இயற்றலும் ஈட்டலும் காத்தலும்....

 இயற்றலும் ஈட்டலும் காத்தலும்....
 "இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
 வகுத்தலும் வல்லது அரசு"
                            குறள்  : 385

இயற்றலும் _ உண்டாக்குதலும்
ஈட்டலும்  _ ஒரு வழித் தொகுத்தலும்
காத்தாலும் _ காப்பாற்றுதலும்
காத்த _ காப்பாற்றியவற்றை 
வகுத்தலும் _ வகை செய்தலும்
வல்லது _  வல்லமை கொண்டது
அரசு _ அரசாங்கம்


பொருள் ஆக்கும் வழிகளை உருவாக்கி, 
ஈட்டியப் பொருளை மூலதனமாக தொகுத்து , காத்து 
அதனை மக்களுக்குப் பயன்படும் வழியில் 
செயல் திட்டங்கள் தீட்டி செயல்பட வல்லது அரசு.

விளக்கம் :

பொருள்செயல் வகையை ஆக்குதல், 
தொகுத்தல், காத்தல், அவற்றைப் பங்கீடு 
செய்தல் என்ற நான்கு பணிகள் கொண்டதாக
 ஓர் அரசு இருக்கும்.
 இயற்றல் என்பதாவது பொருள் 
 வருவதற்கான வழிகளை
 அறிகின்ற திறமை  கொண்டதாக அரசு
 இருத்தல் வேண்டும்.
 ஈட்டலாவது வரி , திறை, தீர்வை 
 போன்றவற்றின் மூலம்
 முறையாக பொருளைத் தொகுத்து வைக்க
 வேண்டும்.
 ஈட்டியப் பொருளை எதிர்காலத் தேவைகளைக்
 கருத்தில் கொண்டு பாதுகாத்து
 வைத்திருக்க வேண்டும்.
 அரசு கருவூலம் நிறைந்திருக்க
 வேண்டும் அதேநேரம்
 பாதுகாப்பாக வைத்திருக்க 
 இருக்க வேண்டும்.

இவ்வாறு பாதுகாத்து வைக்கப்பட்ட
செல்வம் பயன் தரும் வகையில் 
பங்கீடு செய்யப்பட வேண்டும்.
எந்தெந்தத் துறைக்கு எவ்வளவு
செலவிடப்பட வேண்டும் என்று 
திட்டமிட்டு வகுத்து செலவு
செய்ய வேண்டும்.

 பொருள் வளங்களை  ஆக்குதல்,
 வருவாய் இலக்குகளை நிர்ணயித்தல்,
 திரட்டியப் பொருளைப் பாதுகாத்தல்,
 அச்செல்வத்தை முறைப்படி பகிர்ந்தளித்தல்
 ஆகிய நான்கு உத்திகளையும் 
 திறம்படக் கையாளும் வல்லமை 
 பெற்றிருப்பது ஒரு அரசின்
 கடமை.
 
வரவு செலவு திட்டத்தை 
எவ்வாறு நடைமுறைப்
படுத்த வேண்டும் என்று அரசுக்கு
அறிவுரை வழங்குவதாக 
 இக்குறள் அமைந்துள்ளது.

மொத்தத்தில் இயற்றல், ஈட்டல்,, காத்தல்,
வகுத்தல்  ஆகிய
நாற்பெரும் பணிகளைச் சிறப்பாக
செய்திட  வல்லதாக அரசு 
இருத்தல் வேண்டும் என்கிறார்
வள்ளுவர்.

English couplet :

A king is he who treasure gains, stores up ,defends,
And duly for his kingdom's weal expands.

Explanation :

"He is a king who is able to acquire wealth
to lay  it up , to guard, and to distribute it"

Transliteration:

"Iyatralum Eettalung kaaththalum kaaththa
Vakuththalum valla tharasu " 
 Comments

Popular Posts