பொங்கல் வாழ்த்து

பொங்கல் வாழ்த்து


வான்மகள் கடைக்கண் திறப்பால்

நிலமகள் கொண்ட  செழிப்பால்

தைமகள்  வந்தாள் பூரிப்பால்


உழவன் செய்த உழைப்பால்

கழனி எங்கும் பயிர் வனப்பால் 

கதர்கள் கண்ட மலைப்பால் 


தையல் உள்ளம் உவப்பால்

மையல் கொண்ட அன்பால்

மனையில் உண்டு மகிழ்ச்சி ப்


சுனையாகும் இன்பத் திருப்பால்

மனையில் ஓடட்டும் மகிழ்ச்சிப்பால்


சொல்லரும் பொருட் குவிப்பால்

நல்லறம் நடக்கட்டும் பேரன்பால்


பழையன மறவாப் பண்பால் 

பண்பாடு போற்றும் சிறப்பால்


தமிழ்ப்பால் கொண்ட விருப்பால்

அறத்துப்பால் மீதுள்ள ஈர்ப்பால்


பொருட்பால் கிடைத்த மலைப்பால்

இன்பத்துப்பால் நடக்கும் உள்ளன்பால்


இணைப்பால் கரம் குவிப்பால்

நாவும் இனிக்கட்டும் கரும்பால்


ஆதவன் சிரிப்பால் ஆவின்பால்

பொங்கட்டும் புத்தரிசி நுரைப்பால்


பொங்கலோ பொங்கல் இசைப்பால்

புவியெங்கும் ஒலிக்கட்டும் தமிழ்ப்பால்!
Comments

Popular Posts