பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்து


வானிலவோ  தாரகையோ
வாசம்தரு தேன்மலரோ - கோல்டா
சில்லென்று சிரித்த நாள்
சீர்மிகு பிறந்தநாள் ஆனதுவோ
ஆராரோ வாழ்த்த அகவைநாள் 
அளவில்லா அகமகிழ் தந்ததுவோ!
கட்செவியேறி 
காதோரம் கவியோதி
கரமதில் மலர்தனைத் தந்து
பாட்டியுனைச் சீராட்டுகிறேன்
கலை பல கற்று
விருதுகள் சுமந்து
விஞ்சும் மதி யுண்டு
மிஞ்சும் மகிழ் வுண்டு
கொஞ்சும் நலம் பூண்டு
நெஞ்சம் விழைவன கண்டு
பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரம் ஆண்டு 
வாழ்க!
வாழும் பரம்பரையெனும்
நற்பெயர் கொண்டு!
 

Comments