடியும் தொடர்ந்து பாடல் எழுதி முடிக்கப் பட்டிருக்கிறது.

இப்படி எழுதப்படுவது ஊசிமுறிப் பாடல்கள்.


எழுதிக்கொண்டே வரும்போது எழுத்தாணி முறிந்து போனால் பாடல் எழுத முடியாதபடி தடைபட்டுப் போகும்.

அப்படி தடைபடுவதைத்தான் ஊசிமுறி

என்று சொல்லியிருக்கிறார்கள்.


ஊசிமுறி என்பது காரணப்பெயர் . 



இடைக்காடர்  எழுதிய ஊசிமுறிப் பாடல் உங்களுக்காக...



"ஆற்றங்கரையி னருகிருக்கு மாமரத்திற்

காக்கை யிருந்து கககவெனக்- காக்கைதனை

எய்யக் கோலில்லாமல் 0 0 0 என்றானே

வையக் கோனாரின் மகன். "



Comments