அன்பறிவு தேற்றம் அவாவின்மை...
அன்பறிவு தேற்றம் அவாவின்மை...
"அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு"
குறள் : 513
அன்பு- செயலின் மீது அன்பு
அறிவு - அறிவு
தேற்றம் -தெளிவான சிந்தனை
அவா -ஆசை
இன்மை -இல்லாதிருத்தல்
இந்நான்கும்- இந்த நான்கு பண்புகளும்
நன்குடையான்-நல்லபடியாகக் கொண்டவன்
கட்டே- அவனிடத்தே
தெளிவு-தேர்வு
அன்பு,அறிவு, தெளிவான சிந்தனை,
ஆசையின்மை ஆகிய இந்த நான்கு பண்புகளும்
நிலையாகக் கொண்டவனிடத்து
ஒரு செயலைச் செய்யும் தெளிவு இருக்கும்.
விளக்கம்:
பிற உயிர்கள்மாட்டு அன்பு இருக்க வேண்டும்.
எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு
செயல்படுத்தும் செயலறிவு இருக்க வேண்டும்.
எதைப்பற்றியும் தெளிவான
சிந்தனை வேண்டும்.
பிறர் பொருட்கள் மீது ஆசை
கொள்ளுதல் கூடாது.
இந்த நான்கு பண்புகளும் இருந்தால்
போதும்.
அவனால் ஒரு செயலைத்
தெளிவாகச் செய்ய முடியும்.
ஒரு செயலைச்
செய்வதற்கு ஆட்களைத் தேர்வு செய்யும்போது
செயலின் மீது அன்பு, அதைப்பற்றியஅறிவு,
தெளிவானச் சிந்தனை,
அவாவின்மை ஆகிய நான்கு பண்புகளும்
ஒருங்கே அமைத்திருக்கிறதா என்பதை
ஆராய்ந்து பார்த்து தேர்வு செய்ய வேண்டும்.
அன்பு என்பது தொழில்மீதுள்ள ஈடுபாடு.
அறிவு என்பது செயலறிவு அதாவது தான்
செய்யப்போகும் தொழிலைப் பற்றிய அறிவு.
தேற்றம் என்பது தனக்குக் கொடுப்பட்ட
பணியின் நோக்கம் ,அதை நான் எப்படிச்
செயல்படுத்தப் போகிறேன் என்பதைச் பற்றிய
தெளிவு.
ஆவாவின்மை என்பதாவது சுயவிருப்பு வெறுப்பு
இல்லாதிருத்தல் .அதாவது ஒருதலைப்பட்சமாக
செயல்படாதிருத்தல்
இந்த நான்கு பண்புகளும் ஒரு தேர்வாளரிடம்
இருக்க வேண்டும் .
இப்படிப்பட்ட பண்புகள் கொண்டவரிடம்
நம்பிக்கையோடு ஒரு பணியை ஒப்படைக்கலாம்
என்கிறார் வள்ளுவர்.
English couplet:
"A loyal love with wisdom , clearness,mind from avarice free
Who hath these four good gifts should ever trusted be"
Explanation :
Let the choice of a king fall upon him who
largely possesses those four things, love, knowledge, a clear mind
and freedom from covetousness.
Transliteration :
"Anparivu Thetrum Avaavinmai Innaankum
Nankutaiyaan katte Thelivu "
Comments
Post a Comment