புண்ணியம் ஆம் பாவம் போம்

புண்ணியம் ஆம் பாவம் போம்



தீமை ஒழிய வேண்டுமா ?

நன்மை செய்.


இது யாருக்குத் தெரியாது?

நன்மை செய்தால் தீமை காணாமல் 

போகும்.

அனைத்து மதங்களும் இதைத்தானே சொல்கின்றன.

பெரியவர்களும் இதையேதான்

சொல்லித் தருவார்கள்.

எத்தனை பேர் சொல்லித் தத்தித் என்ன?

ஒரு கருத்தினை மனதில் பதிய வைக்க வேண்டுமா?

எத்தனை முறை வேண்டுமானாலும் 

சொல்லலாம்.

 இதையேதான் ஔவையும்  தனது 

நல்வழியின் முதல் பாடலில் சொல்லித் தந்திருக்கிறார்.

வாருங்கள் ஔவை என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்ப்போம்.



புண்ணியம் ஆம்; பாவம் போம்; போன நாள் செய்த அவை

மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள்; எண்ணுங்கால்,

ஈது ஒழிய வேறு இல்லை, எச் சமயத்தோர் சொல்லும்;

தீது ஒழிய, நன்மை செயல்!

                   நல்வழி பாடல் 1




"மனிதன் பிறக்கும் போதும்

அவன் இறக்கும் போதும் 

அவன் கூடவே வருவது அவன் செய்த புண்ணியமும் பாவமும் மட்டும்தான்.

சேர்த்து வைத்த சொத்தோ பொருளோ புகழோ படித்த படிப்போ பெற்ற

பதவியோ எதுவும் கூட வரப் போவதில்லை. அதனால்  உலகில் வாழும் காலம்வரை தீமை செய்யாது விலகி இரு.

நன்மை செய்து புண்ணியத்தைத்ன் தேடிக்கொள்.இதைத் தவிர 

உலகில் வேறு ஒன்றுமே

இல்லை.

அனைத்து  மதங்களும் சொல்லித் தருவதும் வாழும் காலம் மட்டும் தீமை செய்யாதே.

முடிந்த மட்டும் நன்மை செய் என்பதுதான்."

என்கிறார் ஔவை.


தீமை செய்யாதே.

நன்மை செய்.

இதைச் சொல்ல வேண்டும்.

தான் சொல்லும் கருத்துக்கு வலு சேர்ப்பதற்காக  நான் மட்டும் இதைச் சொல்லவில்லை.அனைத்து மதங்கள்

சொல்லும் கருத்தும் இதுதான் என்று

அருமையாகச் சொல்லி 

நம்மை நல்வழி பக்கம்  திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்  ஔவை.


"தீது ஒழிய நன்மை செயல்"

அருமையான கருத்து இல்லையா?












Comments