ஐயுணர்வு எய்தியக் கண்ணும்....
ஐயுணர்வு எய்தியக் கண்ணும்....
"ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு "
குறள் : 354
ஐயுணர்வு- ஐந்து வகையான உணர்வுகள்
எய்திய - அடைந்த,பெற்றிருந்த
கண்ணும்- போதும்
பயமின்றே - நன்மை இல்லை
மெய்யுணர்வு - உண்மையறிவு
இல்லாதவர்க்கு - பெற்றிருக்காதவர்க்கு
உண்மையை அறியும் அறிவு
இல்லாதவர்க்கு ஐம்புலன்களால்
அறியப்படும் அறிவு இருந்தாலும்
அவற்றால் எந்த பயனும்
கிடைக்கப்போவதில்லை.
விளக்கம்:
மெய்,வாய் ,கண், மூக்கு, செவி என்னும்
ஐம்புலன்களால் அறியத் தக்க
அறிவு எந்தவிதப் பழுதுமின்றி
கிடைக்கப் பெற்றிருக்கிறது.
உடலளவில் எந்தவிதத் குறைபாடும்
இல்லை.
அவை நல்லமுறையில் இருந்தால்
மட்டும் போதுமா?
வேறென்ன வேண்டும் என்கிறீர்களா?
உண்மையைக் கண்டறியும்
அறிவு வேண்டும்.
ஐம்புலன் வழி பெறும் அறிவு
இருந்தாலும் அவற்றைத்
தன்வயப்படுத்தும் திறன் இல்லை என்றால்
மனம் போன போக்கில் செல்ல நேரிடும்.
அதனால் அவற்றைத்
தன் வயப்படுத்தும் அறிவும்
இருக்க வேண்டும்.
உண்மையைக் கண்டறியும்
அறிவும் இருக்க வேண்டும்.
என்கிறார் வள்ளுவர்.
English couplet:
Five fold perception gained, what benifits accure to them
Whose spirts lack perception of the true?
Explanation:
Even those who have all the knowledge which can be attained
by the five senses will derive no benefit from it
if they are without a knowledge of
the true nature of things.
Transliteration:
"Ayunarvu eydhiyak kannamum payamindre
Meyyunarvu illaa thavarkku"
Comments
Post a Comment