கிறிஸ்துமஸ் தாத்தா

கிறிஸ்துமஸ் தாத்தா



கிறிஸ்மஸ் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது கிறிஸ்மஸ் தாத்தா எனப்படும் சாண்டா கிளாஸ் தான்.

அடர்ந்து வளர்ந்த வெள்ளை தாடி, வெள்ளை பார்டர் வைத்த சிகப்பு நிற வெல்வெட் அங்கி அணிந்த உடல் இவற்றோடு முதுமையைப் பிரதிபலிக்கும் வசீகரமான முகம். 


யாரிந்த கிறிஸ்துமஸ் தாத்தா ?

கிறிஸ்துவுக்கும் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கும் என்ன தொடர்பு?

கிறிஸ்துமஸ் தாத்தாவைப் பற்றி

பைபிள் என்ன சொல்கிறது?

இப்படி பல கேள்விகள் வந்து

இடைமறித்து நிற்கின்றன.


கிறிஸ்மஸ் தாத்தா பற்றிய செய்திகள் பைபிளில் இல்லை.

பிறகு எங்கிருந்து இந்த கிறிஸ்துமஸ் தாத்தா வந்தார்?


கிறிஸ்துமஸ் தாத்தா என்ற கதாப்பாத்திரம் இடையில் நுழைவதற்குக்

காரணம் என்ன ?


உலகம்  முழுவதும் டிசம்பர்  மாதத்தில் அதிகம் உச்சரிக்கப்படும் பெயர் கிறிஸ்துமஸ் தாத்தா .


சிறுவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் 

இந்த கிறிஸ்துமஸ் தாத்தா 

யார் ?


அதற்கான விடையை அறிய

வரலாற்றைத் திருப்பிப் பார்க்க

வேண்டியிருக்கிறது.


கி.பி.4 ம் நூற்றாண்டில் துருக்கி

நாட்டின்  சிமிர்னா என்ற இடத்தில்  நிக்கோலஸ் என்பவர் பேராயராக இருந்தார்.

இவர் மிகப் பெரிய செல்வந்தர்.

ஆனால் ஏழைகளுக்கு உதவும் நற்பண்பு  கொண்டவர்.குறிப்பாக குழந்தைகள் மேல் அதிக பிரியம்  வைத்திருந்தார்.

எளிமையான மனிதர். பழகுவதற்கு இனிமையானவர். 

இவருடைய எளிமையும் கனிவான  பேச்சும்  அனைவரையும்  கவர்ந்தது.

இவர்பால் 

ஓர் ஈர்ப்பு ஏற்பட வைத்தது.

மக்கள் இவரைப் புனிதராகவே கொண்டாட ஆரம்பித்தனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக கத்தோலிக்கம் இவரைப் புனிதராகவே திருநிலைப்படுத்தியது.

அதனால் இவரின் புகழ் உலகெங்கும் பரவியது.


பிரபலங்களை மையப்படுத்தி

கதைகளும் கவிதைகளும் 

எழுதுவது இயல்பு.

அப்படி எழுதப்பட்ட ஒரு கவிதையின்

கதாநாயகன் தான் சாண்டா கிளாஸ் எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா.

நிக்கோலஸை மையமாக வைத்து 1822 ல் டாக்டர் கிளமெண்ட் மூர் எனும் கவிஞர் ஒரு கவிதை எழுதியினார்.

 அந்தக் கவிதையில்  நிக்கோலஸை தக்க சாண்டா கிளாஸ் எனும் புனைவுப் பெயரில் கிளமெண்ட் அறிமுகம் செய்திருப்பார்.

அந்தப் பாடல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியது.


அந்தப்  பாடலின் முதல் வரிதான்

 ஜிங்கிள் பெல் ஜிங்கிள் பெல் என்பதாகும் .

அதைத் தொடர்ந்து அவர் 

அந்தப் பாடலில் மேலும் சில

கற்பனை கதாப்பாத்திரங்களையும்

அறிமுகம் செய்திருப்பார்.


இக்கவிதையில் வரும்  அந்தக் பாத்திரங்களுக்கு ஒரு அமெரிக்க ஓவியர்

 வரைந்த உருவமே அழகிய மணிகளால் அலங்கரிக்கப்பட்ட பனிச்சறுக்கு வண்டி.

 அந்த வண்டியை ஒன்பது கலைமான்கள் இழுத்துச் செல்வது போன்று அந்த ஓவியம் வரையப்பட்டிருக்கும்.

அதில் கம்பீரமாக சாண்டா கிளாஸ் என்னும் நத்தார் தாத்தா அமர்ந்து செல்வது போன்று 

சித்திரிக்கப்பட்டிருந்தது.


அந்த மான்கள் ஒவ்வொரு வீட்டின் கூரைகள் மீதும் பறந்து செல்லுமாம்.

அப்படி அவை பறந்து செல்லும் போது புகை கூண்டின் வழியே சாண்டா கிளாஸ் குழந்தைகளுக்குப் பரிசுப் பொருட்கள் போட்டுக்கொண்டே செல்வது போல அந்தப்படம் சித்தரிக்கப்பட்டிருந்தது.


அந்தக் கவிதையை அமெரிக்க ஓவியர் அழகாக காட்சிப்படுத்தி உயிர் கொடுத்து

உயிர்ப்புடன் உலகம் முழுவதும் உலவ விட்டிருந்தார்.


இப்படி  கிளமெண்ட் எழுதிய கவிதையில் அறிமுகப்படுத்தப்பட்ட சாண்டா கிளாஸ்

என்பவர்தான்

கிறிஸ்துமஸ் தாத்தா .

அழகிய சிவந்த கன்னங்கள்,பழுப்பு நிறத்தாடி,சிறிய வாய்,பெருத்த தொப்பை, சிவப்பு நிற மேலாடை,பனிக்காலத் தொப்பி, தோளில் ஒரு மூட்டை ஆகியவை இணைந்த உருவமே சாண்டா கிளாஸ்

என்ற அமெரிக்க ஓவியர் வரைந்த ஓவியம் அப்படியே அனைவர் உள்ளங்களிலும் பதிந்துவிட்டது.

இதற்கு வேறு ஒரு கதையைச் சொல்வாரும் உண்டு.

தோர் எனும் ஜெர்மானியக் கடவுளை கொம்புகளுள்ள இரண்டு மான்கள் இழுத்துச் செல்வதைப் போல 

புனையப்பட்ட கதை ஒன்றும் உண்டு.இக்கடவுளுக்கு யூல் 

என்ற பிறப்பின் பண்டிகை கொண்டாடப்படுவதும்  வழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது.


அந்த காலத்தில் மான் கொம்புகளை 

வீட்டுச் சுவற்றில் மாட்டி வைக்கும் வழக்கம் தோர் கடவுளின் நினைவாகவே இருந்து வந்ததாகச்

செய்திகள் சொல்கின்றன.


நிலவை நோக்கி இந்த மான்கள் பறந்து செல்வது பாபிலோனியர்கள் வணங்கிய நிம்ரோத் எனும் தெய்வமே

என்று பாபிலோனியர்கள் நம்பினர்.

பாபிலோனியர்களின் சூரிய கடவுள்தான் இந்த நிம்ரோத்  என்ற நம்பிக்கை  இருந்தது.

அந்தச் சூரியக் கடவுளின் பண்டிகை 

டிசம்பர் 25 ஆம் நாள் 

கொண்டாடப்பட்டதாகவும் 

வரலாறு கூறுகிறது.


எத்தனை  கதைகள் கூறினாலும் நிக்கோலஸ் தான் கிறிஸ்துமஸ் தாத்தா என்பது பெரும்பான்மை மக்கள் நம்பும் செய்தி.


 சான்டா கிளாஸ் 

மூலம் மேலை நாடுகளில் பெரும் வணிகமே நடைபெறுகிறது என்பது

மறுக்க முடியாத உண்மை.


இன்று உலகில் 250 கோடி கிறிஸ்தவர்கள் வாழ்கின்றனர்.  முதலாளி வர்க்கத்திற்கு கிறிஸ்துவை விட கிறிஸ்மஸ் தாத்தாவே தேவை.ஏனெனில் அவர் பெயராலேயே உற்பத்தியான அனைத்துப் பொருட்களும் சந்தைப்படுத்தப்படுகிறது.


இதில் இன்னொரு அரசியல் முக்கியமானது. யூதத்திலிருந்து உருவான கிறிஸ்தவத்தை யூதத்திலேயே நிலை நிறுத்தும் வேலையும் உண்டு என்றும் கூறுகின்றனர்.

அதனால்தான் யூத சூரியக் கடவுளின் பண்டிகை நாளான டிசம்பர் 25 ஆம் நாளை கிறிஸ்து பிறப்பாக கொண்டாட வைத்தனர் 

என்பது ஒரு சாரார் கருத்து.


இதற்கு சான்றாக புனிதர் நிக்கோலஸ் மட்டுமல்ல கவிதை எழுதிய டாக்டர் கிளமெண்ட் மூர்  ஆகிய இருவரும் யூதர்களே என்ற வாதத்தை

முன் வைக்கின்றனர் ஆராய்சியாளர்கள்.


விமர்சனங்களும் விவாதங்களும்

இன்றும் தொடர்கின்றன.


எது எப்படியோ இன்று கிறிஸ்துமஸ் தாத்தா இல்லாமல் 

கிறிஸ்துமஸ் இல்லை என்று சொல்லும் அளவிற்கு கிறிஸ்தவர்கள் இல்லங்களிலும் 

உள்ளங்களிலும் கிறிஸ்துமஸ் தாத்தா நிறைந்து விட்டார்.


சிறுவர் உள்ளங்களில் தாத்தா வருவார்.

பரிசுப் பொருட்களை அள்ளிக் தருவார் என்ற நம்பிக்கை விதைக்கப்பட்டு விட்டாயிற்று.

இனி எளிதாக மாற்றிவிட முடியாது.


கிறிஸ்துமஸ் தாத்தா இல்லாத கிறிஸ்துமஸா?

நினைத்துப் பார்க்க முடியவில்லை.


கிறிஸ்துமஸ் தாத்தாவும்

கிளமெண்ட் மூரின் ஜிங்கில் பெல் என்ற

பாடலும் இல்லாமல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இல்லை.



Comments