குடிசெய்வல் என்னும் ஒருவற்கு....
குடிசெய்வல் என்னும் ஒருவற்கு.....
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடித்தற்றுத் தான்முந் துறும்"
குறள் : 1023
குடி- குடும்பம், குடிமக்கள்
செய்வல்- உயரச் செய்வேன்
என்னும் - என்ற உறுதியோடு
ஒருவற்கு- உழைக்கும் ஒருவர்க்கு
தெய்வம்- கடவுள்
மடி - ஆடை
தற்று - இறுக பற்றிக்கொண்டு
தான்- தானாகவே
முந்துறும் - முன் வந்து உதவி நிற்கும்
என் மக்கள் உயரச் செய்ய
கடமைப்பட்டுள்ளேன் என்ற உறுதியோடு
உழைப்பவர்க்கு
தெய்வம் தாமாகவே முன் வந்து
வரிந்து கட்டிக்கொண்டு துணை புரியும்.
விளக்கம்:
குடிசெய்வானுக்குத் தெய்வம் துணை நிற்கும்.
எவ்வளவு எளிமையாக சொல்லிவிட்டார் வள்ளுவர்.
தான் மட்டுமல்ல தன்னைச் சார்ந்தோரும்
உயர வேண்டும் என்ற நல்லெண்ணம்
ஒருவர்க்கு இருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட சிந்தனையோடு
உழைப்பவர்க்கு தெய்வம்
தாமாக வலிய முன் வந்து உதவும்.
குடிசெய்வல் என்றால் என்ன?
தன்னைச் சார்ந்தவர்கள் வாழ்வு
உயர வேண்டும் என்று உழைப்பவரையே வள்ளுவர்
குடிச்செய்வல் என்கின்றார்.
அப்படிப்பட்டவர்க்கு
மடித்தற்று தான் முந்துறுமாம்?
அது என்ன மடித்தற்று தான் முந்துறும்?
உழைக்கும்போது ஆடையை வரிந்து
கட்டிக்கொண்டு உழைப்பில் ஒரு
முனைப்பு காட்டுவோமல்லவா?
அந்த முனைப்பு குடும்பத்திற்கு
உதவுவதற்காக உழைக்கும் போதும்
இருக்க வேண்டும்.
அப்படிப்பட்டவர்க்கு அதே முனைப்போடு
தெய்வமும்
ஆடையை வரிந்து கட்டிக்கொண்டு
வந்து துணை நிற்குமாம்.
அதாவது நான் இருக்கிறேன் உன்னோடு
என்ற ஒரு உறுதி தந்து தெய்வம்
முன்னால் நின்று உதவுமாம்.
இது தெரிந்திருந்தால் நானும்
என் குடும்பத்திற்கு உதவியிருப்பேனே
என்று சிலர் மனக்கணக்கு
போடுவது போல் தெரிகிறது.
இதுவரை உதவாவிட்டாலும் இனியாவது
உதவுங்கள்.
எவ்வளவு அருமையாக வள்ளுவர்
சொல்லித் தந்திருக்கிறார்.
நாம்தான் இவ்வளவு நாள் தெரியாமல்
இருந்திருக்கிறோம்.
உன் குடும்பத்திற்காக ஒரு முனைப்போடு
உழைத்தால் தெய்வம் துணை உண்டு
என்று வள்ளுவர் சாதாரணமாக சொல்லி கடந்து
போகவில்லை.
குடும்பத்தை அரவணைத்து அவர்கள்
உயர்வுக்கும் கரம் கொடுக்கும் ஒருவனுக்கு
தெய்வம் ஆடையை வரிந்து கட்டிக் கொண்டு
வந்து உதவி செய்யும்.
எவ்வளவு பெரிய உறுதிமொழி!
தெய்வம் வரிந்து கட்டிக்கொண்டு
வந்து துணை நிற்க வேண்டுமா?
அப்படியானால்
குடும்பம் உயர உதவுங்கள்.
English couplet :
"I'll make my race renowned; if man shall say
with vest succinct the goddess leads the way"
Explanation :
The deity will clothe itself and appear before him
who revolves on raising his family.
Transliteration:
"Kutiseyval ennum oruvarkuth theyvam
Matidhatruth thaanmunth thurum"
Comments
Post a Comment