எலுமிச்சம்பழங்கள் எத்தனை
எலுமிச்சம்பழங்கள் எத்தனை
பூம்பாறை என்று ஒரு அழகிய ஊர்.
அந்த ஊரில் ஒரு பணக்காரர் வாழ்ந்து வந்தார். ஒருநாள் அவர் தனது வேலையாள் ஒருவனைக் கூட்டிக்கொண்டு கால்வாய்க் கரையோரம் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பக்கத்தில் இருந்த தோட்டத்தில் நிறைய எலுமிச்சம்பழம் பழுத்துத் தொங்குவதைப் பார்த்தார்.
உடனே தன் வேலைக்காரனிடம்
"போய் எனக்கு ஒரு எலுமிச்சம்பழம் பறித்து வா எ"ன்றார்.
"முடியாது சாமி "என்றான் வேலைக்காரன்.
"ஏன் முடியாது?"
"இந்தத் தோட்டத்திற்கு ஐந்து வாயில்கள் உள்ளன.
உள்ளே செல்ல வேண்டுமானால் ஐந்து
காவலாளிகளையும் கடந்துதான்
செல்ல வேண்டும்."
"எது எப்படியோ நீ எனக்கு ஒரு எலுமிச்சம்பழம் பறித்து வந்தே ஆக வேண்டும் "என்று
கட்டளையிட்டார் பண்ணையார்.
வேலைக்காரனும் வேறு வழி இல்லாது
ஒப்புக் கொண்டான்.
நேரே முதல் வாயிலில் நின்ற வேலைக்காரனிடம்
போய் எலுமிச்சம் பழம் பறிக்க அனுமதி கேட்டான்.
வேலைக்காரன் பேராசைக்காரன்.
"நீ எத்தனை எலுமிச்சம் பழங்கள் வேண்டுமானாலும் பறித்துக்கொள்.
ஆனால் ஒரு நிபந்தனை "என்றான்.
"என்ன நிபந்தனை?"
"நீ பறித்து வரும் பழங்களில்
பாதியை எனக்குத் தந்துவிட வேண்டும்."
"அவ்வளவுதானே வந்துவிடுகிறேன்.
கூடுதலாக என்னிடம் இருக்கும் பழங்களிலிருந்தும் ஒன்றைத் வந்துவிடுகிறேன். போதுமா?"
என்று காவலாளியிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளே சென்றான்.
இரண்டாவது வாயிலில் நிற்கும் காவலாளியிடம் சென்றான்.
அவனிடமும் இதே ஒப்பந்தத்தைத் செய்து கொண்டான்.
இப்படியே மூன்றாவது நான்காவது ஐந்தாவது என்று அனைவரிடமும்
இதே ஒப்பந்தத்தைச் செய்துவிட்டு
உள்ளே சென்று எலுமிச்சம் பழங்களைப் பறித்துக் கொண்டு வெளியே வந்தான்.
வரும்போது ஒப்பந்தப்படி ஐந்து காவலாளிகளுக்கும் உரிய எலுமிச்சம்பழங்களைக் கொடுத்துவிட்டு கையில் ஒற்றை எலுமிச்சம்பழம் எடுத்து வந்து பண்ணையாரின் கொடுத்தான்.
இப்போது எனக்குள் ஒரு கேள்வி.
இந்த வேலைக்காரன் மொத்தம் எத்தனை எலுமிச்சம் பழம் பறித்திருப்பான்.?
தான் பறித்து வந்து பாழங்களிலிருந்து
ஐந்து காவலாளிகளுக்கும் அவர்கள் பங்காக
எத்தனை பழங்கள் கொடுத்திருப்பான்?
மீதி ஒரு பழம் கையில் இருக்கிறது.
பாதி கூட்டல் ஒன்று.
பாதியிலும் பாதி கூட்டல் ஒன்று
அந்தப் சாதியிலும் கூட்டல் ஒன்று
இப்படி ஐந்து பேருக்கும்
பிரித்துக் கொடுக்க வேண்டும்.
யாரிடம் கேட்பது?
அங்குமிங்கும் அலைய அகப்பட்டார்
கணக்குப் புலி ஒருவன்.
என் சோகக் கதையை அவனிடம் சொல்ல
அவனும் பூ..இவ்வளவுதானா என்று மெல்ல நகைத்தபடி விடையை எழுதி என் கையில் தந்துவிட்டு போய்விட்டான்.
விடை எழுதிய நாளை விரித்துப்
பார்த்து அசந்து போனேன்.
இது எப்படி இவனுக்கு மட்டும்..
படித்தேன்....படித்தேன்
உங்கள் முன்னர் வைத்தேன்.
வேலைக்காரன் பறித்து வந்த பழங்களின் எண்ணிக்கை 94.
முதல் வாயில் காவலாளிக்கு ஒப்பந்தப்படி பாதி பழமங்களைக் கொடுக்க வேண்டியிருந்தது .
94-இல் பாதி 47
தன் பங்கிலிருந்து ஒன்று
கொடுக்கவேண்டும் .
அப்படியானால் 47+1 =48
பழங்கள் தந்தான்.
இப்போது வேலைக்காரன் கையில் 46 பழங்கள் இருந்தன.
இரண்டாவது வாயிற்காரனுக்கு
ஒப்பந்தப்படி 23 பழங்களும் தன் பங்கிலிருந்து ஒரு பழமுமாக 24 பழங்களைத் தந்தான்.
மீதி 22 பழங்கள் இருந்தன.
மூன்றாவது காவலாளியிடம்
செய்து கொண்ட ஒப்பந்தப்படி 11 பழங்களும் தன் பங்கிலிருந்து ஒரு பழமுமாக 12 பழங்களைத் தந்தான்.
மீதி 10 பழங்கள் இருந்தன.
நான்காவது காவலாளியிடம் சொன்னபடி 5 பழங்களும் கூடுதலாக தன் பங்லிருந்து ஒரு பழமுமாக 6 பழங்களைத் தந்தான்.
மீதி 4 பழங்கள் இருந்தன.
ஐந்தாவது காவலாளியிடம் செய்துகொண்ட ஒப்பந்தப்படி
2 பழங்களும் தன் பங்கிலிருந்து ஒரு பழமுமாக 3 பழங்களைத் தந்தான்.
இப்போது வேலைக்காரன் கையில் எஞ்சி இருந்தது ஒரே ஒரு பழம்.
அந்த ஒரு பழத்தை கொண்டு போய்
பண்ணையாரிடம் கொடுத்தான்.
என்று எழுதியிருந்தது.
ஆமாம் ..சரியாகத்தானே பிரித்துக் கொடுத்திருக்கிறான்.
Comments
Post a Comment