பலசொல்லக் காமுறுவர் மன்ற....

பலசொல்லக் காமுறுவர் மன்ற....


பலசொல்லக் காமுறுவர் மன்ற மாசற்ற
சிலசொல்லத் தேறா தவர்"

               குறள் எண் : 649

பல -நிறைய,ஏராளமாக
சொல்ல - சொல்லுவதற்கு
காமுறுவர்-விரும்புபவர்
மன்ற - திண்ணமாக,ஒரு தலையாக
மாசு -குற்றம்
அற்ற நீங்கிய
சில -சிறிதளவு
சொல்ல-சொல்வதற்கு
தேறாதவர்- அறியாதவர்

அவையின்கண் சுருங்கச் சொல்லி
விளங்க வைக்கத் தெரியாதவர்
நிறைய பேச வேண்டும் என்ற ஆவலால்
மிகுதியாகப் பேசுவர்.


விளக்கம் :

பேசுவது ஒரு கலை.
எல்லாராலும் ஒன்றுக்கொன்று
கோவையாக கேட்பவர் மனம்
கொள்ளும்படி பேச முடியாது.
ஆனால் நிறைய 
பேச வேண்டும் என்று
மனதில் ஆசை இருக்கும்.
ஆசை இருப்பதால் சிலர் என்ன பேசுகிறோம்
என்பதே தெரியாமல் நிறைய
பேசிக் கொண்டிருப்பர்.
சுருக்கம் சொல்லி விளங்க
வைக்க வேண்டும் .அதுதான் 
நல்ல பேச்சாளருக்கு அழகு.
பேசத் தெரியாதவர் அதிகம் 
பேசவேண்டும் என்ற
ஆர்வ மிகுதியால்
 சொன்ன வார்த்தையையே திரும்பத்
திரும்பப் சொல்லி நீட்டி 
முனங்கிக் கொண்டிருப்பர்.
பேச்சில் பொருள் இருக்காது
கேட்பவருக்குச் சலிப்பை ஏற்படுத்தும்.
வெற்றுப் சொற்களாகவே அவைஇருக்கும்.

ஒரு அவையில்கண் பேசும்போது
 சுருங்கச் சொல்லி
விளங்க வைக்கத் தெரியாதவர்கள்தான்
நிறைய பேசிக் கொண்டே இருப்பர்
என்கிறார் வள்ளுவர்.



English couplet:

"Who have not skill ten faultless words to utter plain
Their tongues will itch with thousand words man's ears to pain"


Explanation:

They will desire to utter many words,
Who do not know to speak a few
faultless ones.

Transliteration:

palasollak kaamuruvar mandra maasatra
Silasollat theraa thavar

Comments

Popular Posts