கடலோடா கால்வல் நெடுந்தேர்...

கடலோடா கால்வல் நெடுந்தேர்....

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து"

                      குறள் : 496


கடலோடா - கடலில் ஓடாது
கால்வல் - வலிமையான சக்கரம்
நெடுந்தேர் - உயரமான தேர்
கடலோடும்- கடலில் ஓடும்
நாவாயும் - கப்பலும்
ஓடா - ஓடாது
நிலத்து - நிலத்தின் மீது


பெரிய சக்கரங்களை உடைய தேர் கடலில்
ஓடாது.கடலில் ஓடும் கப்பல்
நிலத்தில் ஓட முடியாது.


விளக்கம்:

பகைவர்களை 
வெல்ல வேண்டும் என்றால்
இடமறிந்து செயல்படத் தெரிந்திருக்க
வேண்டும். ஏற்ற இடத்தைத்
தேர்ந்தெடுத்து ,அந்த இடத்திலிருந்து
ஒரு செயலைச் செய்தால் மட்டுமே 
நாம் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.


எங்கே ?எதனை ?எப்போது
செய்ய வேண்டும் என்று தெரிந்து
செயல்படுபவர்களுக்கு எளிதாக
வெற்றி கிட்டும்.


 நிலத்தில் கப்பல் விடுவேன்
 என்றால் கூடுமா?
அதுபோல கடலில் தேரே இழுத்துச்
செல்வேன் என்றால் இயலக்கூடிய
செயலாகுமா?
தேர் என்றால் நிலத்தில்தான்
செல்லும்.
கப்பல் என்றால் கடலில் தான்
செல்லும்.

இடமறிந்து செயல்படுவது
மிகவும் முக்கியமானது .
அதுதான் ஒரு மன்னனுக்கு
வெற்றியைத் தேடித்தரும் முக்கிய
காரணியாக இருக்கும்.

எவ்விடத்தில் எதைச் செய்ய வேண்டும்.
எவ்விடத்தில் எதைச் செய்யக்கூடாது 
என்ற புரிதலோடு
செயலில் இறங்கினால் 
எளிதாக வெற்றி பெற்றுவிட முடியும்
என்கிறார் வள்ளுவர்.

 
தான் சொல்ல வந்த கருத்து
இடமறிந்து செயல்பட வேண்டும்
என்பதாகும்.
ஆனால் அதனைச் சொல்லாது
அதனை ஒட்டியிருக்கும் பிறிதொன்றைச்
சொல்லி தான்
சொல்ல வந்த கருத்தைச்
விளங்க வைத்திருப்பதால்
இது பிறிது மொழிதல் அணி.English couplet :


The lofty car with mighty wheel sails not o'er watery main
The boat that skims the sea runs not on earth's hard plain.


Explanation :

Wide chariots with mighty wheels ,will not
run on the ocean neither will ships
that the traverse ocean move on the
earth.Transliteration :

"Katalootaa kaalval Netundher katalotum
 Naavaayum otaa  nilaththu "

Comments

Popular Posts