அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ்....

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்....


"அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்."
                             குறள் : 71

அன்பிற்கும் - அன்பு கொள்வதற்கும்
உண்டோ - உள்ளதோ 
அடைக்கும் - அடைத்து வைக்கும்
தாழ் _ தாழ்ப்பாள்
ஆர்வலர் - அன்பு மிகுதியாகக் கொண்டவர்
புன் - துன்பம்
கணீர் - கண்ணில் பெருகும் நீர்
பூசல் _ ஆரவாரம்
தரும் _ கொடுக்கும்

அன்பினை தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க
முடியாது. அன்புடையவரின் துன்பம்
கண்டவிடத்து வெளிப்படும் கண்ணீர்
அந்த  அன்பை வெளிப்படுத்திவிடும்.

விளக்கம் : 

அன்பினை மனதிற்குள் வைத்துப்
பூட்டி வைக்க முடியாது.
என்னால் அன்பை வெளியில் காட்ட
முடியாது என்று யாரும் கூறிவிட முடியாது.
தமக்கு அருமையானவர்கள், 
நெருங்கிய நண்பர்கள்
தன்மீது அன்பு கொண்டவர்கள்மீது
கண்டிப்பாக நமக்கு அன்பு இருக்கும்.
அன்பு  என்பது மூடி வைக்க முடியாத
ஒரு உணர்ச்சி.
ஆதலால் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அந்த
அன்பு வெளியில் வந்து எட்டிப் பார்க்கும்.
உங்கள் உள்ளத்தில் ஒருவர்மீது அன்பு
இருக்கிறது என்பதை துன்ப நேரத்தில் தான்
கண்டு கொள்ள முடியும்.
அது எப்படி என்கிறீர்களா?


நமக்கு அன்பானவர்களைக் காணும்போதும்
பிரியும் போதும் தானாகவே கண்களிலிருந்து
தானாவே கண்ணீர் வடியும் பாருங்கள்.
அதுதான் அவர்மீது நீங்கள் கொண்டுள்ள
அன்புக்கான சாட்சி.

இது அன்பு மிகுதியின் வெளிப்பாடு.
இதை மறைத்துவிட முடியாது.

அன்பானவர்களுக்கு ஒரு துன்பம்
என்று கேள்விப்பட்டதும் உள்ளம்
துடிக்கிறது. கண்ணில் நீர் வடிகிறது.

அன்பின் முதிர்ச்சியே ஆர்வம் என்று
சொல்லப்படுகிறது. அதனால்தான் ஆர்வலர்
என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்
வள்ளுவர்.
அன்புக்குரியவர் தொடர்பான செய்திகளைக்
கேட்கும்போது மனதிற்குள் ஒரு படபடப்பு.
ஒரு சலசலப்பு ஏற்படுமே அதுதான் பூசல். 
இந்தப் பூசலின் வெளிப்பாடு கண்ணீராக
வெளிப்படுகிறது.
அன்பினை அடைத்து வைக்கும் தாழ்ப்பாள்
 உண்டோ? இல்லை....
உங்கள் கண்ணீரே உங்கள் 
அன்புக்குச் சாட்சி.

English couplet : 

And is there bar that can even love restrain?
The tiny tear shall make the lover's secret plain.

Explanation : 

Is there any fastening that can shut in love?
Tears of the affectionate will publish the
love that is within.

Transliteration :

"anpiRkum uNdoa adaikkundhaazh aarvalar
punkaNeer poosal tharum "


Comments

Popular Posts