கற்பெனப்படுவது....
கற்பெனப்படுவது..
கற்பெனப்படுவது ஓர் ஒழுக்கம்.
கட்டுப்பாடு.
ஒரு விழுமியம் எப்படி வேண்டுமானாலும்
எடுத்துக்கொள்ளலாம்.
இந்தக் கட்டுப்பாடும் ஒழுக்கமும்
ஒரு விழுமியமாகக் கடைபிடிக்கப்படும்போதுதான்
வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும்.
ஒழுக்கம் இல்லாத வாழ்க்கை சிறப்பான
வாழ்க்கையாக கருதப்பட மாட்டாது.
அந்த ஒழுக்கமும் கட்டுப்பாடும்
இருபாலாருக்கும் உரியதாக இருக்க
வேண்டும்.
ஆனால் கற்பு என்ற சொல் பெண்ணுக்கு
மட்டுமே உரியது என்பது போன்ற ஒரு பிம்பம்
கட்டமைக்கப்படுகிறது.
அதனால்தான் கண்ணகியை
கற்புக்கரசியாக்கிக் கொண்டாடும்
இந்தச் சமூகம் ஆண்களில் ஒருவரை
இவர்தான் கற்புக்கரசன் என்று
யாரையும் முன்னிருத்தவில்லை.
அதற்கான அவசியம் இல்லை
என்று நினைத்திருக்கலாம்.
"பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பெனுந்
திண்மை உண்டாகப் பெறின்"
என்கிறது குறள்.
கற்பு எனப்படும் பெருமைக்குரிய உறுதிப்பாடு
மட்டும் இருக்குமானால் அதைவிட
சிறந்த பண்பு ஒரு பெண்ணுக்கு வேறு எதுவும்
இருக்க முடியாது என்பது வள்ளுவர் கருத்து.
கற்பெனப்படுவது பெண்களுக்கே உரிய சிறந்த
பண்புகளுள் ஒன்று வள்ளுவரே
சொல்லிவிட்டார்.
பிறகு என்ன?
வள்ளுவர் வாக்கிற்கு மறு வாக்கு
ஏதும் உண்டா என்று ஒரு முடிவுக்கே வந்துவிட்டனர்.
இப்போது கற்பு பற்றி ஔவை என்ன
சொல்கிறார் என்று பார்ப்போம்.
"கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை"
என்கிறது கொன்றை வேந்தன்.
அதாவது கற்பெனப்படுவது சொன்ன சொல்
தவறாது நடந்து கொள்ளுதல் என்பது
ஔவையின் கருத்து.
சொன்ன சொல் தவறாது வாழ்தல் பெண்ணுக்கு
மட்டுமே உரியதாகுமா?
ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிய ஒரு
நற்பண்பு தான் சொற்திறம்பாமை.
இங்கே கற்பு எனப்படுவது ஆண்பெண்
இருவருக்கும் பொதுவானது.
இருவருமே தாங்கள் எடுத்துக்கொண்ட
உறுதிமொழியில் பிறழாதிருத்தலே
கற்பு என்று சொல்கிறார் ஔவை.
அத்தோடு ஔவை நிறுத்திக்கொள்ளவில்லை.
அடுத்தவரியிலேயே
"காவல்தானே பாவையர்க்கு அழகு"
என்றும் சொல்லி வைத்திருக்கிறார்.
தன்னை எல்லாக்காவலோடும்
காத்துக்கொள்ளுதல்
ஒரு பெண்ணுக்கு அழகு என்கிறார்.
கலித்தொகை
"பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்"
என்கிறது.
"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம்"
என்கிறார் தொல்காப்பியர்.
காதல் வாழ்க்கை தவறுதலாகப் போய்விடும்
பட்சத்தில் பெரியோர்கள் திருமணம்
என்ற ஒன்றை ஏற்படுத்தினர்.
திருமணத்தில் ஒன்று சேர்க்கப்பட்ட
இருவரும் ஒரு கட்டுப்பாட்டோடு
சேர்ந்து இருக்க வேண்டும் .
இதில் ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு
ஒரு ஒருநீதி
என்று இருப்பது ஞாயமில்லை.
அதனால்தான் திருமண பந்தத்தில்
இணையும்போது எடுக்கப்படும்
உறுதிமொழி பிறழாது நடந்து
கொள்ளுதல் ஆண் பெண் இருவருக்குமான
சிறந்த ஒழுக்கமாகக் கருதப்படுகிறது.
இதையேதான் பாரதியும் ,
"கற்பு நிலையென்று வந்தால்
இருகட்சிக்கும்
அஃது பொதுவில் வைப்போம்
வற்புறுத்திக் பெண்ணைக் கட்டிக்
கொடுக்கும்
வழக்கத்தைக் தள்ளி மிதித்திடுவோம்"
என்றார் பாரதி.
"ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்"
என்ற பாரதி,
"ஆணெல்லாங் கற்பைவிட்டுத் தவறு செய்தால்
அப்போது பெண்மையுங்கற் பழிந்திடாதோ
நாணமற்ற வார்த்தையன்றோ?
வீட்டைச் சுட்டால்
நலமான கூரையுந்தா னெரிந்திடாதோ?"
என்று ஆவேசமாகக் கேட்கிறார் பாரதி.
பாரதியின் இந்தக் கருத்துக்கள் யாவும்
கற்பு ஆண்பெண் இருபாலாருக்கும் உரியதாக
இருக்க வேண்டும் என்பதில் பாரதி
உறுதியாக இருந்திருக்கிறார் என்பதை
வலியுறுத்துகிறது.
இப்போது ஔவையின் கருத்துக்கு வருவோம்.
"கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை"
என்று பொதுவில் கூறப்பட்டுள்ளதால்
அது இருபாலாருக்கும் பொதுவானதாக
இருக்க வேண்டும் என்பதுதான்
ஔவையின் கருத்தாகவும்
இருந்திருக்க வேண்டும் என்பது புரிகிறது.
இருவரும் ஒருமித்த கருத்தோடு
இணைந்து வாழ்ந்தால்தான்
அது சிறப்பான வாழ்வாகக் கருதப்படும்.
அந்த வாழ்வில் சொற்றிறம்பாமை என்னும்
விழுமியம் இருவராலும்
பேணப்பட வேண்டும்.
அதுதான் கற்புநெறி தவறாத வாழ்வாக
இருக்கும்.
கற்பு என்பது சொற்றிறம்பாமை.
அது ஆணுக்கும் பெண்ணுக்கும்
பொதுவானது என்பதை மனதில்
வைப்போம்.
ஒத்தக் கருத்தில் உயர்ந்து நிற்போம்.
.
இப்படி ஆளாளாளுக்கு
ஆண் பெண் கற்பைப் பற்றி பேசியிருக்கின்றனர்
என்று சொல்லிச் சொல்லி
பெருமிதம் கொள்கின்றனர்.
காதல் கொண்டால் பிரியேன் பிரிந்தால்
உயிர் தறியேன் என்கிறாள் காதலி என்று
சொல்கிறார் வள்ளுவர்.
கணவனைப் பிரிந்த சில மணி
நேரங்களில் உயிர் விட்ட
இணைபிரியா தம்பதிகள் ஒருசிலரைச்
சொல்லிச்சொல்லி பெருமிதம் கொள்கிறோம்.
இது மனிதர் களிடேயே மட்டும்தான்
இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடக்குமா?
ஏன் விலங்குகளிடம் அப்படிப்பட்ட காதல்
இருக்கக் கூடாதா என்ன?
ஆமாம்..நாங்களும் மனமொத்த காதலர்கள் தான்.
எங்களுக்கும் காதல் உண்டு கற்பு உண்டு.
பிரிந்தால் உயிர்வாழ முடியாது
என்ற உணர்வும் உண்டு
என்று வாழ்ந்த இணையர்கள்
வாழ்ந்த பூமி இது.
யாரப்பா அந்த மனமொத்த காதல் இணையர்
என்ற அறிய ஆசையாக இருக்கிறதல்லவா?
நம்ம முன்னோர்கள் தாங்க...அதாவது
குரங்கு வாழ்க்கையும் இப்படிப்பட்ட
ஒரு கற்பு வெறியோடு இருந்ததாம்.
இனி மனிதக் காதலுக்காக சொல்லப்பட்டது
என்று பெருமைப்பட்டு நின்ற வேளையில்
அட போய்யா உங்கள் காதலை விட
எங்கள் காதல் எந்தவிதத்திலும்
குறைந்ததில்லை என்று சொல்லி
நிற்கிறது ஒரு காதல் குடும்பம்.
பிரம்மா அந்த காதலர்கள் என்று
அறிந்துகொள்ள ஆவலாக
இருக்கிறதில்லையா?
வாருங்கள்
கருங்கண் தாக்கலை
பெரும்பிறி துற்றெனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ்
கிளைமுதல் சேர்த்தி
ஓங்குவரை அடுக்கத்துப்
பாய்ந்து உயிர் செகுக்கும்
சாரல் நாட!
வாரல் வாழியோ!
வருந்துவம் யாமே!
குறுந்தொகை - 69வது பாடல்
இருள்சூழ்ந்த நேரம்.
மரத்திற்கு
மரம் தாவி விளையாடிக்கொண்டிருக்கிறது
ஒரு கடுவன்.
எதிர்பாராதவிதமாக தவறிவிழ
உயிர் போய்விடுகிறது.
கடுவன் பிரிவைத் தாங்கமுடியா
மந்தி அதாவது பெண் குரங்கு
வேதனையால் அரற்றுகிறது.
என்ன செய்வது?
கையில் குட்டி இருக்கிறது.
தன்னால் கடுவன் இல்லாமல்
இனி வாழ முடியாது என்ற நிலை.
உடனே குட்டியைத்
தூக்கி ஒரு பாதுகாப்பான இடத்தில் ஒப்படைத்துவிட்டு
தானும் மலையிலிருந்து விழுந்து
உயிரை விட்டு விடுகிறது.
இப்படி தலைவன் பிரிந்தால்
உயிர்
வாழா மந்திகள் வாழும்
ஊர்.
மந்தியே தன் தலைவனைப்
பிரிந்தால் உயிரை விட்டு விடுகிறது.
சாரல் நாட!
நீயும் கவனமாக இரு.
நீ வரும் வழி ஆபத்து நிறைந்தது.
அப்படியொரு இடையூறு உனக்கும்
ஏற்பட்டுவிட்டால் தலைவி
உயிர்வாழ மாட்டாள் என்பதை
தலைவனுக்கு உணர்த்துகிறாள் தோழி.
யாகிவிட்டது.
Comments
Post a Comment