பாய் தூஜ் தீபாவளி

பாய் தூஜ்

பண்டிகைகள் வெறுமனே கொண்டாடி விட்டு கடந்து போவதற்காக கொண்டாடப்படுபவை அல்ல.

எல்லாப் பண்டிகைகளின்  பின்னணியிலும் ஏதாவது ஒரு காரணமும் வரலாறும் இருக்கும்.

அது மக்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கும்.

அந்த வகையில்

பாய்தூஜ் என்பதும்

வடஇந்திய மாநிலங்களில் 

தீபாவளியின் ஐந்தாம் நாள் விமர்சையாகக்

கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும்.


இந்த நாள் சகோதர சகோதரிகளுக்கு இடையிலான அன்பான உறவைக் கொண்டாடும் நாள் ஆகும். சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் நீண்ட ஆயுள் மற்றும் மகிழ்ச்சிக்காக பிரார்த்தனை செய்கிறார்கள், சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்கு பரிசுகளை வழங்குகிறார்கள். 

பாய் தூஜ்  இரண்டு சொற்களால் ஆனது - பாய் என்பது சகோதரரைக் குறிப்பிடும் ஒரு சொல்லாகும்..
 தூஜ் என்ற சொல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நாளான அமாவாசைக்குப் பிறகு வரும் இரண்டாவது நாளைக் குறிக்கிறது. 

இந்தப் பாய் தூஜ்  கொண்டாடுவதன் பின்னணியில் ஒரு புராண கதை இருப்பதாகக் கூறுகின்றனர்.

நரகாசுரன் என்று ஒரு அரக்கன்

இருந்தான்.

அவன் இந்திரலோகத்து மன்னன்

இந்திரனை வென்று சொர்க்கபுரியைக் கைப்பற்றி

கொண்டான்.

அது மட்டுமல்லாமல் அங்கிருந்த பதினாராயிரம்

பெண்களையும் சிறைப்பிடித்துச் சென்றான்.


தேவேந்திரன் தாயான அதிதி அணிந்திருந்த

மந்திரக் கம்மலையும் எடுத்துச் சென்றுவிட்டான்.


இப்போது தேவர்கள் அனைவரும்

தங்களை காக்கும்படி மகா விஷ்ணுவிடம்

ஓடிச் சென்று தஞ்சம் அடைகின்றனர்.


இந்த நரகாசுரனின்  ஆணவத்தை அடக்கி எம்மையும்

மக்களையும் காக்க வேண்டும் என்று 

மன்றாடி கேட்டுக் கொள்கின்றனர்.


தேவர்களையும் மக்களையும் காப்பதற்காக

விஷ்ணு  பகவான் நரகாசுரனை அழிக்கிறார்.

பெண்களையும் தாய் அதிதியின்

மந்திரக் கம்மலையும் மீட்டு வருகிறார்.


நரகாசரன் அழிந்த மகிழ்ச்சியைத்தான்

தீபாவளியாகக் கொண்டாடி வருவது

யாவரும் அறிந்த ஒன்று.


நரகாசுரனை  கொன்று பெண்களை 

மீட்டு வந்த மகிழ்ச்சியில் விஷ்ணு பகவானான

கிருஷ்ணர் இருக்கிறார்.

இப்போது அந்த நல்ல செய்தியைத்  தன்

தங்கை சுபத்திராவிடம் சொல்லி மகிழ

வேண்டும் என்று  நினைக்கிறார்.


சகோதரி வீட்டிற்குப் போகும்போது

வெறுங்கையோடு போக முடியுமா ...?

கையில் ஏதாவது கொண்டு செல்ல 

வேண்டுமல்லவா! 


அதனால்  கையில் தங்கையை 

மகிழ்ச்சிப்படுத்த பொருட்களைக்

கொண்டு செல்கிறார்.


தன் சகோதரனைக் கண்ட 

சுபத்திரா வெற்றித் திலகமிட்டு

வரவேற்று தனது மகிழ்ச்சியைப்

பகிர்ந்து கொள்கிறார்.

அந்த நாளைத்தான் வட இந்தியர்கள்

பாய் தூஜ் என்ற விழாவாகக் கொண்டாடுகின்றனர்.


.

 இன்றும் சகோதரர்கள் குடும்பம் குடும்பமாக 

 தன் சகோதரிகள் வீட்டிற்கு கையில்

 தம்மால் இயன்ற பரிசுப் பொருட்களைக்

 கொண்டு செல்வதை நம்மால் 

 காண முடியும்.

 

 

நரகாசுரனைக் கொன்ற வெற்றியைக்

கொண்டாடும் நாளாக இருந்தாலும்

தன் உறவுகளோடு தீபாவளி பண்டிகையை 

கொண்டாடி முடிக்கும் பாய் தூஜ்  கொண்டாட்டம்

தீபாவளி பண்டிகையின் சிறப்பான

ஒரு நாளாகக் கருதப்படுகிறது.


உடன் பிறந்த சகோதரிகளோடு 

மகிழ்ந்து கொண்டாடும்

பாய்தூஜ் கொண்டாட்டத்தை வட இந்தியர்கள்

மட்டுமல்ல தற்போது அனைவரும் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.


கணவனின் ஆயுளுக்காக தீபம் 

ஏற்றிக் தொடங்கிய முதல்நாள் தீபாவளி

சகோதரனின் நல்வாழ்வுக்காக

பிராத்தனை செய்து கூடி மகிழும் நாளாக ஐந்தாம்நாளில் முத்தாய்ப்பாக முடிவு பெறுவது 

தீபாவளி கொண்டாட்டங்களின் தனிச்சிறப்பு.

Comments