பணிநிறைவுப் பாராட்டு மடல்

பணிநிறைவுப் பாராட்டு மடல் 

               ஜெயந்தி லிவிங்ஸ்டன்
                தலைமை ஆசிரியை
                 நாள் 25 .06.2022.


அகத்தியர் மலை பிறத்தலா (ல்)
பொருநை நடக்கும் 
நெல்லை எங்கும்
தமிழுலா நடத்தலா
அறப்பணி செய்தலா (ல்)
தேவஞானம் தங்கப்பழம் இணையர்
மடியுலா வான்மதி ஜெயந்தி தவழ்தலா!


முத்து இருப்பது கத்தும் கடலிலா 
முத்தச் சிதறல் ஜெயந்தியின் சிரிப்பிலா
தேன் இருப்பது தேனடையிலா
தேமதுர தமிழிசை நின் நாவிலா!
ஆடலா பாடலா கலைக்கூடலா
பேச்சுலா தேனுலா செந்தமிழுக்கு
லிவிங்ஸ்டன் குத்தகையாளர் ஆதலா?

கண்ணுலா கவினுலா
கற்பனைத் தேருலா
எண்ணுலா எழுத்துலா
பண்புலா பாங்குலா- பிறர்
நண்ணும் வண்ணம் பழகலா(ல்)
அன்புலா அழகு மதியுலா
கொள்ளிடம் நின் தலைச்சோற்றிலா!


உழைத்தலா (ல் ) உவத்தலா
உவத்தலா(ல் )உயர்தலா
உயர்தலா(ல்) நல்லாசிரியராதலா
நல்லாசிரியராதலா(ல் ) நற்புகழ் வாய்த்தலா
ஓய்வில்லாப் பணியால் உடல் களைத்தலா
களைத்தலா(ல்) தளை நீக்கி உயரப் பறத்தலா !

வாழ்த்து மழை பொழிதலா (ல்)
வானம் மேகமூட்டம் ஆதலா
இனிய நாட்கள் காத்திருத்தலா(ல்)
இல்லம் மகிழ்ச்சி கடலிலா
கண்டுலா வர கவியுலா
 கட்செவியேறி வந்தது
 இன்பச் சிற்றுலா!

               -செல்வபாய் ஜெயராஜ்
               -












Comments