இன்சொல் இனிதீன்றல் காண்பான்....
இன்சொல் இனிதீன்றல் காண்பான்....
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது "
குறள் :. 99
இன்சொல் - இனிமை தரும் சொல்
இனிதீன்றல்- இன்பம் தருவது
காண்பான் - காணுதல்,அறிதல்
எவன்கொலோ- எதனைக் கருதி
வன்சொல் - கடுமையான சொல்
வழங்குவது-பேசுவது,பயன்படுத்துவது
இனிமை தரும் சொற்கள் இன்பம்
வருவதைக் கண்டபின்னரும்
ஒருவன் இன்சொல் பேசாது அதற்கு மாறான
வன்சொல் பேசுவது என்ன பயன் கருதியோ?
விளக்கம் :
இனிமையான வார்த்தைகள் பேசுபவர்க்கும்
இன்பம் பயக்கும்.கேட்பவர்களுக்கும்
இன்பம் தரும்.
"இன்சொலால் அன்றி இருநீர் வியனுலகம்
வன்சொலால் மகிழாதே ....."என்பார்
சிவப்பிரகாசர்.
இப்படி இனிமையான சொல்லால் உலகம்
மகிழும் என்று தெரிந்த பின்னரும்
கடுஞ்சொற்களைப் பயன்படுத்தி
பிறர் மனதை நோகடிக்கலாமோ?
உள்ளத்தில் கள்ளம் இல்லாதவர்
பேசும் சொற்கள் இனிது.
அவர்கள் ஒருநாளும் பிறருக்கு
தீங்கிழைக்க வேண்டும் என்று
நினைக்க மாட்டார்கள்.
அதனால்தான் "மாசற்ற நெஞ்சுடையார்
வன்சொல் இனிது "என்கிறார்
தெரியாதவர்கள் வன்சொல் பேசினால்
அது தவறல்ல.
இன்சொல் இன்பம் தரும். வன்சொல்
தீமை தரும் என்பது தெரியும்.
வன்சொல்லால் பிறர் மனம்
நொந்து போகும்.அது வடுவாகி
ஆறா ரணமாக உள்ளத்தில்
கனன்று கொண்டிருக்கும்.
அப்படி தெரிந்த பின்னரும்
வன்சொல் பேசுவீராயின் அதன்
காரணம்தான் என்ன? அதனால்
கிடைக்கப் போகும் பயன்தான்
யாது?
வலிந்து தீமை இழைப்பதின்
நோக்கம் என்ன?
எதற்காக தெரிந்து வைத்துக் கொண்டபின்னரும்
வன்சொல் பேச வேண்டும்?
இப்படி அடுக்கடுக்கான கேள்விகள்
கேட்க வைக்கிறார்
வள்ளுவர்.
வன்சொல் பேசுதல் என்ன பயன் கருதியோ?
என்று நம்மை நாமே கேட்டு ,அதனால் ஒரு பயனும்
இல்லை எனாறு நம்மையே தீர்ப்பு
எழுத வைத்திருக்கிறார் வள்ளுவர்.
நம் மனசாட்சியோடு பேச வைத்திருக்கும்
அருமையான குறள் இல்லையா?
English couplet:
"Who see the pleasure kindly speech affords,why makes
he use of harsh, repellant words "
Explanation :
Why does he use harsh words, who sees the pleasure
which sweet speech yields?
Transliteration :
"Insol inidheendral kaanpaan Evankolo
Vansol vazhangu vadhu"
Comments
Post a Comment