கூற்றத்தைக் கையால் விளித்தற்றால்.....


கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ....


"கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்"

              குறள் :894

கூற்றுத்தை - எமனை
கையால்- - கையைக் காட்டி
விளித்தற்றால்-விளிப்பது போன்றது
ஆற்றுவார்க்கு- வலிமையுடையவர்க்கு
ஆற்றாதார்-வலிமையில்லாதார்
இன்னா - தீங்கு
செயல்- செய்தலாகும்


ஆற்றல் இல்லாத ஒருவர் 
ஆற்றல் உடையவருக்கு எதிராக 
தீங்கிழைப்பது   , தாமாகவே  அழிக்க வல்ல
 எமனை  வலிய  கைகாட்டி
 அழைப்பது போன்றதாகும்.


விளக்கம்: 

எப்போதுமே  ஒத்த வலிமையுடையவரோடு
மோத வேண்டும்.
வலிமை இல்லாதவரோடு போரிடுவது
அரசர்களுக்கும் அழகாகாது. சாதாரண 
மக்களுக்கும் அழகாகாது.
அரசனாக இருந்தால் எதிரி தன்னைவிட
படைபலம் மிக்கவனாக இருந்தால்
போரிடாமல் இருப்பது நலம்.

அதேபோன்று சாதாரண மனிதர்களும்
  தன்னைவிட வலிமை 
அதிகம் உடையவரோடு மோத நினைத்தால்
அது அழிவில்தான் கொண்டு விடும்.
எதிராளியின் வலிமையைத் தெரிந்திருந்தும்
அவனை எதிர்த்து நிற்க நினைப்பது
எமனை நாமாகவே கையசைத்து வா
என்று அழைப்பதற்கு ஒப்பானதாகும்.
அதாவது வலிய அழிவைத் 
தேடிக் கொள்வது போன்றது என்கிறார்
வள்ளுவர்.

வலியார் முன் எளியார் தாழ்மையாக
நடந்து கொள்வதுதான்
அவருக்குப் பாதுகாப்பானது.
நான் தாழ்ந்து செல்ல மாட்டேன்.
முட்டிப் பார்ப்பேன் என்றால் 
வலிய சென்று மண்டையை 
உடைத்துக்கொள்வது உறுதி.

வலிமை இல்லாதவர்
ஆற்றல் மிக்கவர்க்கு எதிராக
தீங்கிழைத்தால் அழிவு உறுதி
என்கிறார் வள்ளுவர்.

English couplet :

"When powerless man 'gainst men of power will evil deeds essay
T'is beck'ning with the hand for Death to seize them for its prey."

Explanation:

The weak doing evil to the strong  is 
like beckoning Yama to come and destroy them.

Transliteration :

"Kootraththaik  kaiyaal viliththatraal aatruvaarkku
Aatraadhaar innaa seyal"
 

Comments

Popular Posts