வணங்குகிறேன் அம்மா


         கன்னிக் குடம் உடைத்து
         கன்னியெனப் பிறக்க வைத்து 
         கன்னி முத்தம் கன்னத்தில் தந்து
         கன்னித் தமிழ்மொழி் கற்பித்து
         கன்னிநடை பயிற்றுவித்து
         கன்னித்திங்கள் காட்டி சோறூட்டி
         கன்னி மதிழ்சூழ  முகம்
         கன்னிவிடாமல் பாதுகாத்த
         கன்னி இள ஞாழல் போன்ற உன்னை
         கன்னிப் பெயராம் அம்மா என்றழைத்து
         கன்னி நெக்குருகி எம்மோ எம்மோவென
         கன்னிமொழி பன்னி உரை தொடுத்து
         கன்னிமை கனித்தாரும் ஆரும் கொண்டு
         கன்னித்தாளடித் தொட்டு வணங்குகிறேன் அம்மா!

      அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகள்.
      

Comments

Popular Posts