என் கொணர்ந்தாய் பாணா நீ

என் கொணர்ந்தாய் பாணா நீ


கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பார்களே அதுபோல பாணன் வீட்டுப் பாணினியும் புலமையில் குறைந்தவளில்லை.

பாணன்  ஒருவன் ஒரு வள்ளலைப் பாடி

பொருள் பெற்று வருகிறேன் என்று பாணினியிடம் சொல்லி விட்டுச் சென்றான்.

ஆனால் வரும்போது வெறும் கையோடு வருகிறான்.

வெறுங்கையை வீசிக்கொண்டு பாணன்  வீட்டிற்கு வந்ததும் பாணினிக்குக் கோபம்.

"இன்றும் வெறுங்கை தானா?"

என்று நக்கலாகக் கேட்டாள்.

புன்னகைத்த பாணன்,

"இல்லை ...இல்லை கொண்டு வந்திருக்கிறேன்"

என்றான்.

"என்ன கொண்டு வந்தீர்கள்? காட்டுங்கள்." ஆர்வமாக

கேட்டாள் பாணினி.

பாணனுக்கு பல நாட்களாக

தன் மனைவியோடு சொல் விளையாட்டு 

விளையாடிப் பார்க்க ஆசை.

அதற்கான நல்வாய்ப்பு இப்போது

கிடைத்திருக்கிறது.

நழுவ விட்டுவிடுவானா?


ஒரு நமட்டுச் சிரிப்போடு பாணினியைப்

பார்த்தான்.

அவள் கண்கள் அவன் கையில் ஏதாவது

இருக்கிறதா என்று தேடுவதிலேயே குறியாக இருந்தன.

அவளுடைய ஆர்வத்தைக் கண்டு பாணனுக்கு உள்ளுக்குள்  ஒரு சிரிப்பு.

"வம்பதாம் களபம்  

கொண்டு வந்திருக்கிறேன்" என்றான்..

"என்னது வம்பதாம் களபமா?

அதாவது களபம் என்றால் கயிறு அணிந்த யானை என்பது அதன் பொருள்.

ஆனால் அவள்...

"சந்தனத்தைத்தான் அந்த வள்ளல் கொடுத்தாரா?

நல்லது.... அப்படியானால் அதை நீயே பூசிக்கொள் "என்று கோபமாக சொல்லிமுகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

களபம் என்றால் வாசனையுடைய சந்தனம் என்று இன்னொரு பொருளும் உண்டு. அது பாணினிக்குத் தெரிந்திருக்கிறது.

அதனால்தான் அவள் சந்தனம் என்று புரிந்து கொண்டாள்.

"சந்தனம் இல்லை, மாதங்கம் 

கொண்டு வந்திருக்கிறேன்" என்று மாற்றிச் சொல்லிப் பார்த்தான்

பாணன்.

 மாதங்கம் என்பது யானையின்

மற்றொரு பெயர் என்பது 

அவளுக்குப் புரியவில்லை .

"ஆ...மா. ..தங்கமா

 நிறைய  தங்கம் பரிசாகப் பெற்று

வந்திருக்கிறீர்களா?

 அது போதும்.

 இனி நம் துன்பம் எல்லாம் தீர்ந்துவிடும்.

 நாம் மகிழ்ச்சியாக வாழலாம்"

என்று மகிழ்ச்சியில் 

திக்குமுக்காடி நின்றாள்.

பாணனுக்கு தான் தங்கம் கொண்டுவரவில்லை  என்பதை எப்படிச்

சொல்லிப் புரிய வைப்பது என்று தெரியவில்லை.

சற்று மாற்றிப் சொல்லிப் பார்ப்போம் என்று,

" பம்பு சீர் வேழம்  கொண்டு வந்தேன்" என்றான்.

அந்த அப்பாவிப் பெண்ணுக்கு 

பம்பு சீர் வேழம் என்றால் நிறையப் புகழ் உடைய யானை என்று சொல்கிறான் என்பது  நினைவுக்கு வரவில்லை.

வேழம் என்றால் கரும்பு என்பதுதான் நினைவுக்கு வந்தது.

உடனே அவள் ,'நல்ல கரும்புதான் பரிசாகக் கிடைத்ததா.?

சரி...ஒன்றுமில்லாததற்கு அதாவது கிடைத்ததே 

அதையாவது கொண்டு வாருங்கள்.. முறித்துச் சாப்பிடலாம்" என்றாள் 


"கரும்பு இல்லையம்மா பகடு

கொண்டு வந்திருக்கிறேன் பகடு " என்றான்.

 யானையின் மற்றொரு பெயர் பகடு.

சற்று நேரம் திருதிருவென்று

முழித்த பாணினிக்கு பகடு என்றால்

எருமை என்பது நினைவுக்கு வர,

"வள்ளல் உனக்கு எருமைக்கடாவையா கொடுத்தார்? 

பரவாயில்லை, 

அதுவும் நல்லதுதான்

நம் வயலை உழுவதற்கு அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்"

என்று சொல்லி சற்று  ஆறுதல்பட்டுக் கொண்டாள்.

எப்படித்தான் புரிய வைப்பது  என்று 

புரியாத பாணன்,

"ஐயோ ....நான் கொண்டு வந்திருப்பது  எருமை இல்லை. கம்பமா...கம்பமா  "என்றான்.

கம்பமா என்றால் அசைகின்ற யானை

என்று பொருள்.

பாணினியும் விடுவதாகயில்லை 

" ஓ, கம்ப மாவா ?"என்று 

ஆச்சரியமாக கேட்டாள்.

"கம்பம் மாவு

மட்டும் தான் பரிசாகக் கிடைத்ததா?

போகட்டும் ....அதையாவது சீக்கிரம் தாருங்கள் .அதைவைத்து நல்ல களி கிண்டித் தருகிறேன்.

தின்று பசியாற்றிக் கொள்வோம் " என்றாள்.

" உனக்கு ஒன்றுமே புரியவில்லை.

நான் என் செய்வது? கம்பு மாவு இல்லை, 

கைம்மா கொண்டு வந்திருக்கிறேன்

கைம்மா"என்று கோபத்தில் உரக்கக் கத்தினான்.

"இதற்கு எதற்கு கத்துகிறீர்கள்.?

யானை கொண்டு வந்திருக்கிறேன் என்று நேரடியாகவே சொல்ல வேண்டியதுதானே.

கைம்மா என்றால்  கையை உடைய விலங்கு என்பது எனக்குத் தெரியாதா என்ன ....!

அந்த யானையை வைத்துக்கொண்டு 

நாம் என்ன செய்வது?

வயிற்றுப்பசியைப்  போக்கவா முடியும்.?

இல்லை போருக்குத்தான் போக முடியுமா?" என்று அப்படியே கலங்கி  போய்

தலையில் கை வைத்தபடி 

தரையில் அமர்ந்தாள்.

"பூவோடு சேர்ந்த நாரும் 

மணம் பெறும் என்பார்கள்.

பாணன் மனைவி என்றால் சும்மாவா ?

நீயும்  அசத்துகிறாயடிப்  பெண்ணே!"என்று மனைவியைப் பார்த்து

மெல்லப் புன்னகைத்தான் பாணன்.

பாணனும் பாணினியும் 

 யானையை வைத்து விளையாடிய

சொல்விளையாட்டுப் பாடல் இதோ உங்களுக்காக....

"இம்பர் வான் எல்லை இராமனையே பாடி

என் கொணர்ந்தாய் பாணா நீ“, என்றாள் பாணி

வம்பதாம் களபமென்றேன் – பூசுமென்றாள்

மாதங்கமென்றேன் - யாம் வாழ்ந்தோமென்றாள்

பம்பு சீர் வேழமென்றேன் - தின்னுமென்றாள்

கம்பமா என்றேன்-நற்களியாமென்றாள்

கைம்மா என்றேன்-சும்மா கலங்கினாளே 

யானைக்கு 

இத்தனை பெயர்களா  என்று நாம்

ஆச்சரியப்பட்டு நிற்க

அதே சொல்லுக்கு மாற்றுப்  பொருளும் உண்டு என்று மாற்றி யோசிக்க வைத்த பாணினியையும் கண்முன்னர் கொண்டுவந்து நிறுத்தி  கவித்துவமாக காட்சிகளை நகர்த்திய   அந்தகக் கவி வீரராகவ முதலியாரின் புலமையை என்னவென்பது!

ஒற்றைச் சொல்லில் உரையாடல்.

நாடகமாக காட்சிகள் நகர்வு...

சந்தனமா … பூசிக்கோ.

 கரும்பா -நீயே தின்னு. 

எருமைக் கடாவா  -வயல்ல உழு.

கம்ப மாவா-.களி கிண்டு

கைம்மாவா...

அட போய்யா யானைதானே கொண்டு வந்திருக்கிறாய் என்று புரியாமல் புரிந்தது போல காட்சிகளை நகர்த்தி

 பாணினியின்

கோபத்தைக்கூட  அழகாக வெளிப்படுத்த

வைத்திருக்கிறார் புலவர்.

களபம் சந்தனமானதும்

மாதங்கம்  மா தங்கமானதும்

வேழம் எருமை ஆனதும்

கம்பமா கம்பம் மாவாகிப் போனதும்

கைம்மா யானையாகி 

கையை ஆட்டி ஆட்டி 

கண்முன்

நடப்பதுமாய்க் காட்சிகளை

கண்முன்னர் கொண்டு வந்து நிறுத்தி

பாடலோடு கட்டி இழுத்துச் சென்று

யானையோடு விளையாட

வைத்திருக்கிறார் 

இந்த அந்தகக் கவி .


அருமையான சொல் விளையாட்டு... இல்லையா?

























மன்னன்

பல பொருள் குறித்த ஒரு திரிசொல் - செய்யுள்

‘மரம்’ என்ற ஒரு சொல்லை வைத்து பல்வேறு விதமான பொருள்களை விளக்கி உள்ளார் சுந்தரக் கவிராயர்.

மரமது மரத்திலேறி மரமதைத் தோளில் வைத்து

மரமது மரத்தைக் கண்டு, மரத்தினால் மரத்தைக் குத்தி,

மரமது வழியே சென்று, வளமனைக் கேகும் போது

மரமது கண்ட மாதர் மரமுடன் மரமெடுத்தார்

மரமது - அரச மரம் (அரசு) - இங்கே அரசு என்பது அரசனைக் குறிக்கிறது.

மரத்திலேறி - மா மரம் = மா என்பது குதிரை எனப் பொருள் படுகின்றது.

மரமதைத் தோளில் வைத்து - வேல மரம் (வேல்). அதாவது அரசன் குதிரையிலேறி, வேலைத் தோளில் வைத்துச் செல்கின்றான். அப்போது,

மரமது - மீண்டும் அரசு

மரத்தைக் கண்டு - வேங்கை மரம் - இங்கே வேங்கை என்பது வேங்கைப் புலியைக் குறிக்கிறது.

மரத்தினால் - மீண்டும் வேல் -

மரத்தைக் குத்தி - மீண்டும் வேங்கை. அதாவது அரசன் வேலினால் புலியைக் குத்துகின்றான். பின்னர்,

மரமது வழியே சென்று - மீண்டும் அரசு, வளமனைக்கேக்கும்போது, அதாவது அரசன் வீடு நோக்கிச் செல்லும்போது,

மரமது கண்ட மாதர் - மீண்டும் அரசு, அதாவது அரசனைக் கண்ட பெண்கள்,

மரமுடன் - ஆல் மரம்

மரமெடுத்தார் - அத்தி மரம்

அதாவது ஆல் + அத்தி = ஆலத்தி, அரசனைக் கண்ட பெண்கள் ஆலத்தி (ஆரத்தி) எடுத்தார்.

இப்பாடலின் பொருளை முழுமையாகக் கூறுவதாயின்:

அரசன் ஒருவன், தன் தோளிலே வேலை ஏந்தி, குதிரையில் ஏறி, வேட்டைக்குச் சென்றான். அங்கு ஒரு வேங்கைப்புலியைக் கண்டு, தன் வேலால் குத்திக்கொன்றான். பின்னர் அரசன் தனது அரண்மனைக்குச் சென்றான். புலியைக் கொன்று வெற்றிவீரனாகத் திரும்பிவரும் அரசனைக் கண்ட பெண்கள் அரசனுக்கு ஆலத்தி (ஆரத்தி) எடுத்து வரவேற்றனர்.

‘திருவாவினன்குடி’ (திரு ஆவினன்குடி) என்ற ஒரு சொல்லை வைத்து பல்வேறு விதமான பொருள்களை விளக்கியுள்ளார் அருணகிரிநாதர். கந்தர் அந்தாதியில் உள்ள 100 செய்யுள்களுமே இவ்வாறு அமைந்தவைகளே.

திருவாவி னன்குடி பங்காள ரெண்முது சீருரைச

திருவாவி னன்குடி வானார் பரங்குன்று சீரலைவாய்

திருவாவி னன்குடி யேரகங் குன்றுதொ றாடல்சென்ற

திருவாவி னன்குடி கொண்டதண் கார்வரை செப்புமினே

திரு ஆவி நன்குடி பங்காளர் எண் முது சீர் உரை

(ச) திர் உவாவினன் குடி வான் ஆர் பரங்குன்று சீரலைவாய்

திரு ஆவினன்குடி ஏரகம் குன்றுதோறாடல் சென்று

(அ) திர் உவா இனன் குடிகொண்ட தண்கார்வரை செப்புமினே.

திரு ஆவி - லட்சுமி தேவிக்கு நாயகனாகிய திருமாலும்,

நன்குடி பங்காளர் - நல்ல பெண் தெய்வமாகிய உமையை இடப்பக்கத்தில் வைத்திருக்கும் சிவபெருமானும்,

எண் - மதிக்கும் விதத்தில்,

முது - பழமையான வேதத்திற்கு,

சீர் உரை - சிறந்த பொருளை விளக்கிய,

சதிர் - சாமர்த்தியம் உடைய,

உவாவினன் - இளங்குமாரனாகிய முருகப்பெருமான்,

குடி - நிரந்தரமாக வாசம் செய்யும்,

வான் ஆர் பரங்குன்று - வானளாவும் திருப்பரங்குன்றம்,

சீர் அலைவாய் - சிறந்த திருச்செந்தூர்,

திருவாவினன் குடி - திரு பழநி,

ஏரகம் - சுவாமி மலை,

குன்றுதோறாடல் - அந்தக் கந்தக் கடவுள் திருவிளையாடல் செய்த பல குன்றுகள்,

சென்று - நடந்து,

அதிர் - பூமி அதிர்கின்ற,

உவா இனன் - யானைக் கூட்டங்கள்,

குடி கொண்ட - வாழ்கின்ற,

தண் - குளிர்ந்த,

கார்வரை - கருமேகங்கள் சூழ்ந்த பழமுதிர்சோலையையும்,

செப்புமின் - துதி செய்யுங்கள்.

‘மாறுதலை’ என்ற ஒரு சொல்லை வைத்து பல்வேறு விதமான பொருள்களை விளக்கியுள்ளார் காளமேகப்புலவர்.

சங்கரர்க்கு மாறுதலை சண்முகர்க்கு மாறுதலை

ஐங்கரர்க்கு மாறுதலை யானதே – சங்கைப்

பிடித்தோர்க்கு மாறுதலை பித்தாநின் பாதம்

கருத்துகள்

Popular Posts