நிறைமொழி மாந்தர் பெருமை....

நிறைமொழி மாந்தர் பெருமை......


"நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும் "

            குறள். : 28

நிறை - நிறைந்த
மொழி - சொல்
மாந்தர் - மக்கள்
பெருமை - சிறப்பு
நிலத்து - உலகத்தில், பூமியில்
மறைமொழி - அறவுரைகள், வாய்மொழி
காட்டிவிடும் - தெரிவித்துவிடும்

நிறைந்த  அறிவுடைய சான்றோர் 
பெருமக்களின் சிறப்பை அவர்கள் 
இவ்வுலகத்தில் கூறிச் சென்ற
வாய்மொழிகளே காட்டிவிடும்.

விளக்கம் : 

ஒருவரின் சிறப்பு அவர் பேசும்
வார்த்தைகள் மூலம் வந்து சேரும்.
ஒருவர் நல்லவர் என்பதையும் தீயவர் 
என்பதையும் அவரவர் பேசும் பேச்சின்
மூலமாக கண்டறிந்து கொள்ளலாம்.


ஒருவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில்
பேசிய பேச்சு காலம் கடந்தும் அவரைப்
பற்றிப் பேச வைக்கும்.
பேச்சும் நடத்தையும் மட்டுமே என்றென்றும்
மக்கள் மனதில் நிலைத்திருக்கும்.

ஒருவர் பேச்சின்மூலமாகத்தான்
அவர் என்றென்றும் கொண்டாடப்படும்
தலைவராக உயர்ந்து நிற்கிறார்.

மறைமொழி என்று கூறியதால் 
வேதத்தை எடுத்துரைப்பவர்கள்
என்று மட்டும் பொருள் கொள்ளுதல் கூடாது.
 நற்சிந்தனையைத் தூண்டும்
கருத்துக்கள், அறவுரைகள், அறிவுரைகள்
யாவும் மறைமொழியின்பாற்படும்.

ஒருவர் எழுதிய நூல்கள் அழியாமல் என்றும்
நிலைத்து நிற்க வல்லது.
எண்ணமே மொழியாக வெளிப்படுத்தப்படுகிறது.
மொழியே அறிவுநிலையை வெளிப்படுத்த வல்லது.

அவ்வாறு வெளிப்படுத்தப்பட்ட மொழியே 
ஒருவருடைய உயர்வுக்கு சான்றாக நிற்கும்
என்கிறார் வள்ளுவர்.

English couplet :

"The might of men whose word is never vain,
The s 'secret word' shall to the earth proclaim."

Explanation : 

 The hidden words of the men whose words are
 full of effect , will shew their greatness to
 the world.

Transliteration :

"Niraimozhi Maandhar Perumai Nilaththu 
Maraimozhi Kaatti vitum "

Comments

Popular Posts