எனைத்தானும் நல்லவை கேட்க
எனைத்தானும் நல்லவை கேட்க....
"எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்"
குறள் : 416
எனைத்தானும் - எந்த அளவாயினும்
நல்லவை - நல்ல அறிவு தருபவை
கேட்க - கேட்பீராக
அனைத்தானும்- அந்த அளவில்
ஆன்ற- சிறந்த,நிறைவான
பெருமை - புகழ் ,பெருமை
தரும்- கொடுக்கும்
நல்லவற்றை எந்த அளவுக்குக்
கேட்கிறோமோ அந்த அளவுக்கு
நிறைந்த பெருமை வந்து சேரும்.
விளக்கம் :
கற்றிலன் ஆயினும் கேட்க என்றார்
வள்ளுவர். வள்ளுவரே கேளுங்கள்
என்று சொல்லிவிட்டார்
அதனால் எல்லாவற்றையும் இன்றுமுதல்
கேட்கப் போகிறேன் என்று
கிளம்பிவிட வேண்டாம்.
எல்லாவற்றையும் கேளுங்கள் என்று
வள்ளுவர் சொல்லவில்லை.
எனைத்தானும் நல்லவை
கேட்க என்றுதான் சொல்லியிருக்கிறார்.
அதாவது நல்லவற்றை மட்டுமே கேட்க
வேண்டுமாம்.
நல்லவற்றை கேட்டால் என்ன கிடைக்கும்?
என்று நீங்கள் கேள்வி கேட்பீர்கள்
என்று வள்ளுவருக்குத் தெரியும்.
அதனால்தான் அப்படி நீங்கள்
நல்லவற்றைக்
கேட்பீர்களானால் நிறைவான
பெருமை உங்களை வந்து சேரும்.
ஆதலால் எனைத்தானும் நல்லவை கேட்க....
என்று சொல்லிவிட்டார்.
எவ்வளவு அருமையாக சொல்லி
நம்மை குறளோடு கட்டி
அழைத்துச் செல்கிறார் வள்ளுவர்
நல்லவற்றைக் கேட்டால் மட்டுமே நற்பண்புகள்
வளரும். நல்லோர் தொடர்பு
கிடைக்கும். நல்ல பேச்சு இருக்கும்.
உள்ளம் நல்லவற்றையே சிந்திக்கும்.
ஆதலால் எனைத்தானும் நல்லவை கேட்க...
கேட்கவே நன்றாக இருக்கிறதில்லையா?
English couplet:
"Let each man good things learn, for e'en as he shall learn
be gains increase of perfect dignity"
Explanation :
"Let the man listen, never so little, to good instruction
even that will bring him great dignity"
Transliteration :
"Enaiththaanum nallavai ketka Anaiththaanum
Aandra perumai tharum"
Comments
Post a Comment