ரூத்தும் நகோமியும்

ரூத்தும் நகோமியும்

   காட்சி - 1

இடம் :  சமவெளிப் பகுதி

உறுப்பினர்கள் : நகோமி ,ரூத் ,ஓர்பாள்


நகோமி : யெகோவா உங்களையும் உங்கள்
                  குடும்பத்தாரையும் ஆசீர்வதிப்பாராக


ஓர்பாள் : நம்மையும் ஆசீர்வதிப்பாராக

நகோமி: அன்னையே| ஏன் எங்களை பிரித்துப் பேசுகிறீர்கள்.
                  

நகோமி : காரணமாகத்தான்

ஓர்பாள் : என்ன காரணம் என்று நாங்கள்
                   அறிந்து கொள்ளலாமா?

நகோமி : இன்னும் எவ்வளவு காலம்தான்
                    என்னோடு சேர்ந்து கஷ்டப்படப்போகிறீர்கள்.
                    போதும். இதுவரை நீங்கள் பட்ட
                    கஷ்டங்கள் போதும்.

ரூத் : என்னம்மா சொல்ல வருகிறீர்கள்

நகோமி : நீங்கள் உங்கள் பெற்றோரிடம் 
                   போய் சேர்ந்து கொள்ளுங்கள் என்கிறேன்

ரூத் : அதுதான் ஏன் என்கிறேன்.

நகோமி : உங்கள் இளமையை எனது
                   பாதுகாப்புக்காக
                     பயன்படுத்திக்கொள்ள 
                     விரும்பவில்லை. நீங்கள் 
                     இளம் பருவத்தினர். வாழ 
வேண்டிய வயதினர்.      
                     உங்கள் பெற்றோரோடு 
                     மகிழ்ச்சியாக வாழ யகோவா
                     அருள்புரிவாராக!
                     
ஓர்பாள் : அம்மா ! தாங்கள் சொல்வதின்
                 பொருள் புரிகிறது. 
                 எங்கள் தெய்வத்தை 
பெற்றோரை மறந்து
தங்களையே பெற்றோராக ஏற்றுக்கொண்டு
                  மகிழ்ச்சியாக வாழ்ந்தோம்.
          . அந்த மகிழ்ச்சி நிலைக்கவில்லை
                 ஆனால் யகோவா எங்களைக் கைவிட்டார்.மகிழ்ச்சியைத்
                 தருவார் என்று நம்புகிறோம்.


நகோமி : மகளே நீ என்னை புரிந்து கொண்டது
                   இவ்வளவுதானா? உன் தாயாகப் பேசுகிறேன்.
                   உன் தேசத்தில் உன் மக்களோடு 
                   சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ்.

ஓர்பாள் : அன்னையே! தாங்கள் விருப்பம் அதுவானால்
                     அதுவே நடக்கட்டும் .
                     தங்கள் அன்பை ஒருபோதும் மறக்கமாட்டேன்.
                   ( கைகளைப் பற்றி அழுதபடி விடை பெற்றுச் செல்கிறாள் ஓர்பாள்)

நகோமி : ரூத், நீ மட்டும் ஏன் நின்று கொண்டிருக்கிறாய்?

                    நீயும் அவளோடு செல்லலாமே!

ரூத் : எங்கே செல்வேன்....
           உங்கள் மகனைத் திருமணம் செய்த
           நாளிலிருந்து உங்களை என் 
           அன்னையாக ஏற்றுக்கொண்டு 
           விட்டேன்.
           உங்களை தனியாக விட்டுவிட்டு நான்
           எங்கும் செல்ல மாட்டேன்.
           
நகோமி : ஏன் பெற்றோரிடம் போய் 
                    சேர்ந்து கொள்ள விருப்பம் 
இல்லையா?
அவர்கள் உன் எதிர்காலத்தைப்
பார்த்துக் கொள்வார்கள்.
அவர்களோடு இருப்பதுதான் உன் எதிர்காலத்திற்கு நல்லது.

ரூத் : தங்கள் மகனை மணமுடித்த நாளிலேயே என் எதிர்காலத்தை உங்கள் கையில் ஒப்படைத்து விட்டேன்.. உங்களை விட்டு
வேறெங்கும் செல்ல மாட்டேன்.

நகோமி: அம்மா நீ சொல்வது கேட்பதற்கு
நன்றாகத்தான் இருக்கிறது.
ஆனால் நடைமுறைக்கு அது சாத்தியப்படாது.

ரூத் :
எது சாத்தியப்படும் எது சாத்தியப்படாது
என்பது முக்கியமல்ல...
என்னைப்போலவே தாங்களும் 
மகன்களை இழந்து நிராதரவாக நிற்கிறீர்கள்.
நீங்கள் என் நலனில் அக்கறை எடுத்துக்
கொள்வதுபோல நானும் உங்கள் நலனில் ஏன் அக்கறை எடுத்துக்கொள்ள கூடாது.

நகோமி: நான் வயது முதிர்ந்தவள் .
நான் இன்னும் ஓரிரண்டு ஆண்டு காலம்தான் உயிரோடு இருப்பேன்.
நீ அப்படியல்ல....


ரூத் : யார் யாரை தேவன் எப்போது அழைத்துக் கொள்வார் என்று 
யாருக்குத் தெரியும்?
இருக்கும்வரை இருவரும் 
ஒருவருக்கு ஒருவர் துணையாக சேர்ந்தே வாழ்வோம்.
எப்போது யகோவா என் தேவன் என்று
ஏற்றுக் கொண்டேனோ இனி
அந்நிய தெய்வங்களுக்கு என்னில் இடமில்லை.
நீர் போகும் இடத்திற்கு நானும்
வருவேன்.

நகோமி:( ரூத்தை கட்டி அணைத்தபடி)இவ்வளவு உறுதியாக
இருக்கும் உன்னை நினைத்துப் பெருமைப்
படுகிறேன்.

(இருவரும் ஒருவருக்கொருவர் கட்டி அணைத்து அன்பைப் பரிமாறிக் கொள்கின்றனர்)

நகோமி: வா , நம் சொந்த தேசமான
பெத்லேகேமுக்குப் போவோம்.
(இருவரும் பெத்லேகேம் சென்றடைகின்றனர்)

  காட்சி 2.

உறுப்பினர் கள் : நகோமி, ரூத்
    உறவினர்கள்

பெண் ஒருவர் : ஆ...நகோமி.
நகோமி திரும்பவும் வந்து விட்டாள்.

நகோமி: ஆம் நான் வந்துவிட்டேன்.
வெறுமையாய் வந்திருக்கிறேன்.
என்னை நகோமி என்ற பெயரில்
அழைப்பதை வெறுக்கிறேன்.

பெண் 2.: ஏன் அப்படி?
 நகோமி என்றால் இனிப்பு
அழகான பெயர் தானே.

நகோமி: பெயரில் இனிப்பு இருக்கிறது.
ஆனால் என் வாழ்வில் மகிழ்ச்சி இல்லை.
அதனால் அந்தப் பெயரையே நான்
வெறுக்கிறேன்.

பெண் 1 : அப்படியானால் நாங்கள் உன்னை எப்படி அழைப்பது?

நகோமி: மாராள் என்று அழையுங்கள்.
மாராள் என்றால் கசப்பு.
என் பிள்ளைகளை இழந்து கசந்த
மனநிலையிலேயே இருக்கிறேன்.

பெண் 2: நகோமி ,ஒன்றுக்கும் கவலைப்படாதே. தேவன் உன்னோட இருக்கிறார்.

பெண் 1 : உன்னை கைவிடா உன் மருமகள்
ரூத் உன்னோடே இருக்கிறாள்.
தைரியமாக இரு.

        காட்சி 3.

நகோமி,ரூத்,போவாஸ் மற்றும்
சில பெண்கள்.

நகோமி :அருமை மகளே!
  வாற்கோதுமை அறுவடை காலம்
நடக்கிறது..நீ வயல்வெளியில் சென்று
கோதுமை மணிகள் பொறுக்கி வா.

ரூத் : சரி அம்மா இதோ சொல்கிறேன்.
 கூடையை எடுத்துக்கொண்டு கோதுமை
மணிகள் பொறுக்கச் செல்லுதல்)

(வயல் வெளி மற்ற பெண்களோடு
கோதுமை மணிகள் பொறுக்குதல்)

அப்போது அங்கே வயலுக்குச் சொந்தக்காரரான போவாஸ் வருதல்.

போவாஸ்: யாரந்த பெண்?
முன்பின் அறியாத வளாக இருக்கிறாளே!

சேவகன் : மோவாப்பிய பெண்.
காலையிலிருந்து கோதுமை பணிகளைப்
பொறுக்குகிறாள்.செல்ல மறுக்கிறாள்.
போவாஸ்: அவளை அதட்ட வேண்டாம்.
அவளுக்குத் தேவையான அளவுக்கு
கோதுமை பணிகளைப் பொறுக்கி கொள்ளட்டும்.

சேவகன் : சாயங்காலம் வரை வேலை செய்கிறாள்.
போவாஸ்: அவளுக்கு உண்ண ஏதாவது
கொடுங்கள்.
சேவகன் போவாஸ் கொடுத்த உணவை
ரூத் திடம் கொடுத்தல்)

(நன்றி சொல்லியபடி ரூத் அங்கிருந்து வீடு 
திரும்புதல்)

 காட்சி 4

உறுப்பினர்கள்: நகோமி, ரூத்

ரூத் : இன்று வயலில் என்ன நடந்தது
என்று கேட்டீர்களா?

நகோமி: என்ன நடந்தது என்று சொன்னால் தானே தெரியும்.

ரூத் : வயலின் உரிமையாளர் போவாஸ் என்ற ஒரு மனிதர் வந்திருந்தார்.
மிகவும் நல்ல மனிதர்.
நகோமி : அப்புறம்

ரூத்: எவ்வளவு கோதுமை மணிகளை
வேண்டுமானால் பொறுக்கி கொள்ளட்டும்.
யாரும் மறுப்பு தெரிவிக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்.

நகோமி: குணவான் என்று சொல்.

ரூத்: ஆமாம்மா...நல்லவர்

நகோமி : நாளை வாற்கோதுமை தூற்றும் நாள்.
நீ அங்கு செல்.
போவாஸ் அங்கு இருப்பார்.

ரூத்: இருப்பாரா ?

நகோமி: அவர் களஞ்சியத்தில் மகிழ்ச்சியாக தூங்குவார்.
நீ அங்கு சென்று காலடியில் 
படுத்துக்கொள்.

ரூத் : அப்படியே செய்கிறேன்.


காட்சி 5

உறுப்பினர் கள்: ரூத், போவாஸ்

கோதுமை களஞ்சியத்தில் போவாஸ்
தூக்குதல் ரூத் அவர் காலடியில் படுத்துககொள்ளுதல்.
போவாஸ் : யாரது?

ரூத் : நான்தான் ரூத்.

போவாஸ் : என்ன இது... இந்த நேரத்தில்?
ரூத் :( மௌனமாக நின்றிருந்தாள்)
போவாஸ்: குணசாலியான பெண்.
உன்னைப் போன்ற ஒரு பெண்ணைத்தான்
தேடிக் கொண்டிருந்தேன்.
எனினும் என்னைவிட மேலானவர் ஒருவர்
இருக்கிறார்
அவரிடம் கேட்டு உன்னை திருமணம்
செய்து கொள்கிறேன்.

(ரூத் ஒத்துக்கொள்ள திருமணம் நடக்கிறது.)







.






















,

Comments

Popular Posts