காணும் பொங்கல்

காணும் பொங்கல்


 தை மாதம் மூன்றாம் நாள் 

காணும் பொங்கல்.


இந்த நாளில் தங்கள் உற்றார்

உறவினரைச் சந்தித்து தங்கள்

அன்பையும் தாங்கள் செய்த 

பண்டங்களையும் தங்கள் 

பரிமாறிக்கொள்ளும் நாளாக

இருக்கும்.


இது கணுப் பொங்கல் அல்லது

கன்னிப் பொங்கல் என்றும்

அழைக்கப்படுவதுண்டு.


இந்த நாளில் விளையாட்டுப்

போட்டிகள் நடைபெறும்.

உறியடித்தல்,கயிறு இழுத்தல்,

கபடிப்போட்டி,வழுக்கு மரம் ஏறுதல்

என்று பல்வேறு விளையாட்டுப்

போட்டிகள் இந்த நாளில் 

நடைபெறும்.

வீரவிளையாட்டுக்கான நாள்

என்றுதான் சொல்ல வேண்டும்.


காணும் பொங்கலின் சிறப்பே

அன்று கொண்டு சென்று உண்ணும்

உணவுதாங்க....

அப்பப்பா...என்ன ருசி...

என்ன ருசி....


நல்லா சாப்பிட்டீங்களோ

என்கிறீர்களா?


இல்லைங்க....அப்பப்போ 

மற்றவர்களோடு சிறுபிள்ளையாக

இருந்தபோது தின்றிருக்கிறேன்.

அதுவும் காணாமல்தான்.

எங்கள் வீட்டில் அந்த நல்ல பழக்கம் எல்லாம் இல்லை.


முன்பு பொங்கல் இந்துக்கள் மட்டும்

கொண்டாடும் பண்டிகையாக இருந்தது.

இப்போது அது தமிழர் திருநாளாக

மாறிப் போனதில் எம் போன்றோருக்குப்

பெருமையும் மகிழ்ச்சியும்  கூடியிருக்கிறது என்றுதான் சொல்லுவேன்.


அப்படி இல்லை என்றால் இன்றுவரை

திருட்டுத்தனமாக யாரிடமாவது பொங்கல்

வாங்கிக் தின்ன வேண்டியிருந்திருக்கும்.

பொங்கல்  பண்டிகையை

தமிழர்த் திருநாளாக மாற்றிய

கலைஞருக்கும் கலைஞர் அரசுக்கும் 

நாம் இந்த நேரத்தில் நன்றி 

சொல்லியே ஆக வேண்டும்.


சமயத்திற்கு அப்பாற்பட்டுத்

தமிழர் அனைவருக்குமான பண்டிகை

என்று உலகம் எங்கும் அடையாளம் 

காண வைத்திருப்பது ஒரு முற்போக்க

சீர்திருத்தவாதியால் மட்டுமே இயலக்கூடிய

காரியம்.ஆற்றங்கரை மற்றும் குளத்தங்கரை

போன்ற நீர்நிலைகள் உள்ள இடங்களுக்கு

குடும்பத்தோடு சென்று மகிழ்ச்சியாக

இந்த நாளைக் களிப்பர்.

இன்று இந்த மகிழ்ச்சி பன்மடங்கு கூடியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.


பெண்கள் கும்மியடித்துப்

நாட்டுப்புறப் பாடல்கள் 

பாடி

காணும் பொங்கலைக் கவின் மிகும்

பொங்கலாக்கி விருந்து 

உண்ணும் இல்லை ஊட்டி

மகிழும் நாள் காணும் பொங்கல்.இந்த நாளில் கொண்டு சென்று

உண்பதற்கென்றே பொங்கல் நாளில்

செய்த கறி வகைகளையும் 

அந்தநாள் சாம்பாரோடு போட்டு சுண்ட வைத்துக்

தயார் பண்ணி எடுத்துச் செல்வர்.

சுண்ட வைத்த கறிக்குத் தனிச்சுவை உண்டு.

உண்டு பார்த்தால் தெரியும்.


அதுவும் காட்டில் போய் உட்கார்ந்து

அருகில் உள்ள தோட்டத்திலிருந்து அந்த நேரத்தில்

அறுத்து வந்த வாழை இலை

போட்டு சாப்பிடணுமுங்க.

நாங்கள் தின்றிருக்கிறோம்.

நீங்களும் சாப்பிட்டிருப்பீங்க.

இப்போது நேற்று உள்ள சுண்டக்

குழம்பு என்றாலே முகம்

சுண்டிப் போகிறது.


வேண்டாம் நீயே சாப்பிடு என்று

முரண்டு பிடிக்கிற காலம்.


அதனால்தான் இப்போது காணும்

பொங்கல் நாளில் சுற்றுலாத் தலங்களிலும்

உணவகங்களிலும் மக்கள் குவிகின்றனர்.

மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை.

ஆனால் மாற்றம் வேண்டும்

என்பதற்காக தாயை

 தமக்கையை  தங்கையை 

 அண்ணன் தம்பியை மாற்றிவிட

  முடியுமா?

  மாற்றத்தான் கூடுமா?


பண்டிகைகளைஉறவுகளோடு

நட்புகளோடு இணைந்து கொண்டாடும் போதுதான்

உண்மையான மகிழ்ச்சி வெளிப்படும்.


இதற்காக வைக்கப்பட்டதுதான்

காணும் பொங்கல்.

உறவுகளோடு கூடி உண்டு,

விளையாடி ,உறவாடி மகிழ்வோம்.

அப்படிக் கொண்டாடினால் தான்

உண்மையான காணும் பொங்கலைக்

கொண்டாடியவர்கள் ஆவோம்.

வாழ்த்துகள்!

Comments

Popular Posts