ஒன்றாமை ஒன்றியார் கட்படின்....

ஒன்றாமை ஒன்றியார் கட்படின்...


"ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது "

                             குறள்: 886


ஒன்றாமை - மனம் பொறுந்தாமல்
ஒன்றியார்-சேர்ந்து இருப்பவர் 
கட் - கண்( வேற்றுமை உருபு 
          இடப்பொருளில் வந்துள்ளது)

படின் - இருக்குமாயின்
எஞ்ஞான்றும் - எக்காலத்திலும்,எந்த நேரத்திலும்
பொன்றாமை - அழியாதிருத்தல்
ஒன்றல்- ஒன்றுபடுதல்
அரிது - உரியதாகும்.


நம்மோடு சேர்ந்து இருப்பவர்
மனம் ஒன்றுபடாது  கூடவே இருப்பிராயின்
அப்படிப்பட்டவரால் அழிவு வராதிருத்தல்
அரிதினும் அரிது



விளக்கம்: 

மனதோடு ஒத்துப் போகாதவரோடு
நட்பும் கூடாது. உறவும் கூடாது.
ஒருவருக்கு நம்மோடு மனம் 
ஒன்றிப் போகவில்லையா? 
அவரிடமிருந்து ஒதுங்கி 
இருந்து கொள்வது நல்லது.
சிறிய பகைதானே எல்லாம்
சரியாகிவிடும் என்று நினைப்போம்.
அதுதான் பல நேரங்களில்
பெரிய துன்பங்களுக்கு
காரணமாக அமைந்துவிடும்.
மனவிரிசல் கண்ணாடியில்
ஏற்படும் விரிசலுக்குச் சமமானது.
ஒருநாளும் அது ஒட்டவே ஒட்டாது.

உடன்பிறந்தவர்களோடுகூட
ஒட்டியும் ஒட்டாமலும் எட்டி நிற்பவர்கள்
உண்டு. என்ன செய்வது என்று
பெரிதாக எடுத்துக் கொள்ளாமல்
கண்டும் காணாமலும் போய்க் கொண்டே
இருப்போம்.
ஆனால் அவர்களால்தான்
பெருந்துன்பம் வந்து சேரும்
என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்
வள்ளுவர்.

உற்றாரோடு மனம் ஒட்டாத
உறவு எந்த நாளிலும் துன்பம் தருவது
உறுதி.
அப்படி துன்பம் தராது இருக்கும்
நிகழ்வு அரிதினும் அரிது.
ஆதலால் மனம் ஒத்துப் போகாத
உறவுகளிடம் கவனமாக இருங்கள்.
அரசுக்கும் இதுதான் செய்தி.
உட்பகை கொண்டவரோடு
எச்சரிக்கையாக இருப்பது
நல்லது.
இதுதான் வள்ளுவர் நமக்குச்
சொல்லித்தரும் செய்தி.

எல்லா தரப்பினருக்கும் ஏற்ற
அருமையான கருத்து.


English couplet :

"  If  discard finds a place midst those who dwelt
at one before,
'Tis ever hard to keep destruction fro the door "

Explanation:

If hatred arises among one's own people
it will be hardly possible for one to escape disaster.


Transliteration:

"Ondraamai ondriyaar katpatin eGnGnaandrum
Pondraamai ondral aridhu "

Comments

Popular Posts