பணி நிறைவுப் பாராட்டு மடல்

பணி நிறைவுப் பாராட்டு மடல்


செந்தமிழ்ச் செல்வர் நிறை கூடங்குளம் வனப்பு

செவ்வியர் செல்வநாயகம் பாக்கியம் தாலசைப்பு

செவியில் முத்தையா  நாமமோதி வளர்த்த வளர்ப்பு

செந்தமிழ் உரமேற்றி மலர்ந்து நிற்பது பேருவப்பு!


அல்லியன்ன ரேணுகாவோடு கொண்டதோர் இணைப்பு

மல்லியன்ன மலர்ச்சிதரு பிள்ளைகளால் வந்தபூரிப்பு

நல்லியன்ன இல்லாள் வாழ்க்கையின் சிறப்பு

வல்லியாள் வனைந்ததால் வந்தது முதலிருப்பு!முதலடி ஷஹாஜிநகர்ப் பள்ளியில் கிடைத்த வரவேற்பு

ஈரடி சீத்தாகேம்ப்  பள்ளியில் தொடர்த் தடம்பதிப்பு

மூவடி நவாப்டேங்க் பள்ளி நிகழ்வெல்லாம் முத்தாய்ப்பு

நாலடி நாடறிய வைத்ததொரு நல்வாய்ப்பு!கலைகளின்  நினைப்பு அய்யாவின்  உயிர்த்துடிப்பு 

கலைக்கூடமாய் மாற்ற காட்டினார் பெரும்முனைப்பு   

தலையாயக் கற்பித்தலில் உண்டு அர்ப்பணிப்பு 

மலையாய்ப் பரிசுகள் குவித்தது இவரின் பேருழைப்பு!நாலேழு ஆண்டு நற்பணிக்கு மகுடம் பதிப்பு

நாளேடு புகழ  நல்லாசிரியர் விருது  முதற்சிறப்பு

ஏடேடெங்கும் படைப்பாளியின் கவி அணிவகுப்பு

ஏடாக வரலாற்றில் பேரெழுதிச் செல்லும் அரியவாய்ப்பு!


ஓய்வறியா உழைப்பால் வந்திடும் களைப்பு

ஓதிவைத்தவர் எவரோ  பணிநிறைவு வெறும்விடுப்பு

ஓர்ந்தறியா விடுவிப்பு தமிழ்ப்பள்ளிகளுக்குப் பேரிழப்பு

ஓயாது தமிழ்ப்பணியாற்றிடுக அதுதான் தங்களின் தனிச்சிறப்பு 


    -   செல்வபாய் ஜெயராஜ் 

 Comments

Popular Posts