ஒழுக்கம் விழுப்பம் தரலான் ....


ஒழுக்கம் விழுப்பம் தரலான்....
 
"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும் 

                             குறள் : 131

ஒழுக்கம் - நன்னடத்தை
விழுப்பம் - சிறப்பு , மேன்மை
தரலான் - கொடுப்பதால்
ஒழுக்கம் - நன்னடத்தையானது
உயிரினும் - உயிரை விடவும்
ஓம்பப் படும் - போற்றத்தக்கதாகும்


ஒழுக்கம் எனப்படும் நன்னடத்தையே 
ஒருவருக்கு  சிறப்பைக் கொடுப்பதாக
இருப்பதால் அந்த ஒழுக்கமே உயிரைவிடவும்
போற்றத்தக்க சிறப்புடையதாகும்.

விளக்கம் : 

ஒழுக்கத்தால் மட்டுமே ஒருவர் மேன்மை பெற
முடியும்.
ஆதலால் அந்த ஒழுக்கத்தை நம்
உயிரைவிட மேலானதாக எண்ணிப்
பாதுகாக்க வேண்டும்.
ஒழுக்கம் உடையவரையே உலகம்
மதிக்கும்.

நம் பேச்சு, நடை, உடை  யாவற்றிலும்
ஒரு கண்ணியம் காக்கப்பட வேண்டும்.
கல்வியால் மேன்மை கிடைக்கும்.
செல்வத்தால் சிறப்பு வரும்.
வீரத்தால் பெருமை அடையலாம்.
கொடையால் நன்மை விளையும்.
ஆனால் ஒழுக்கத்தால் கிடைக்கும்
மேன்மை இவை எல்லாவற்றையும்விட
உயர்வானது.

உயிர்மீது அனைவர்க்கும் அளவு கடந்த 
ஆசை உண்டு.
அதனால்தான் உயிரைத் தாங்கி இருக்கும்
உடலைப் பேணிப் பாதுகாக்க 
பெரும் முயற்சி மேற்கொள்கிறோம்.
உயிர் எல்லாவற்றைவிடவும்
சிறந்தது. மதிப்புமிக்கது.
ஆனால் அந்த உயிரை விடவும் சிறந்தது
ஒன்று உண்டு. அதுதான் ஒழுக்கம்
என்கிறார் வள்ளுவர்.

சாதாரணமாக ஒழுக்கம் உயிர் போன்றது
என்று சொல்லி கடந்து போகவில்லை.
உயிரினும் ஓம்பப் படும் என்று
ஒரு சிறப்பு உம்மைப்  பயன்படுத்தி
ஒழுக்கம் விழுப்பம் தரும் என்று
சிறப்பு கவன ஈர்ப்பு தந்திருக்கிறார்
வள்ளுவர்.
 
ஒழுக்கம் மேன்மை தருவதால் ஒழுக்கமே
உயிரைவிடவும் போற்றிப் பாதுகாக்கப்பட 
வேண்டிய ஒன்றாகும்.

English couplet : 

 " 'Decorum ' gives a special excellence, with greater care
'Decorum ' should men guard than life,
which all men share "

Explanation : 

Property of conduct leads to eminence , it should
therefore be preserved more carefully than life .

Transliteration : 

"Ozhukkam Vizhuppam Tharalaan Ozhukkam
Uyirinum Ompap Patum "


Comments

Popular Posts