அடக்கம் அமரருள் உய்க்கும்....
அடக்கம் அமரருள் உய்க்கும்.....
"அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும் "
குறள் : 121
அடக்கம் _ அடக்கமாக இருத்தல்
அமரருள் _ சாகாதவரிடையே
உய்க்கும் _கொண்டு சேர்க்கும்
அடங்காமை _அடங்காதிருத்தல்
ஆரிருள் _ கொடிய இருளில்
உய்த்துவிடும் _ செலுத்திவிடும்
அடக்கம் ஒருவனை உயர்த்தி என்றென்றும்
அழியாத உயர்ந்த நிலையை
அடைந்திடச் செய்யும்.
அடங்காமை பாவமாகிய இருளில்
கொண்டு சேர்த்துவிடும்.
விளக்கம்:
அடக்கமாகிய நற்பண்பு ஒருவனை
உயர்ந்த நிலையில் கொண்டு நிறுத்தும்.
எண்ணம்தான் செயலாக மாறும்.
நம் மனதில் உள்ள எண்ணம்தான்
சொல்லாகவும் வெளிப்படும்.
அடக்கம் என்பது புலன்களை அடக்கி வைத்துக்
கொள்ளும் ஒரு நற்பண்பு.
மனம், மொழி, மெய் இவற்றைக் காத்துக்
கொண்டால் நம்மை எந்தத் தீங்கும்
அணுகாது.
கட்டுப்பாடற்ற வாழ்க்கை பல தீமைகளுக்கு
வழி வகுக்கும். தீய நண்பர்களிடம் கொண்டு
சேர்க்கும். தீயவற்றைப் பேச வைக்கும்.
அதனால் ஒருவன் இருளாகிய பாவத்தில்
தள்ளப்படுகிறான்.
மாறாக புலன்களை அடக்கத்
தெரிந்த ஒருவர் கட்டுப்பாட்டுடன் நடந்து
கொள்வார். பேச்சு, செயல் யாவும் பிறரைப்
புண்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ளும்
பண்பு அவரிடம் இருக்கும்.
அந்த அடக்கம் அவரை உயர்ந்தோரிடையே
கொண்டு சேர்க்கும்.
உயர்நிலையை அடைய வைக்கும்.
அடங்காமை பேதையர் கூட்டத்தோடு சேர வைக்கும்.
மூடத்தனமும் முரட்டுத்தனமும் வந்து
ஒட்டிக் கொள்ளும். அதனால் பெரும்
பாவச்செயல்கள் செய்து
பெருந்துன்பம் நிறைந்த இருளில்
வீழ்ந்துவிட நேரிடும்"
"அடக்கம் நிலையான புகழைக் கொடுக்கும்.
அடங்காமை ஒருவனுடைய வாழ்வையே
இருளாக்கிவிடும்"
என்கிறார் வள்ளுவர்.
English couplet :
" Control of self does man conduct to bliss th'immortals share
Indulgence leads to deepest night and leaves him there "
Explanation :
Self control will place a man among the Gods;
the want of it will drive him into the thickest darkness of hell.
Transliteration :
" Adakkam Amararul Uikkum Adangaamai
Aarirul Uiththu Vidum"
Comments
Post a Comment