யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்....

யாதெனின் நீங்கியான் நோதல்....


"யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன் "

          குறள் : 341

யாதெனின் யாதெனின் -யாதானுமொரு பொருளின்மேல்
நீக்கியான்- விருப்பு கொள்ளாதிருப்பவன்
நோதல்- வருந்துதல்
அதனின்  அதனின்- அந்தப் பொருளின்மூலமாக
இலன் - இருக்கப் போவதில்லை

ஒருவன் எந்தப் பொருளின்மேல் விருப்பம்
இல்லாதிருக்கிறானோ  அந்தப்
பொருளால் அவனுக்குத் துன்பம்
ஏற்படப் போவதில்லை.

விளக்கம் :

ஆசையே எல்லாத் துன்பங்களுக்கும்
காரணம்.
ஒரு பொருளின் மீது அதிக ஆசை
வைத்திருந்தால் அந்தப் பொருள்
கிடைக்காவிட்டால் மனம்
சஞ்சலப்படும்.
அந்தப் பொருளை எப்படியாவது
பெற்றுவிட வேண்டும் என்ற
நாட்டத்தால்  வேறு எந்த சிந்தனையும்
எழாது.
யாரைப் பற்றியும்
நினைக்கத் தோன்றாது.
நம்மை வருத்தியாவது அதனைப்
பெற்றுவிட வேண்டும் என்ற
முயற்சி மட்டுமே முன்னால்
வந்து நிற்கும்.

அந்தப் பொருளுக்கான தேடலில்
இடையில் பல
இன்னல்கள் ஏற்படலாம்.
அதுவே அப்படிப்பட்ட ஓர்
ஆசை இல்லாமல் இருந்திருந்தால்....?

எந்தக் கேடும் விளையப் போவதில்லை.

அதனால்தான்,
"எந்தப் பொருளின்மீதும்
நீங்கள் அதிக ஆசை
வைக்காதிருங்கள்
நீங்கள் ஆசைப்படாத
ஒரு பொருளால் உங்களுக்கு
ஒருபோதும் தீமை ஏற்படப்
போவதில்லை "என்கிறார் வள்ளுவர்.

யாது + எனின் = யாதெனின்

English couplet :

"From whatever, aye, whatever man gets free, From what aye
from that no more of pain hath he"

Explanation :

Whatever thing ,a man has  renounced
by that thing he cannot suffer pain.

Transliteration :

"Yadhanin yadhaniin  neengiyaan nodhal
Adhanin adhanin ilan"

Comments

Popular Posts