கவிதையாய் அம்மா
கன்னிக் குடம் உடைத்து
கன்னி என்னைக்
கண் திறக்க வைத்து
கன்னி முத்தம்
கன்னத்தில் தந்து
கன்னித் தமிழ் கற்பித்து
கன்னிநடை பயிற்றுவித்து
கன்னித்திங்கள் காட்டி
கன்னி மதிழ்சூழ முகம்
கன்னிவிடாமல் காத்த
கன்னி இளஞாழலான
அம்மா உன்னை
கன்னித் தமிழால்
கன்னி நெக்குருகி
எம்மோ எம்மோவென
யான் அழைத்த நாட்களை
நினைக்கிறேன்
கன்னி நினைவினில்
கண்டாங்கியைக் காணாமல்
தவிக்கிறேன்
கவித்தார் காலடியில் வைத்து
காத்திருக்கிறேன்
கவிதையே நீதானே
அம்மா!
அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகள்.
மிக அருமையான கவிதை.
ReplyDeleteஅன்னையர் தின வாழ்த்துகள்.
Wow wonderful kavithai.
ReplyDelete