கிறிஸ்துமஸ் பாட்டு
கிறிஸ்துமஸ் பாட்டு
விண்ணின் மைந்தன்
மண்ணில் அவதரித்தார்
கானிடையரோடு நாமும்
மாடடைக் குடில் தன்னில்
மகிபனைக் கண்டிடுவோம்...வாருங்கள்
ஆ...ஆ...ஆ...என்ன ஆனந்தம்(2)
ஆநிரை கொட்டிலில்
ஆவினத் தாலாட்டலில்(2)
பாரின் மீட்பர்
பாலன் ஏசு பாரீர்
ஆ...ஆ...ஆ.. என்ன ஆனந்தம்
வானதூதர் வாழ்த்திட
வான்வெள்ளி வழி காட்டிட
வானசாஸ்திரிகளோடு நாமும்
வெள்ளைப் போளம் தூபவர்க்கம் தந்து
பாலனைப் பணிந்திடுவோம் ... வாருங்கள்
- ஆநிரை கொட்டிலில்
வேதம் நிறைவேறிட
வேற்றுமை அகன்றோடிட
கடுங்குளிர் வேளையில்
காலை நேர மகிழ்வொளியில்
சின்ன பாலன் ஏசு பாதம்
கண்டுவந்து வாழ்த்திடுவோம்..... வாருங்கள்
- ஆநிரை கொட்டில்
Comments
Post a Comment