பேனாவின் முனை....



பேனாவின் முனை....

"பேனாவின் முனை வாளின் முனையைவிட
கூர்மையானது "


சொல் வீச்சுக்கு வாள் வீச்சைவிட
வலிமை அதிகம்.
எழுத்தாளர் எழுதும் ஒவ்வொரு வார்த்தையும்
வாசகரின் மனதில் ஒரு தாக்கத்தை
ஏற்படுத்தும். எந்த ஒரு வார்த்தையும்
வெறுமனே திரும்பி வராது.

காயங்களை ஏற்படுத்தவும் தெரியும்.
காயங்களுக்கு மருந்து போடும் 
மருத்துவராக செயல்படும்
சக்தியும் எழுத்துக்கு உண்டு.
உணர்ச்சியைத் தூண்டும்.
உத்வேகத்தைத் தணிக்கும்.
மூடநம்பிக்கைக்குத் துணை நிற்கும்.
மூடநம்பிக்கைக்கு எதிராகக் குரல்
கொடுக்கும்.
அந்தப்பக்கம் காற்று வீசுவதுபோல்
இருக்கும்.
திடீரென்று எதிர்க்காற்று வீச ஆரம்பிக்கும்.

நேர்மறை ...எதிர்மறை ...என்று 
முன்னூற்று அறுபது
பாகையிலும் திரும்பி நின்று பேசும்.

"வாளின் வலிமையைவிட  எனது பேனா முனை
கூர்மையான பலம் வாய்ந்தது. எனது எழுதுகோல்
 ஒரு கொடுங்கோல் சாம்ராஜ்யத்தையும் அழிக்கும்.
 ஒரு செங்கோல் ஆட்சியையும் உருவாக்கும் ""

 என்றார் புரட்சி எழுத்தாளர்  வால்டேர்.

இவரது புரட்சி கருத்துகள்தான் பிரஞ்சு 
புரட்சிக்கு வித்திட்டது.

தேவையற்றதை அழித்து தேவையானதை
ஆக்க நினைப்பவன் புரட்சி எழுத்தாளனாக
மாறுகிறான்.
எல்லா எழுத்தாளர்களிடமும் சமூகப் பொறுப்பும்
கடமையும் உண்டு.
அதில் அதிகப்படியான கவனம் செலுத்தும்
எழுத்தாளர்கள் புரட்சி எழுத்தாளராக
அறியப்படுகின்றனர்.

வால்டேர் காலம் பிரெஞ்சு நாடு முழுவதும்
மன்னர்கள் பிரபுக்களின் கையில்
மாட்டிக்கொண்டு சின்னாபின்னமாகி
கொண்டிருந்தது.
தம்மை விடுவிக்க யாராவது வருவார்களா
என்ற  ஏக்கத்தோடு மக்கள் காத்திருந்த சமயத்தில்
கலங்கரை விளக்காக வந்தவர் வால்டேர்.

மன்னர்கள் மக்களைப் பற்றிக் கவலை இல்லாமல்
சுகபோகமாக வாழ்ந்து கொண்டிருந்தனர்.

ஒருநாள் பதினாறாம் லூயி 
மன்னரும் அவருடைய மனைவி 
ராணி மேரி அண்டாய்னட்
இருவரும் சாரட் வண்டியில் நகர் வலம்
வந்தது கொண்டினர்.
நாட்டில் பெரும் பஞ்சம்.
மக்கள் உண்பதற்கு ஒன்றுமில்லாமல்
 பட்டினியால் செத்துக் கொண்டிருந்தனர்.
 மன்னரைப் பார்த்ததும் மக்கள் மனதில்
 ஒரு நம்பிக்கை.
 நமது நிலைமையை மன்னனிடம்
 கூறினால் ஏதாவது உதவி கிடைக்குமே என்ற
ஒரு  நப்பாசை.
 
மன்னா ! 
சாப்பிடுவதற்கு ரொட்டித்துண்டு கூட
இல்லாமல் உயிர் போகும் நிலையில்
இருக்கிறோம் ...நீங்கள்தான்
ஏதாவது செய்ய வேண்டும் என்று
கெஞ்சினர்.
மக்களின் பரிதாபநிலை அரசிக்கு
ஏளனமாகத் தெரிந்தது.

மன்னர் பேசுவதற்கு முன்பாக
அரசி முந்திக் கொண்டார்.
ரொட்டி இல்லை என்றால் என்ன ?
 வெண்ணெய்யைச் சாப்பிடுங்கள்...
 
வெண்ணெய்யும் இல்லையா? 
 கேக் சாப்பிட வேண்டியதுதானே 
 என்று கிண்டலடித்துவிட்டு
 அங்கிருந்து இருவரும்  புறப்பட்டுச் சென்றனர்.
 
மக்களுக்கு கோபம் என்றால் கோபம்
செம கோபம்.
அரசரையும் அரசியையையும் வீதிவீதியாகத்
துரத்திச் சென்று கொன்றே போட்டுவிட்டனர்.

புரட்சி வெடித்தது.
தனிமனித சுதந்திரம் பறிக்கப்படும்போதுதான்
போராட்டங்கள் தொடங்குகின்றன.

போராட்டங்கள் அடக்குமுறைக்கு உட்படும்போது
அது புரட்சியாக வெடிக்கிறது.



பகத்சிங் சொன்னான் அநீதியை எதிர்த்து
அடக்குமுறையை எதிர்த்து மக்கள் செயல்படும்போது
அது புரட்சியாக வெடிக்கிறது.

ரூசோ இறப்பதற்கு முன் சொன்ன வார்த்தை
என்னுடைய துன்பங்களில் முதல் துன்பம்
நான் பிறந்ததுதான் என மனம் வருந்தி
எழுதினார்.

மனிதன் சுதந்திரமாகத்தான் பிறக்கிறான்.
ஆனால் எங்கும் அடிமைச்சங்கிலியால் 
கட்டப்பட்டுள்ளான்.

மன்னன் என்பவன் மக்களுக்காக என்னும்
சமுதாய ஒப்பந்தத்திற்குக் கட்டுப்பட்டவன்.
என்பார் ரூசோ.  மன்னன் அந்தக் 
கட்டுப்பாடுகளை மீறும்போது மக்களும் 
கட்டுப்பாட்டை மீறலாம் என்று ரூசோ தமது
சமுதாய ஒப்பந்தம் என்னும் நூலில்
எழுதியிருந்தார்.இவை எல்லாம்
மக்கள் மனதில் ஏற்படுத்திய தாக்கம் தான்
ஒரு புதிய உலகு காண
காரணமாக இருந்தது.

ரூசோ இல்லாதிருந்தால் பிரஞ்சுபுரட்சியே
 வெடித்திருக்காது
என்பார் நெப்போலியன் போனபார்ட்..

புரட்சியாளர்கள் புதைக்கப்ட்டாலும்
தங்கள் எழுத்துமூலம் பரட்சிக்
கருத்துக்களை மக்களிடையே
 விதைத்துவிட்டுத்தான் செல்கின்றனர்.

அரசியல் புரட்சி ரூசோ, கார்ல் மார்க்ஸ்
போன்றோர்களால் ஏற்பட்டிருந்தது.
சமூகப் புரட்சியும் நல்ல சிந்தனையாளர்களால்
மட்டுமே ஏற்பட்டுள்ளது.

பெரியாரின் சமூக சீர்திருத்த கருத்துக்கள்
சமத்துவத்தை நோக்கிய கண்ணோட்டம்
கொண்டதாக இருந்தது.

சாக்ரட்டீஸ் போன்றோரின் எழுத்துகள்
இளைஞர்களை விழிப்படையச் செய்தது.

அறிஞர் அண்ணா,கலைஞர் கருணாநிதி
போன்றோரின் பேச்சும் எழுத்தும்
மக்கள் மத்தியில் ஓர்
 ஈர்ப்பை ஏற்படுத்தியது.
கலைஞரின் சமூக நீதி  கருத்துகள்
திரைப்பட வசனங்கள் மூலம்
பாமரர்கள் மத்தியில் இன்றும்
பேசப்பட்டுவருகிறது

டால்ஸ்டாயின் எழுத்துகள் தான் 
சாதாரண மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியை
ஒரு மகாத்மா காந்தியாக மாற்றியது.

மகாத்மா காந்தியின் சத்திய சோதனைதான்
மார்டின் லூதர் கிங் உருவாகக்
காரணமாக இருந்தது.

காரல் மார்க்ஸ் எழுதிய
மூலதனம் என்ற புத்தகம்
பொதுவுடைமை கருத்துகளை
இன்றுவரை உலகெங்கும் 
பரப்பிக் கொண்டிருக்கிறது.

லெனின் மக்களின் கடமைகளுள்
ஒன்று புத்தகம் படிப்பது என்பார்.
நல்ல எழுத்தாளர்களின் புத்தகங்களைப்
படிப்பது மூலம் ஒரு பொறுப்புள்ள
குடிமகன் உருவாவாகிறான் என்பது
அவரின் கருத்து.

சமூக அக்கறையோடு எழுதப்பட்ட
எழுத்துகள் உலக வரலாற்றைப்
புரட்டிப் போட்டிருக்கிறது.
சமூக வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி
வந்திருக்கிறது. எழுத்து சாகா வரம் பெற்றது.

போர் அந்தந்த காலகட்டத்தில் நடைபெற்று
வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு
கடந்து போகக்கூடிய ஒரு நிகழ்வு.

நல்ல எழுத்துகளோடு உள்ள தொடர்பு
நம்மை எப்போதும் ஓர் உயிர்ப்போடு
வைத்திருக்கும் .

எழுத்து சாகா வரம் பெற்றது.
நேற்றும் இன்றும் என்றும் நம்மோடு
பேசி , உணர்வினைத் தொட்டு,
சிந்தனையைத்  தூண்டி,
 நம்மை ஓர் உயிரோட்டமுள்ளவர்களாக
 வைத்திருக்கும் வல்லமை எழுத்துக்கு
 மட்டுமே உண்டு.
 
 எது புரட்சி என்று லெனினிடம் கேட்கப்பட்டது.
இதுவரை வாழ்ந்ததுபோல் இன்னும்
வாழமுடியாது என கோடிக்கணக்கான மக்கள்
முடிவெடுக்கும்போது புரட்சி வெடிக்கிறது.
அந்தப் புரட்சிக்கு வித்திடுவது
ஒரு எழுத்தாளரின் எழுதுகோலாகத்தான்
இருக்கும்.

ஆம்....
 
"பேனாவின் முனை வாளின் முனையைவிட
கூர்மையானது "



Comments

Popular Posts