நயனிலன் என்பது சொல்லும்...

நயனிலன் என்பது சொல்லும்....


"நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை"

           குறள் - 193

நயனிலன் - நீதி இல்லாதவன்
என்பது - எனப்படுவது
சொல்லும் - சொல்லப்படும்
பயனில - நன்மை தராதவற்றை
பாரித்து- விவரித்து
உரைக்கும்- சொல்லலும்
உரை-  சொற்கள்

ஒருவரிடம் அறம் இல்லை என்பதை
அவன் பேசும் நன்மை தராத
விரிவான பேச்சின் மூலம் 
அறிந்து கொள்ளலாம்.

விளக்கம்:

நாம் பேசும் சொற்கள் ஒவ்வொன்றும்
பொருள் பொதிந்ததாக இருக்க வேண்டும்.
கேட்பவர்க்கு நன்மை பயப்பவனாக
இருக்க வேண்டும்.
வெற்றுரைகளாக இருந்துவிடக் கூடாது.

ஒருவர் பேசும் பேச்சுதான் அவரைப்
பற்றிய மதிப்பீடு நல்லதாகவோ கெட்டதாகவோ
அமைவதற்குக் காரணமாக இருக்கும்.
நிறைய பேசுவார். பேச்சில் ஒரு நன்மையும் இல்லை.
அப்படியானால் அவர் உள்ளத்தில்
உண்மை இல்லை. அறம் இல்லை.
பிறர் மீது அக்கறை இல்லை என்பதைப்
புரிந்துகொள்ள முடியும்.

ஒவருடையப் பேச்சே அவரை இன்னார்
என்று உலகுக்குக் காட்டிக் கொடுத்துவிடும்.
நயமற்ற சொற்கள் பயனற்றதாகத்தான்
இருக்கும். பயனற்ற சொற்கள்
ஒருவன் பேசுவானானால் அவன்
அறமற்றவனாகத்தான்
இருப்பான் என்கிறார் வள்ளுவர்.


English couplet:

"Diffusive speech of useless words proclaims
A man who never righteous wisdom gains"

Explanation:

That conversation which a man utters forth useless
things will say of him he is without virtue.

Transliteration:

"Nayanilan enpadhu sollum payanila
Paarith thuraikkum urai"

Comments

Popular Posts