புத்தாண்டு வாழ்த்து

புத்தாண்டு வாழ்த்து 


முந்நூற்று அறுபத்தைந்து 

முத்தான நாட்களின்

முதல்நாள் முதல் விடியல்

வெள்ளைக்  காகிதத்தை நீட்டி

விரும்பியதை விரும்பியபடி

வரைந்து கோலம் செய்திடுக 

எனப் பணிக்க

விரல்கள் காகித்தின்மீது  

மெல்லத் தொட்டு விளையாட

செயல்கள் சித்திரமாய் விரிய

சத்தான உள்ளுறைக்கு 

முத்தான அச்சாரமிட்டு 

முத்தாய்ப்பாய் முன்னுரை எழுதி

முதற்பக்கம் தொடங்கிடும்

முனைப்பில் நிற்கிறோம்

செயல்களால் நாள்தோறும்

முத்திரை பதித்து 

முதற்தரமான வினைகளால்

முந்நூற்று அறுபத்தைந்து

பக்கங்களும் கவின்பெற

ஆண்டவன் அருள்மாரி 

பொழிந்திடட்டும்

ஆனந்தக் களிப்போடு

ஆண்டு முழுவதையும்

நடத்தித் தந்திடட்டும்

வளமும் நலமும் 

வாரி வழங்கும் ஆண்டாக

இந்த 2026 அமைந்திட வாழ்த்துகள் 👍 



இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Comments