தெரிந்த இனத்தோடு தேர்ந்தெண்ணி

தெரிந்த இனத்தோடு தேர்ந்தெண்ணி....


"தெரிந்த இனத்தோடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்"

           குறள் :. 462

தெரிந்த -தேர்ந்தெடுத்த
இனத்தோடு- இனத்துடன்
தேர்ந்து - ஆராய்ந்து
எண்ணி- கருதி
செய்வார்க்கு - செய்பவர்க்கு
அரும்பொருள் - எய்தற்கரிய பொருள்
யாதொன்றும் -எதுவும்
இல் - இல்லை


ஒரு செயலைப்பற்றி தெரிந்தவர்களைத்
தேர்ந்தெடுத்து அவர்களோடு சேர்ந்து 
ஒரு செயலில் ஈடுபடுவோர்க்கு
செய்ய முடியாத செயல் என்று
ஒன்றுமில்லை.


விளக்கம் :

ஒரு செயலைச் செய்வதற்கு முன்பாக
அந்தச் செயலைப்பற்றி நன்கு
அறிந்து வைத்திருப்பவர்களைத் 
தேர்ந்தெடுக்க வேண்டும்.
அப்படிப்பட்டவர்களைத் தேர்ந்தெடுத்து
அவர்கள் கருத்துகளைப் பெற்று
தொடங்கும் செயலில்  எளிதாக 
இருக்கும்.

அத்தோடு என்கடன் முடிந்துவிட்டது
என்று இருக்கக் கூடாது

தேர்ந்தெடுத்த ஆட்களிடம்
பணியை ஒப்படைத்தாகிவிட்டது.
எல்லாம் நல்லபடியாக முடியும்
என்று நம் பங்களிப்பு இல்லாது
இருத்தல் கூடாது.

நாமும் அதனைப்பற்றி எல்லா
கோணங்களிலும் ஆய்வு செய்ய வேண்டும்.
அப்போதுதான் அதன் நிறை குறைகள் மற்றும்
சிக்கல்கள் நமக்குத் தெரிய வரும்.
அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைக்
கண்டறிய வேண்டும் என்ற எண்ணமும்
வரும்.இவை எல்லா கோணங்களிலும்
ஆராய்ந்த பின்னர் செய்யப்படும்
செயலில் மட்டுமே
 முழுமையான வெற்றியை
எதிர்பார்க்க முடியும்.

செயல்திறன் மிக்கவர்களோடு
சேர்ந்து நன்கு ஆராய்ந்த பின்னர்
தொடங்கப்படும் எந்தவொரு செயலும்
வெற்றிபெறுவது உறுதி.


இதைத்தான்,

"செயலைச் பற்றிய அறிவு கொண்ட
திறமையாளர்களைச் சேர்த்துக்கொண்டு 
பின்னர் தாமும் அச்செயலை
முழுமையாக அலசி ஆராய்ந்துப் பார்த்து
தொடங்கும் எந்தவொரு செயலும்
எளிதாகக் கைகூடும்"
என்று வள்ளுவர் கூறுகிறார்.


English couplet:

"With chosen friends deliberate next use the
private thought then act
By those who thus proceed all works
with ease are wrought "


Explanation :

There is nothing too difficult to be attained by
those who before they act, reflect well
themselves, and throughly consider the matter
with chosen friends.


Transliteration :

Therindhu inaththu Therenfhennich cheyvaarkku
Arumporul yaadhondrum ill
Comments

Popular Posts