பிறந்தநாள் வாழ்த்து


பிறந்தநாள் வாழ்த்து


சில்லென்று பூத்த 

செந்தாரையன்ன புன்சிரிப்போ!

செந்தமிழ் கொஞ்சி விளையாடு

பூங்காற்றன்ன நாவசைப்போ!

அமைதி குடியமர்த்தி

அழகு பார்க்குமிடம்  கனிமொழியோ

எல்லை வகுத்திடா 

வான்வெளிதான் நின் மதியோ!

கண்டிட கையில் 

வாழ்த்து மடலொன்று சுமந்து

கட்செவி அஞ்சலேறி வந்தேன்

வாழ்க ...பல்லாண்டு...பல்லாண்டு

பல்லாயிரம் ஆண்டு

எம் உள்ளங்களில் 

நிரந்தரக் குடியுரிமை கொண்டு !


 





Comments

Popular Posts