யோனா

யோனாவின் கதை

காட்சி-1

இடம்  : யோனாவின் வீடு

உறுப்பினர்கள்  :  யோனா 

கர்த்தர் (குரல்)  : யோனாவே !  யோனாவே !

யோனா  : இதோ இருக்கிறேன் ஆண்டவரே! 

            சொல்லும் . அடியேன் கேட்கிறேன்.

கர்த்தர்   : நீ எழுந்து நினிவே பட்டணத்துக்குப் போ...

அவர்கள் அக்கிரமக்காரர்களாக மாறிக்

கொண்டிருக்கிறார்கள்.

யோனா :  ஆம் ஆண்டவரே! நினிவே மக்கள் மூர்க்கர்கள்

என அறிந்திருக்கிறேன்.

கர்த்தர்  :  அதனால்தான் உன்னை 

நினிவேக்குப் போகச் சொல்கிறேன்.நீ நினிவே

 பட்டணத்துக்குப் போய்

இப்படியே அக்கிரமம் தொடர்ந்தால் 

நினிவேயை அழித்துப் போடுவேன் என்று சொல்.

யோனா :  கர்த்தர் நினிவே மக்களை 

அழித்துப்போட சித்தம்

கொண்டீரோ !

 கர்த்தர் தாமே இரக்கமும் மன உருக்கமும்

உடையவர் என்பதை யான் அறிவேன்.

கர்த்தர் :  அக்கிரமம் அதிகமாகும்போது தேவ

 கோபத்திற்குள்ளாக்கப்படுவீர்கள் என்பது

 தெரியுமல்லவா !

யோனா : தெரியும்....இந்த மக்கள்மீது 

இரக்கம் காண்பியாது இருப்பீரோ !

கர்த்தர்   :   அந்த இரக்கத்தின் 

நிமித்தமே அவர்களை எச்சரிக்கிறேன்.

நீ போய் நான் சொல்லுவதைச் சொல் .

யோனா : உங்கள் கட்டளைக்குக்

கீழ்ப்படியாதிருந்தேனோ! 

    ( ஆனால் யோனா நினிவேக்குச் செல்லாமல்

    தர்ஷீசுக்குச் செல்லும் கப்பலில் ஏறுதல்)

                  காட்சி   2

இடம்  : கப்பல்

உறுப்பினர்கள்  : மாலுமி , யோனா ,பிரயாணிகள்

யோனா : எப்படியோ தப்பித்து வந்துவிட்டோம்.

அல்லது அந்த மூர்க்கர்களிடம் போய்

மாட்டியிருப்பேன்.

சிப்பந்தி :  எல்லோரும் அவரவர் இடத்தில் போய் 

வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள்.

யோனா : (மனதிற்குள் )தனியாக போய் நிம்மதியாக ஒரு

தூக்கம் போட்டுவிட வைண்டியதுதான்.

(யோனா கப்பலின் கீழ்த்தளத்தில் போய் தூங்குதல் )

மாலுமி  : என்ன  திடீரென்று கடல் ஒரே

கொந்தளிப்பாக இருக்கிறது.?

ஏதோ தவறாக இருப்பது போல் தெரிகிறதே!

துணை மாலுமி :  ஆமாம். எனக்கும் அப்படித்தான்  தோன்றுகிறது.சுனாமி அலை போல அலைகள் 

மேல் எழும்பி வருகின்றன.

கப்பலுக்குள் தண்ணீர் புகுந்துவிடுமோ 

என்று  அச்சமாக  இருக்கிறது.

மாலுமி: யாரும் அச்சப்பட வேண்டாம்.முடிந்த

மட்டும்  பாதுகாப்பாகச் செலுத்த 

 முயற்சி செய்கிறேன்.

துணை மாலுமி :  பயமாக இருக்கிறது.

கேப்டன்! இப்போது என்ன செய்வது?

 வேறு ஏதும் வழி இல்லையா.?..

மாலுமி : இருக்கிறது... கொஞ்சம் பாரத்தைக் 

குறைத்தால் கப்பல் இயல்பு நிலைக்குத் 

திரும்பும் என்று நினைக்கிறேன்.

துணை மாலுமி : அப்படியானால் உடனே போய்

எல்லோருடைய பொருட்களையும்

கடலில் வீசச் சொல்கிறேன்.

துணை மாலுமி  (பயணிகளிடம் சென்று ):

 எல்லாரும் வைத்திருக்கும் பொருட்களை தூக்கி 

 கடலில் வீசுங்கள். அல்லது கப்பல் கவிழ்ந்துவிடும்.

 பயணி  : அது எப்படி முடியும்? பயணத்திற்குத் தேவையான முக்கியமான பொருட்கள்

மட்டுமே எங்களிடம்  இருக்கின்றன.

துணை மாலுமி : கப்பல் மூழ்கப் போகிறது.

இப்போது நீங்கள் பொருட்களை வீசவில்லை

என்றால்  எல்லோரும் மொத்தமாக 

கடலில் மூழ்கி சாக வேண்டியதுதான்.

பயணி :  ஐயோ..வேண்டாம்...வேண்டாம்

பொருட்களை வீசி விடுகிறோம்.....ஏய்...அவரவர் பொருட்களைத் தூக்கி கடலில் வீசுங்கள்.

(அனைவரும் பொருட்களைத் தூக்கி கடலில் வீசுதல்)

மாலுமி : எல்லோரும் பொருட்களை வீசி விட்டார்களா...?

துணை மாலுமி  : எல்லா பொருட்களும் கடலில் போட்டாயிற்று  .

ஆயினும் கப்பல் மேலும் கீழும் ஆடுவதைப் 

பார்த்தால் எனக்கென்னவோ

பயமாகத்தான் இருக்கிறது!

மாலுமி  :  ஐயோ...என்னால் உங்களை காப்பாற்ற 

முடியாமல் போய்விடுமோ என்று எனக்கும்

 நேரம் ஆக ஆக அச்சமாகத்தான் 

இருக்கிறது.

இது என்ன ....ஒருநாளும் இல்லாத கடல் சீற்றம்...

ஒன்றுமே புரியவில்லையே!

.

துணை மாலுமி.  :  இன்னும் எங்காவது பாரம்

இருக்கிறதா என்று கப்பல் முழுவதும்

தேடிப் பார்க்கிறேன்.

மாலுமி.: அதைச் செய்யுங்கள்.

முடிந்த மட்டும் முயற்சி

செய்து பார்ப்போம்.

(துணை மாலுமி கப்பலின் கீழ்க்களத்திற்கு ஓடினார். அங்கே...)

துணை மாலுமி  : ஏய்... யாரது...எழும்பு...

எழும்பு.

யோனா ( ஒன்றும் தெரியாதவன் போல)   :

 என்ன ...என்னாயிற்று...?

துணை மாலுமி( கோபமாக ) : கப்பல் கவிழப்போகிறது.

நாங்களெல்லாம் சாவா...வாழ்வா என உயிரைக்

கையில் பிடித்துக் கொண்டு இருக்கிறோம். நீ இங்கே

நிம்மதியாக தூங்கிக் கொண்டிருக்கிறாயா?

யோனா  : நான் எழும்பி நின்றால்  கப்பல் கவிழாதா ?

துணை மாலுமி : என்ன ...குதர்க்கமான பேச்சாக இருக்கிறது.

 என்ன கொண்டு வந்திருக்கிறாய்.? 

 யோனா : ஒன்றும் கொண்டு வரவில்லை. 

 துணை மாலுமி : ஏதாவது பொருள் இருந்தால்

கடலில் தூக்கி வீசிவிடு.

அல்லது நீயும் சேர்ந்துதான் சாகப் போகிறாய்.

யோனா : என்னிடம் எந்தப் பொருளும்

இல்லை என்கிறேன்.

மறுபடியும் மறுபடியும் போடு போடு என்றால் 

என்னைத்தான் தூக்கிப் போட வேண்டும்.

துணை மாலுமி : போதும்...போதும்...

நீ இங்கே தனியாக இருக்க வேண்டாம்.

மேலே வா.... அங்கு வந்து எல்லோரிடமும்

சேர்ந்து இரு.

(யோனா மாலுமியோடு செல்ல... அங்கே....பயணிகள்...)

பயணிகள்.( ஜெபித்தபடி)  :   ஆண்டவரே ! என்ன இது...

ஏன் எங்களைச் சோதிக்கிறீர்....நாங்கள் ஒரு பாவமும்

 அறியோமே !

துணை மாலுமி  (மாலுமியிடம் போய் ):

 எல்லா பொருட்களையும் தூக்கி வீசியாயிற்று.

அப்புறமும் கப்பல் மூழ்குவது போல் இருக்கிறதே.

இனி என்ன செய்வது?

பயணி. 1. : யார் செய்த பாவமோ நம்ம எல்லாருடைய

தலையிலும் வந்து விடியப் போகிறது.

மாலுமி  : எல்லோரும் இங்கே வாருங்கள்.

எனக்கு என்னவோ...இது கடவுளுடைய கோபம் 

போலதான்  தெரிகிறது.

துணை மாலுமி : இதற்கு ஒரே வழி 

கடவுளிடம் வேண்டிக்கொள்வதுதான்.

வேறு வழி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

மாலுமி " : சீட்டு குலுக்கிப் போட்டு பார்க்க 

வேண்டியதுதான்  அதுதான்  ஒரே வழி.

அப்போதுதான் யாரால் இது நிகழ்கிறது 

என்பது தெரிந்துவிடும்.

துணை மாலுமி : எனக்கும் அதுதான் சரி 

என்பதுபோல தெரிகிறது.

மாலுமி  : உடனே பெயர்களை 

எழுதிக் கொண்டு வாருங்கள்.

துணை மாலுமி :(சீட்டு குலுக்கிப் போட்டபடி)  :

 யாராவது ஒருவர் வாருங்கள் ஒரு சீட்டை எடுங்கள்

(பயணி ஒருவர் சீட்டை எடுத்து  மாலுமியிடம் கொடுத்தல் )

 மாலுமி ( சீட்டைப் பிரித்துப் பார்த்தபடி ):

யோனா....யாரது யோனா....?

யோனா.:   நான்தான்...யோனா..

மாலுமி : உன் பெயர்தான் வந்திருக்கிறது....நீ ஏதாவது

தப்பு செய்தாயா ?

பயணி  1.:  பாவி...நீ யார் ? எங்கிருந்து வருகிறாய் ?

பயணி 2.: உன் வேலை என்ன?இப்போதே சொல்.

பயணி  3. : உன் சாதி என்ன ? 

யோனா : நான் எபிரேயன்...என் நிமித்தம்

இது நிகழ்கிறது என்று எப்படி சொல்கிறீர்கள்?

மாலுமி : இதோ சீட்டு உன் பெயரில்தானே

 விழுந்திருக்கிறது? 

 இதற்கு என்ன பதில்?

 யோனா : நான் கர்த்தர்மேல் பயபக்தியான மனிதன்.

 எந்தப் பாவமும் செய்யாதவன்.

மாலுமி :  அது இருக்கட்டும்... நீ இப்போது எங்கே செல்கிறாய்?

யோனா : நான் தர்ஷீசுக்குச் செல்கிறேன்.

மாலுமி : வேலை நிமித்தமாகவா? 

யோனா : இல்லை எனக்கு தர்ஷீசில் எந்த வேலையும் இல்லை.

மாலுமி : எந்த வேலையும் இல்லாமல் தர்ஷீசை

நோக்கிப் போகக் காரணம் ?

 யோனா :  சொல்லத் தெரியவில்லை.

 மாலுமி : சொல்லத் தெரியவில்லையா...இல்லை சொல்லக்

 கூடாது என்று மறைக்கிறாயா ?

  யோனா : எதையும் மறைக்கும் நோக்கம் 

  எனக்கு இல்லை.

மாலுமி : அப்படியானால் உண்மையைக் கூறிவிடு.

நாங்கள் உன்னை விட்டுவிடுகிறோம்.

யோனா : என்னை கடலில் போட்டால்தான் உங்களால்

பாதுகாப்பாக செல்ல முடியும் என்றால்

என்னை நீங்கள் விட்டுவிட வேண்டாம்.

என்னை கடலில் தூக்கிப் போட்டுவிடுங்கள்.

அப்போதாவது இந்தக் கடல் அடங்குகிறதா

என்று பார்ப்போம்.

பயணி 2 : இந்த மனிதன் 

ஏன் இப்படிப் பேசுகிறான் ?

பயணி 1 : அதுதான் எனக்கும் புரியவில்லை.

பயணி 3: உன்பிரச்சினைதான் என்ன ?

யோனா : கர்த்தர் என்னை நினிவே பட்டணத்திற்குப்

போகுபடி கட்டளையிட்டடார்.

நான் கர்த்தருக்குக் கீழ்ப்படியாமல் 

நினிவே பட்டணம் செல்வதற்குப்

பதிலாக தர்ஷீசுக்குப் புறப்பட்டு 

வந்துவிட்டேன்.அதனால் 

தேவ கோபத்திற்குள்ளாகி இருப்பேனோ என

அச்சப்படுகிறேன்.

மாலுமி. :   தேவனுக்குக் கீழ்ப்படியாமைக்குக்  காரணம்...?

யோனா :  போகப் பிடிக்கவில்லை.

அந்தப் பட்டணம் அழிவதை என்னால்

பார்க்க விருப்பம் இல்லை.

இப்போது என்னின் நிமித்தமே 

இந்த கடல் கொந்தளிப்பு  என்பதை  மட்டும்

என்னால் உணர முடிகிறது.

பயணி 2.: இப்போது  நீ மட்டுமல்ல... நாம் அனைவரும் 

தேவ கோபத்திற்கு ஆளாகிவிட்டோமே ...

இதிலிருந்து தப்ப என்னதான் வழி ?

மாலுமி  : ஆமாம்... இப்போது இதற்கு தீர்வுதான் என்ன....?

யோனா  :  என்னைத் தூக்கிக் கடலில் போடுங்கள்.

அதுதான் இதற்கான தீர்வு....

என்னால்தானே இந்த கடல் கொந்தளிப்பு.

 இந்தக் கடலுக்கு நானே இரையாகி விடுகிறேன்.

பயணி:1 :  அப்படி செய்துவிட நாங்கள்  எல்லாம் 

இரக்கம் இல்லாதவர்களா !  

மாலுமி : ஏதோ ஒரு கோபத்தில் பேசி விட்டோம்.

இதைத் தவிர வேறு  ஏதேனும் மாற்றுவழி 

உண்டா எனப் பார்ப்போம்.

யோனா :  நான் கடவுளுக்கு எதிராக நடந்து

கொண்டேன்...நான் பாவி...என்னை தூக்கிப்

போடுங்கள்....கடல் கொந்தளிப்பு அடங்கும்.

நீங்கள் பத்திரமாக உங்கள் ஊர்களுக்குச்

செல்லலாம்.

பயணி 1 : இவன் சொல்வதால் அப்படி செய்யக்கூடாது.

அது பாவம்.

பயணி 2 : கேப்டன்...பக்கத்தில் ஏதாவது 

தீவு ஏதேனும் தெரிகிறதா என்று பாருங்கள்.

தயவுசெய்து சீக்கிரமாக கரை இறங்க 

முயற்சி செய்யுங்கள்.

மாலுமி :  நானும் அதற்காகத்தான் இவ்வளவு நேரம் 

போராடிக் கொண்டிருக்கிறேன்.

 (  காற்று வேகமாக வீச )

துணை மாலுமி  :  ஐயோ ...முன்பைவிட வேகமாக 

காற்று வீசுகிறதே ! 

பயணி 3 :: ஆண்டவரே!  இந்த ஒரு மனிதனுக்காக

எங்களைத் தண்டித்து விடாதேயும்....நாங்கள்

உமக்கு எதிராக எந்த குற்றமும் செய்யவில்லையே !

துணை மாலுமி : இப்படியே பேசிக் கொண்டிருந்தால்

நாம் எல்லோரும் சாகத்தான் போகிறோம்.

 யோனா : என்னைக் கடலில் தூக்கி வீசுங்கள்...

 நீங்களாவது பிழைத்துக் கொள்ளலாம்.

பயணி:4 :ஆண்டவரே ! உமது சித்தம் அதுவாக 

இருந்தால் அதற்கு குறுக்கே நிற்பவன் யார்?

 இதோ இந்த மனிதன் உமது கட்டளைக்குக்

 கீழ்ப்படியாதிருந்தான்.

( என்றபடி  எல்லோருமாக சேர்ந்து

யோனாவைக் கடலில் தூக்கி வீசுதல்)

        காட்சி -3

உறுப்பினர்கள்: யோனா,மீன்

(மீனின் வயிற்றுக்குள் யோனா)

யோனா : ஆ...கர்த்தாவே என்ன இது

ஒரே இருட்டாக இருக்கிறது.

மீனுக்கு இரையாகிப் போனேனா.?

ஆண்டவரே! என்னை தண்ணீரில்

 மூழ்கடித்தாலும்

உமக்கு எதிராக  இனி எதுவுமே 

செய்ய மாட்டேன்.

( மூன்று நாட்கள் கழித்து )

யோனா..(கண்விழித்துப் பார்த்தல்):  ஆ...மறுபடியும் நினிவே பட்டணம்

வந்து விட்டேனா!

இந்த மூர்க்கர்கள் என்னை என்ன 

செய்யப் போகிறார்களோ ?

என்ன நடக்கப் போகிறதோ.

ஒன்றுமே புரியவில்லையே.?

 கர்த்தர் (குரல் ): யோனாவே ! ...யோனாவே !

 யோனா  : ,இதோ  இருக்கிறேன் ...ஆண்டவரே!

 கர்த்தர்  : நீ எழுந்து நினிவே பட்டணத்திற்குள்

 போ ..

 அவர்களுக்கு விரோதமாக தேவகோபம்

 இறங்கி இருப்பதால் நாற்பது நாளில்

 நினிவேவை அழிக்கச் சித்தம்

 கொண்டுள்ளேன் என்பதை அவர்களுக்குச் சொல்.

யோனா..: இதோ...அப்படியே செய்கிறேன்

ஆண்டவரே!

                  காட்சி  -4

இடம் : நினிவே பட்டணம்

 உறுப்பினர்கள் : நினிவே மக்கள், யோனா

யோனா :(நினிவே மக்களைப் பார்த்து):

உங்களைப் பார்த்துப் பரிதாபப்படுகிறேன்.

 உங்கள் அக்கிரமத்தின் நிமித்தம் 

 நாற்பது நாளில் நினிவே பட்டணத்தை

 அழித்துப்போட கர்த்தர் சித்தம் கொண்டுள்ளார்.

 மக்கள் : நீர் எதை வைத்து இவ்வாறு கூறுகிறீர் ?

 யோனா : உங்களிடம் அதைத் தெரிவித்து

 வரவே கர்த்தர் என்னை

 அனுப்பி வைத்துள்ளார்.

மக்கள் 1: ஐயோ ....நாங்கள் எல்லாம் 

அழியப் போகிறோமா ? 

மக்கள் : 2: எங்கள் மிருக ஜீவன் எல்லாம்

 அழியப்போகின்றனவா. ..?

எங்கள் அக்கிரமத்தின் நிமித்தம் 

தேவ கோபத்திற்கு 

ஆளாகிவிட்டோமா.... ?

இதற்கு என்னதான் வழி.....?

மக்கள் 3 : தேவன் மன இரக்கம் உள்ளவர்.

 அவர் ஒருபோதும் நம்மை அழிக்க 

 சித்தம் கொண்டவராக இருக்கமாட்டார்.

மக்கள் 2 :

அப்படியானால் இந்த மனிதன் சொல்லுவதுதான் 

 என்ன ?

 யோனா : நான் கூறியது முற்றிலும் தேவனுடைய 

 வார்த்தை. இதில் புரட்டு ஒன்றுமில்லை.

மக்கள் : 3.

 வாருங்கள்  நாம் கூடி ஜெபிப்போம்.

 தேவன் மனதுருக்கம் உடையவர்.

 கர்த்தர் ஒருபோதும்  நமக்கு தீங்கு செய்ய 

 மாட்டார்.

 மக்கள் 2 : உபவாசம் இருந்து ஜெபிப்போம்.

கர்த்தர் கண்டிப்பாக நம் வேண்டுதலைக் கேட்பார்.

                    காட்சி -5

உறுப்பினர்கள் : அரசன் ,தளபதி, அமைச்சர்

தளபதி (மூச்சு இரைக்க ஓடி வந்து)  :  மன்னா!...மன்னா !

மன்னன் :  என்ன ...தளபதியாரே !

இவ்வளவு பதற்றமாக ஓடி வருகிறீர்...?

தளபதி  : மன்னா...! மன்னா! எல்லாம் போச்சு... 

மன்னன் : அப்படி என்ன போய்விட்டது? சற்று

விளக்கமாகவே கூறுங்கள்.

 தளபதி : நாட்டு மக்கள் எல்லாம் அச்சத்தோடு

இருக்கிறார்கள்.

 மன்னன் : எனது ஆட்சியில் மக்களுக்கு அச்சமா ? 

புரியவில்லையே ! 

தளபதி : நம் நாட்டுக்கே பிரச்சனை வந்திருக்கிறது மன்னா .

மன்னன்(பதற்றத்தோடு) ,: நாட்டுக்குப் பிரச்சினையா ....?

எதிரி நாட்டில் இருந்து ஏதாவது ஓலை வந்ததா....?

தளபதி : இல்லை மன்னா... இல்லை.. 

தெய்வத்திடமிருந்தே  செய்தி வந்திருக்கிறது..

மன்னன் :  தளபதியாரே ! நீர் நன்றாகத்தானே இருக்கிறீரா?

உமக்குள் குழப்பம் ஏதும் இல்லையே...

தளபதி : ஏதும் இல்லை மன்னா...யோனா என்று ஒரு 

எபிரேயன் நம் நாட்டிற்கு வந்திருக்கிறான்.

மன்னன் : எபிரேயன் தானே ... அவனால் நமக்கு

பெரிதாக என்ன பிரச்சினை வந்துவிடப் போகிறது?

 தளபதி : இன்னும் நாற்பது நாளில் நினிவே 

 தம் அக்கிரமத்தின் நிமித்தம் அழியப் 

 போகிறது என்று  அந்த மனிதன் 

 தேவ வாக்கு கூறி இருக்கிறானாம்.

மன்னன் ,( பயந்தவனாக): தெய்வ வாக்கு உரைக்கிறானா!

 நமக்கு எதிராகவா....?

தளபதி : நாட்டு மக்களிடையே அக்கிரமம்

பெருகிவிட்டது. அதனால் மக்களுக்கு எதிராக

தேவ கோபம்  திரும்பியுள்ளதாம்.

மன்னன் :  தேவ கோபத்திலிருந்து தப்ப ஒரே வழி 

இப்போதைக்கு உபவாசம் இருந்து 

ஜெபம் பண்ணுவதுதான்.

உடனே நாட்டு மக்களுக்கு அறிவிப்பு கொடுங்கள்.

அனைவரும் தம் அக்கிரமங்களைக்

கைவிட்டு விட்டு உபவாசம் இருந்து ஜெபிக்கட்டும்.

தளபதி : மக்கள் மனதிலும் அதே எண்ணம்தான்

மன்னா...மக்கள் திருந்த இதுதான்

 சரியான வாய்ப்பு..

 மன்னர் : எனக்கான ஓர் இடத்தை ஆயத்தம் பண்ணுங்கள்.

 நானும் சாம்பல் மேல் உட்கார்ந்து உபவாசித்து 

 ஜெபிக்கட்டும். 

 மக்கள்  தம் பொல்லாங்கை விட்டு திரும்பட்டும்.

 தேவ கோபம் நாட்டின்மேல் இறங்காதிருக்கட்டும்.

 அமைச்சர் : ,கர்த்தர் நம் வேண்டுதலுக்கு

 செவி சாயாமல் போவாரோ ?

 மன்னர் : யாரும் கலங்க வேண்டாம்..

  நம் ஜெபத்தைக் கேட்டு தேவன் 

  கண்டிப்பாக மனதிரங்குவார். 

  அமைச்சர் : மன்னா தங்களுக்கான இடம் 

  ஆயத்தமாகிவிட்டது.

மன்னன்  : வாருங்கள்...நாம் ஜெபிப்போம்.

                   காட்சி  -6

உறுப்பினர் : யோனா 

யோனா (ஜெபத்தில் ): கர்த்தாவே ! நீர் அனுப்பினீர் 

நான் வந்தேன்.

நீர் சொல்லியதையே நான் சொன்னேன்.

இப்போது இந்த மக்களுக்கு எதிராக நீர் 

ஒன்றும் செய்யாதிருக்கிறீர் .

கர்த்தர் : உனக்கு ஏன்  இத்தனை எரிச்சல்... ,?

யோனா  : நான் அப்போதே சொன்னேன்...நீர்

இரக்கம் செய்கிற தேவன் என்று

அதனால்தான் நான் தர்ஷீசுக்குப் போனேன்.

கர்த்தர் : உனக்கு நான் என்ன செய்ய வேண்டும்

என்று நினைக்கிறாய்.? 

யோனா : நீர் சொன்னதைச் செய்யவில்லையே!

பின்னர் ஏன் என்னை இங்கு அனுப்பி வைத்தீர்?

கர்த்தர் : இவர்கள் அழிவதைப் பார்க்க வேண்டும்

என்று நினைக்கிறாயா ?

யோனா (:கோபத்தோடு): நான் உயிரோடிருப்பதைவிட

 சாவதே மேல் என்று நினைக்கிறேன்.

(யோனா கோபத்தோடு போய் 

ஒருகுடிசையைப் போட்டு 

நினிவேக்கு நிகழப் போவதை பார்ப்பதற்காக

 அங்கே அமர்ந்து கொள்ளுதல் )

 யோனா  : ரொம்ப வெயிலாக இருக்கிறது .. 

 கொஞ்சம் நிழல் இருந்தால் 

 நலமாய் இருக்கும்.

(  தேவன் ஒரு ஆமணக்குச் செடியை உண்டாக்குதல் )

  யோனா : ஆ... இவ்வளவு சீக்கிரத்தில் இவ்வளவு 

 உயரமான ஆமணக்குச் செடியா...

 நல்ல நிழல் ....  அப்பப்பா என்ன சுகம்....

  என்ன சுகம் ...

 அங்குமிங்கும் அலைந்து சரியான 

 தூக்கமே இல்லை.

  நல்ல நித்திரை வருகிறது.

(யோனா ஆமணக்குச் செடியின்கீழத் தூங்குதல் )

( ஒரே நாளில் பூச்சிவந்து மொத்த செடியையும் 

தின்றுப் போட்டது.)

 யோனா(  நித்திரையிலிருந்து எழும்பி ) : 

 என்ன திடீரென்று 

 ஒரே வெப்பமாக இருக்கிறது.

 .ஆ.. இங்கே நின்று கொண்டிருந்த 

 ஆமணக்குச்செடி எங்கே....?

  ஆ...என்ன இது ...ஒரே நாளில் செடி எப்படி 

  இப்படி மொட்டையாகிப் போனது .

  கர்த்தர் (குரல்) :  யோனாவே...இந்த ஆமணக்குச் 

 செடிக்காகவா  இத்தனை எரிச்சல் அடைகிறாய்..

யோனா : நல்ல நிழல் கொடுத்து வந்த 

 ஆமணக்குச் செடிக்கு இந்த கதியா !

கர்த்தர் : நேற்று முளைத்த ஆமணக்குக்காக 

இவ்வளவு இரக்கம் கொள்கிறாயே !

நான் படைத்த மக்கள்மீது இரக்கம்

காட்டாதிருப்பேனோ?

யோனா..: நல்ல நிழல் தந்து கொண்டிருந்ததே ..

அதற்கு போய்

இப்படி நேர்ந்துவிட்டதே என்றுதான் வருந்துகிறேன்.

கர்த்தர்( குரல்) :  நீ உண்டாக்காத ஆமணக்குச்

செடி மீது இத்தனை இரக்கமும் மனதுருக்கமும்

கொண்டிருக்கும்போது நான் 

உண்டாக்கிய இந்த நினிவே மக்களுக்காக

மனது உருகாதிருப்பேனோ.?

யோனா :  ,கர்த்தாவே  என்னை மன்னியும்.

நீர் இரக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும்

உள்ளவர் என்பதை அறிந்திருக்கிறேன்.

நினிவே மக்கள்: ஆண்டவரே எங்களை

 மன்னித்தருளும்.

எங்கள் மேட்டிமையின் நிமித்தம் 

வழிவிலகிப் போனோம்.

எங்கள் துன்மார்க்கத்தை விட்டு

உம்மண்டை வந்தோம்...

நீர் மன உருக்கமும் நீடிய சாந்தமும் 

உள்ள தேவன்.

கர்த்தர்(குரல் ): அந்தபடியே 

இனி பாவம் செய்யாதிருப்பீர்களாக!

நான் உருவாக்கிய மக்கள்மேல்

என்றென்றும் எனக்கு இரக்கம் உண்டு. 

உங்களுக்கு சமாதானம் உண்டாகட்டும்.

மக்கள்: கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.

 ( முற்றும்)

Comments