கவிதையே நீதானே அம்மா

     
        
கன்னிக் குடம் உடைத்து
கன்னி என்னைக்
கண் திறக்க வைத்து
கன்னி முத்தம் 
கன்னத்தில் தந்து
கன்னித் தமிழ்ப்  பேசி 
கன்னிநடை பயிற்றுவித்து
கன்னித் திங்கள் காட்டி 
கன்னி மதிசூழ் முகம் 
கன்னிவிடாமல்  காத்த
 கன்னி இளஞாழலான 
 கனியம்மா உன்னோடு
 கன்னித் தமிழ் மொழியில்
 கன்னி நெக்குருகி பேசிய
 கவின்மிகு நினைவின்
களிப்பில் மிதக்கிறேன்
கண்டாங்கிக்குள் காலமெல்லாம் கண்மூடி கிடக்க நினைக்கிறேன்
கவித்தார் காலடியில் வைத்து
காணத் தவிக்கிறேன்-என்
கவிதையே நீதானே
அம்மா!


அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகள்.
      

Comments

  1. மிக அருமையான கவிதை.
    அன்னையர் தின வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment

Popular Posts