ஞாலம் கருதினும் கைகூடும்....

"ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்"

                          குறள் : 484


ஞாலம் - உலகம்
கருதினும்- விரும்பினாலும்
கைகூடும் -கிடைக்கும்,எளிதில் வாய்க்கும்
காலம்-- காலம்,நேரம்
கருதி- அறிந்து
இடத்தான்-இடத்தோடு பொருந்த
செயின்- செய்தால்



ஒரு செயலை முடிப்பதற்கு ஏற்ற
காலத்தை அறிந்து அது செய்ய வேண்டிய 
இடத்தோடு ஒத்துப் போகும்படி
செய்தால் உலகமே வேண்டும்
என்று விரும்பினாலும் கைகூடும்.

விளக்கம்-:

எல்லாருக்கும் ஓர் ஆசை இருக்கும்.
அந்த ஆசை நிறைவேறுவதும்
நிறைவேறாமல் போவதும் இறைவன்
கையில் இருக்கிறது.
இறைவன் மனசு வைத்தால் கிடைக்கும்
என்ற நம்பிக்கை நம்மில் பலருக்கு உண்டு.
ஆனால் அந்த நம்பிக்கை மட்டும்
 இருந்தால் போதுமா?
நீங்கள் முயற்சி செய்ய வேண்டாமா?
முயற்சி செய்து பார்க்கிறேன்.
எதுவும் வாய்ப்பதில்லை என்று அங்கலாத்துக்
கொண்டிருக்கிறீர்களா?

எப்படி முயற்சி செய்தீர்கள்? 
எந்த நேரத்தில் முயற்சி செய்தீர்கள்?
 எந்த இடத்தில் முயற்சி செய்தீர்கள்?
 கேட்கிறார் வள்ளுவர்.

"ஏற்ற காலமறிந்து சரியான இடத்தைத்
தேர்வு செய்து ஒரு செயலைச் செய்தால்
நீங்கள் விரும்புவது உலகமே ஆனாலும் 
அது உங்கள் கைக்கு
வந்து சேரும் "என்கிறார் வள்ளுவர்.

உலகமெல்லாம் ஆளவேண்டும் என்று நினைத்தாலும்
அது நிறைவேறுவது உறுதி .
அதற்காக நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்
ஏற்ற காலத்தை எதிர்பார்த்திருந்து
எந்த இடத்தில் செய்தால் 
ஏற்புடையதாக இருக்கும் என்று
அறிந்து முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

காலமும் இடமும் பொருந்த ஒரு செயலைச்
செய்தால் வெற்றி நிச்சயம்.

English couplet:

"The pendant words domination may be won,
In fitting time and place by action done"


Explanation :

Though a man should meditate the conquest of  the world ,
he may accomplish it if he acts in the
right time and at the right place.


Transliteration :

"Gnaalam karuthinung kaikootung kaalam
Karudhi itaththaar seyin"














Comments

Popular Posts