பணிநிறைவுப் பாராட்டு மடல்
பணிநிறைவுப் பாராட்டு மடல்
தாமரைச்செல்வி
தலைமை ஆசிரியை
கே.டி.கெய்க்வாட் மாநகராட்சி தமிழ்ப் பள்ளி
எங்கும் தமிழுலா பொங்கும் புகழுலா
நல்லோர் உறைதலா (ல்) மாதவக்குறிச்சி பேருலா
மாண்புலா வேலுமயில் பெருமாள் மடியுலா
கண்டுலா வந்திட செந்தாமரை பூத்தலா!
அன்புலா ராஜூ கரம் பிடித்தலா இறைவகுத்தலா
தேனிலா கண்டுவத்தலா தெய்வீக ராகம் மீட்டலா
பால்நிலா பிள்ளை இருவராதலா (ல்) இல்லம் மகிழ்தலா
வானிலா தாமரை கண்டு முகம் நாணலா !
அதிரா நடையுலா அழகு தேருலா
உதிரா புன்னகை உமக்கே உரித்தாதலா
நதியாய் நடத்தலா(ல்) அமைதி ததும்பலா
கதியாய் இயங்கலா(ல்) கதிராய் ஒளி வீசலா !
கொஞ்சு தமிழுலா எழுத்திலா நடையிலா
மிஞ்சு அன்புலா பேச்சிலா செயலிலா
பிஞ்சு மனத்திலா விஞ்சு மதியுலா உன்னிலா
கஞ்சமாய்ப் புகழ்தலா(ல்) பஞ்சம் என் சொல்லிலா!
நதியோடு நீரின் நட்பு ஓய்தலா
விதியோடு காலம் விளையாட்டுக் காட்டலா
சதிசெய் ஓய்வு இடை வந்து பிரித்தலா
மதிசெய் நட்புலா நடத்தல் இறைவகுத்தலா!
எஞ்சிய நாட்கள் இறையருள் மிகுதலா(ல்)
எண்ணில்லா வளமும் ஈடில்லா நலமும்
எல்லையில்லா மகிழ்வும் சேர்ந்துலா வந்திட
வாழ்த்துலா வந்தது இன்பச் சிற்றுலா!
செல்வபாய் ஜெயராஜ்
Comments
Post a Comment